இளையராஜா பாட்டை முழு படமாக மாற்றிய இயக்குனர்..! விஷயம் தெரிஞ்சா தூக்கி வாரிப்போடும்..!

இசைஞானி இளையராஜா ஏழு பாடல்களை உருவாக்கி இருக்கிறார். அந்த ஏழு பாடல்களும் ஒரே படத்தில் இடம் பெற வேண்டும். இந்தப் பாடல்களுக்கு ஏற்றார் போல ஒரு கதையை எழுதி படமாக யாரால் எடுக்க முடியும்..? அப்படி படமாக எடுக்க முடியும் என்று கூறுபவர்களுக்கு என்னுடைய இந்த ஏழு பாடல்களையும் கொடுக்கிறேன் என்று சவால் விட்டு இருக்கிறார்.

இந்த தகவல் கோலிவுட் முழுதும் பரவுகிறது. இதனை கேட்ட பல இயக்குனர்கள் கதை எழுதி விட்டு அதற்கு ஏற்பாடு எழுதினால் தான் அது சரியாக இருக்கும். பாடலை எழுதி விட்டு அதற்கு ஏற்ப கதையை வடிவமைத்தால் அதில் பொருளே இருக்காது.. இது லாஜிக்கே கிடையாது என்று ஜகா வாங்கி இருக்கிறார்கள்.

ஆனால் ஒரே ஒரு இயக்குனர் மட்டும் அந்தப் பாடல்களை வைத்து படம் எடுக்க முன்வந்தார். மேலும், அந்த படத்தை வரலாற்று சிறப்புமிக்க ஹிட் படமாக கொடுத்திருக்கிறார் என்று கூறினால் உங்களால் நம்ப முடிகிறதா..?

ஆம் இப்படி ஒரு விஷயம் நம் தமிழ் சினிமாவில் நடந்திருக்கிறது. அந்த படத்தை இயக்கிய இயக்குனர் வேறு யாரும் கிடையாது இயக்குனரும் பிரபல நடிகருமான ஆர்.சுந்தரராஜன் தான்.

கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நடித்து கடந்த 1984-ம் ஆண்டு வெளியான வைதேகி காத்திருந்தாள் படம் தான் அந்த படம்.

இந்த படத்தில் இடம் பெற்ற ஏழு பாடல்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட கதை ஆகும். பொதுவாகபடத்தின் கதையை எழுதிவிட்டு கதையில் வரக்கூடிய சூழ்நிலைகளுக்கு ஏற்றார் போல பாடல்களை எழுதி வாங்குவது இயக்குனர்களின் வாடிக்கை.

ஆனால், முதன்முறையாக ஏற்கனவே பாடல்களை உருவாக்கிவிட்டு அதற்கு ஏற்ப கதையை அமைத்து அந்த கதையை வெற்றி படமாகவும் மாற்றிய காட்டி இருக்கிறார் இயக்குனர் சுந்தரராஜன் என்பது பலரும் அறிந்திடாத விஷயம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version