சினிமாவுக்கு வந்த ஆர்.சுந்தர்ராஜனின் இரண்டு மகன்கள்.. இப்போ அவங்க நிலை என்ன தெரியுமா?..

நடிகர் ஆர்.சுந்தர்ராஜனை ஒரு காமெடி நடிகராக பலருக்கும் தெரிந்திருக்கலாம். ஆனால் ஒரு இயக்குனராக அவர் எவ்வளவு பெரிய ஆள் என்பது பலரும் தெரியாத விஷயங்களாகும்.

கிட்டத்தட்ட 25க்கும் அதிகமான திரைப்படங்களை இயக்கி பெரும்பான்மையான வெற்றியை கொடுத்தவர். இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜன். இவர் காமெடியனாக நடித்த திரைப்படங்களில் திருமதி பழனிச்சாமி, உன்னை நினைத்து மாதிரியான பல படங்கள் மிக பிரபலமானவை.

ஆர்.சுந்தர்ராஜன்:

அதே சமயம் இயக்குனராக அவர் இயக்கிய படங்களும் பிரபலமானவை ஆனால் அவையெல்லாம் இவர்தான் இயக்கினார் என்பது பலரும் அறியாத விஷயமாகும். முதன்முதலாக 1982ல் இவர் இயக்கிய திரைப்படம் பயணங்கள் முடிவதில்லை.

அந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. அதனை தொடர்ந்து வரிசையாக வாய்ப்புகளை பெற்ற சுந்தர்ராஜன் வைதேகி காத்திருந்தாள் அம்மன் கோவில் கிழக்காலே, மெல்ல திறந்தது கதவு, ராஜாதி ராஜா, எங்கிட்ட மோதாதே என்று எக்கச்சக்கமான வெற்றி திரைப்படங்களை கொடுத்திருக்கிறார்.

ஆனாலும் சொல்லப்போனால் இப்பொழுது இருக்கும் லோகேஷ் கனகராஜ் மாதிரியான இயக்குனர்களை விடவுமே ஒரு பெரிய வெற்றியை கொடுத்த இயக்குனர்தான் ஆர் சுந்தர்ராஜன்.  தொடர்ந்து சத்யராஜ், மோகன், விஜயகாந்த் மாதிரியான மூன்று நடிகர்களுக்கு அதிக வெற்றி படங்களை இவர் கொடுத்திருக்கிறார்.

இரண்டு மகன்கள்

இப்படி சினிமாவில் கொடிகட்டி பறந்தவராக இருந்தாலும் கூட அவரது மகன்களுக்கு சினிமாவில் என்ன நடந்தது என்பது முக்கியமான விஷயமாகும். மொத்தம் ஆர் சுந்தர்ராஜனுக்கு மூன்று மகன்கள். அதில் திலீப் சுந்தர்ராஜன் என்பவர் இயக்குனராக ஆசைப்பட்டு சினிமாவிற்குள் வந்தார்.

அதேபோல அசோக் சுந்தர்ராஜன் என்கிற இன்னொரு மகன் நடிகராக ஆசைப்பட்டார் தீபக் சுந்தர்ராஜன் தமிழில் முதன்முதலாக விஜய் சேதுபதியை வைத்து அனபல் சேதுபதி என்கிற திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படத்திற்கு ஓரளவு வரவேற்பு கிடைத்தது.

சினிமா வாய்ப்புகள்

அதனை தொடர்ந்து இவருக்கு தமிழில் கொஞ்சம் வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன என்று கூறப்படுகிறது. ஆனால் இரண்டாவது மகனான அசோக் சுந்தர்ராஜன் கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்று சித்திரையில் நிலாச்சோறு என்கிற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். அந்த திரைப்படம் பெரும் வெற்றியை கொடுக்கவில்லை. அதனை தொடர்ந்து அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காமல் இருக்கின்றன இதுதான் இவர்கள் இருவரின் தற்போதைய சினிமா நிலைமை என்று கூறப்படுகிறது.

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Comments are closed.
Exit mobile version