வாரிசு நடிகையான நடிகை ராதிகா எம் ஆர் ராதாவிற்கும் கீதாவிற்கும் பிறந்த முதல் மகள் ஆவார். தமிழ் திரை உலகில் பாரதிராஜாவின் மூலம் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட இவர் தனது அசாத்திய நடிப்பு திறனால் இன்று வரை தமிழ் திரை உலகில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டவர்.
கிழக்கே போகும் ரயில் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் சீரியல் தொடர்களையும் இயக்கியும், தயாரித்தும் இருக்கிறார். அந்த வகையில் இவர் சித்தி, அண்ணாமலை, செல்வி, அரசி, செல்லமே, வாணி ராணி போன்ற தொலைக்காட்சி தொடர்களில் அற்புதமாக நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தவர்.
நான் மூட மாட்டேன்.. நீயெல்லாம் ஒரு ப்ரொட்யூசரா..
ஆரம்பத்தில் கதாநாயகியாக நடித்த இவர் நாள் செல்ல செல்ல குணச்சித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். அந்த வகையில் இவர் சூரிய வம்சம், ஜீன்ஸ், ரோஜா கூட்டம், சகுனி, அமர்க்களம் போன்ற படங்களில் தனது அபார நடிப்பு திறனை வெளிப்படுத்தியிருக்கிறார்.
கிழக்கு சீமை திரைப்படத்தில் அண்ணன் தங்கைக்கு இடையே இருக்கும் பாசத்தை பக்குவமாக வெளிப்படுத்தியதை அடுத்து பாசமலருக்கு அடுத்த படமாக இந்த படம் பேசப்பட்டு ரசிகர்களின் மத்தியில் அதிக அளவு பாராட்டுதல்களை பெற்றிருக்கிறார்.
இந்நிலையில் போல்ட் லேடியாக சித்தரிக்கப்பட்டிருக்கும் நடிகை ராதிகா அண்மையில் பேட்டி ஒன்றில் பேசும் போது பேசிய விஷயம் பலரையும் சிந்திக்க வைக்க கூடிய வகையில் இருந்தது. அந்த பேட்டியின் போது அவர் தெலுங்கு படத்தில் ஷூட்டிங் பற்றி தான் கூறியிருக்கிறார். ஷூட்டிங் சமயத்தில் கையில் ஒரு தீப்பந்தத்தோடு நிற்க வேண்டும் அது தான் எடுக்கப்பட வேண்டிய ஷார்ட்.
இதனை அடுத்து பாம்பு ஒன்று வரும் அதன் வாய் தைக்கப்பட்டு விட்டது. எனவே கவலை கொள்ள வேண்டாம் என்று கூறினார்கள். இதனை அடுத்து ஷார்ட்டுக்காக நான் நின்று கொண்டிருக்க கூடிய வேளையில் ஒரு ஆயிரம் பாம்புகளை அப்படியே திறந்து விட்டார்கள்.
அப்போது நான் என்னென்ன பேசினேன் என்பதை இங்கு சொன்னால் என்ற படியே லேசாக சிரித்தார். இதை அடுத்து அவர் என்னென்ன பேசி இருப்பார் என்பதை பலரும் உணர்ந்து கொண்டார்கள்.
கெட்ட கெட்ட வார்த்தையில் கழுவி ஊத்திய ராதிகா..
அத்தோடு அந்த வார்த்தை எல்லாமே எடிட்டிங் கட் செய்யப்பட்டு விட்டதாக சொன்னதோடு மட்டுமல்லாமல் அவர் ஒரு நிமிடம் வாயை மூடு என்று சொன்னார். எனினும் நான் அதை காதில் வாங்கிக் கொள்ளாமல் நான் மூட மாட்டேன். நீ எல்லாம் ஒரு ப்ரொடியூசரா? என்று கெட்ட கெட்ட வார்த்தையில் கழுவி ஊற்றினேன்.
இதை அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் சிறந்து இடம் அந்தப் பெண்ணை வாயை மூடச் சொல்லுங்கள் என்று அனுப்பி வைத்தார். சிரஞ்சீவி வந்த உடனேயே நான் அந்த பாம்புகளில் இருந்து தப்பித்துக் கொள்ள அவர் முதுகில் ஏறிக்கொண்டேன்.
இப்படி நடந்த விஷயத்தை பேட்டியில் போட்டு உடைத்த ராதிகாவின் இந்த விஷயமானது தற்போது இணையம் எங்கும் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் அவர் மூட மாட்டேன் என்று சொன்ன விஷயமும் இதையெல்லாம் ஒரு ப்ரொடியூசர் செய்வாரா? என்று கேட்ட கெட்ட வார்த்தைகளும் ரசிகர்களின் மத்தியில் நக்கலாக பேசப்பட்டு வருகிறது.