இதே கேள்வியை விஜய்க்கிட்ட ஏன் கேட்கல.. பத்திரிக்கையாளர்களை நேரடியாக கேட்ட நடிகை..!

தமிழ் சினிமாவில் சில நடிகைகள் அறிமுகமாகி சில காலங்கள் மட்டுமே சினிமாவில் இருந்துவிட்டு பிறகு காணாமல் போய்விடுவார்கள். ஏனெனில் கதாநாயகர்களாக நடிக்கும் நடிகர்களை விடவும் நடிகைகளுக்கு தான் அதிகமான போட்டிகள் சினிமாவில் இருந்து வருகிறது.

சினிமாவில் ஒவ்வொரு வருடமும் புது முக நடிகைகளாக நிறைய பேர் அறிமுகம் ஆகிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் நடிகர்களை பொருத்தவரை மிக அரிதாக எப்போதாவதுதான் நடிகர்கள் அறிமுகமாகின்றனர்.

விஜய்க்கிட்ட ஏன் கேட்கல

இதனால் நடிகைகள் தொடர்ந்து ஒரு 5 வருடம் சினிமாவில் வரவேற்பை பெற்று இருப்பது என்பதே கடினமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் 2002 ஆம் ஆண்டு சுந்தரா ட்ராவல்ஸ் திரைப்படம் மூலமாக மக்கள் மத்தியில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ராதா.

சுந்தரா டிராவல்ஸ் திரைப்படம் வெளியான சமயத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் மூலமாக ராதாவிற்கு வரவேற்பு கிடைத்தது ராதா ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த நடிகை ஆவார். அங்கே இவருக்கு வாய்ப்புகள் பெரிதாக கிடைக்கவில்லை என்கிற காரணத்தினால் தொடர்ந்து தமிழில் முயற்சி செய்து வந்தார்.

நேரடியாக கேட்ட நடிகை

இந்த நிலையில்தான் சுந்தரா டிராவல்ஸ் திரைப்படத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து 2002 ஆம் ஆண்டு கேம் என்கிற மற்றொரு திரைப்படத்தில் இவர் நடித்தார். இந்த திரைப்படம் தமிழில் வெளியான திரைப்படம் தான்.

ஆனால் இந்த படத்திற்கு பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து ஒரு வருடம் சுத்தமாக வாய்ப்பே இல்லாமல் இருந்து வந்தார் பிறகு சரத்குமார் நடித்த மானஸ்தன் திரைப்படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

ஓப்பன் கேள்வி

அதற்குப் பிறகும் கூட பெரிதாக வரவேற்பு என்பதை இவருக்கு கிடைக்கவில்லை. 2004 ஆம் ஆண்டு மானஸ்தன் திரைப்படத்தில் நடித்த பிறகு 2007 இல் அடாவடி என்கிற படத்தில் நடித்தார். தொடர்ந்து 2008 ஆம் ஆண்டு காத்தவராயன் என்கிற படத்தில் நடித்த பிறகு சுத்தமாக சினிமாவில் அவருக்கு வரவேற்பு என்பதே இல்லாமல் போய்விட்டது.

இந்த நிலையில் சமீபத்தில் மீண்டும் சினிமாவில் வாய்ப்பு கிடைத்து நடித்து வருகிறார். ராதா சமீபத்தில் இது குறித்து பேட்டி ஒன்றை கொடுத்திருந்தார் அந்த பேட்டியில் இவரிடம் கேள்வி கேட்ட பத்திரிகையாளர்கள் தொடர்ந்து தவறான முறையில் கேள்விகளை கேட்டு வந்தனர்.

ஆரம்பத்திலேயே அவரது உடல் எடை அதிகரித்திருப்பது குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது. அதைக் கூட அமைதியாக கடந்து விட்டார் நடிகை ராதா ஆனால் அடுத்த கேள்வியாக படத்தின் பெயர் ஆங்கிலத்தில் இருக்கிறது என்று கேட்டனர். இதற்கு பதிலளித்த ராதா பீஸ்ட், மாஸ்டர் மாதிரியான திரைப்படங்கள் வெளியான பொழுது விஜயிடம் இதே மாதிரியான கேள்விகளை கேட்டீர்களா என்னிடம் மட்டும் எதற்கு கேட்கிறீர்கள் என கேட்டுள்ளார் ராதா.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version