பேய்க்கும் பேய்க்கும் சண்ட.. இத ஊரே வேடிக்கை பார்க்குது.. அப்படின்னு தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்துவிட்டு தமிழ் சினிமாவை மிரட்டிகிட்டு இருக்க நடிகர் ராகவா லாரன்ஸ் ( Raghava Lawrence ) பற்றி பலரும் அறிந்திடாத சுவாரஸ்மான தகவல்களை தான் இப்போ பாக்க போறோம்.
ராகவா லாரன்ஸ். இவருடைய உண்மையான பெயர் ராகவா முருகையன். இவர் 1976 இல் பிறந்திருக்கிறார். இவருடைய அம்மாவின் பெயர் கண்மணி. இவருடைய தம்பியின் பெயர் எல்வின். ராகவா லாரன்ஸ் இருக்கு சிறு வயதிலேயே மூளையில் கட்டி ஏற்பட்டு மிகப்பெரிய பிரச்சினையாக மாறியது.
இதனால் தொடர்ந்து படிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார் லாரன்ஸ். இதனை தொடர்ந்து அவருடைய தாய் கண்மணி ராகவேந்திரா சுவாமியிடம் தன்னுடைய மகனுக்கு இருக்கக்கூடிய இந்த பிரச்சனை எப்படியாவது சரியாகிவிட வேண்டும் என்று பிராத்தனை வைத்து அதற்கான சிகிச்சைகளை மேற்கொண்டு இருக்கிறார்.
ராகவேந்திராவின் அருளால் அவருக்கு இருந்த மூளைக்கட்டி பிரச்சனை முழுமையாக குணமானது. இதனால் ராகவேந்திராவின் தீவிர பக்தரானார் நடிகர் ராகவா லாரன்ஸ். இதனை தொடர்ந்து ராகவேந்திராவுக்கு கோயில் எழுப்பி வழிபாடு நடத்தி வருகிறார்.
இந்த கோயில் எங்கே இருக்கிறது தெரியுமா..? சென்னை அம்பத்தூரில் இருக்கிறது. ஒரு நடிகராக மட்டுமில்லாமல் ஒரு இயக்குனராகவும் பாடகராகவும் இசையமைப்பாளராகவும் நடன கலைஞராகவும் மட்டுமில்லாமல் சமூக ஆர்வலராகவும் பயணித்துக் கொண்டிருக்கிறார் ராகவா லாரன்ஸ்.
கடவுள்தான் நம்மை காப்பாற்றினார் என்று கடவுளுக்கு கோயில் கட்டி விட்டு மட்டும் செல்லாமல் தான் சிறுவயதில் எப்படி கஷ்டப்பட்டேனோ அதுபோல தற்போது வியாதியால் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் குழந்தைகளை தன்னால் முடிந்த உதவிகளை தவறாமல் செய்து வருகிறார்.
ராகவா லாரன்ஸ் இதற்காக தனி அறக்கட்டளை ஒன்று தொடங்கியும் நிர்வாகம் செய்து வருகிறார். இதுவரை 300க்கும் மேற்ப்பட்ட குழந்தைகளுக்கு ஓபன் ஹார்ட் சர்ஜரி செய்யவும் 200-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் அறுவை சிகிச்சை செய்யவும் உதவி செய்திருக்கிறார்.
இவர் முதல் முதலில் அறிமுகமான திரைப்படம் ஒரு தெலுங்கு திரைப்படம். அந்த திரைப்படத்தில் நடிக்கும் பொழுது இவருக்கு வயது வெறும் 22 தான். கிடைக்கக்கூடிய பட வாய்ப்புகளில் நடித்துக் கொண்டு காலத்தை தள்ளிக் கொண்டு இருந்த நடிகர் ராகவா லாரன்ஸுக்கு மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது முனி திரைப்படம்.
இந்த படத்தின் அடுத்தடுத்த பாகங்களை காஞ்சனா என்ற பெயரில் தொடர்ந்து இயக்கி வருகிறார். இந்த படங்களும் எளிமையாக 100 கோடி வசூல் என்ற இலக்கை எட்டி சாதனை படைக்கின்றன.
தாயிற்சிறந்த கோயில் இல்லை என்ற பழமொழிக்கு ஏற்ப தன்னை சிறுவயதில் பத்திரமாக பார்த்துக் கொண்ட தன்னுடைய தாய்க்கு நன்றி செலுத்தும் விதமாக கோயில் ஒன்றைக் கட்டி இருக்கிறார் ராகவா லாரன்ஸ்.
இந்த கோயிலை தன்னுடைய அப்பாவின் சொந்த ஊரான பூவிடுத்த வள்ளி என்ற ஊரில் கட்டிக் கொண்டிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இவருடைய அம்மாவின் திருவுருவ சிலையை ராஜஸ்தானில் உள்ள மிகவும் விலை உயர்ந்த கல்லை கொண்டு செதுக்கியுள்ளார்.
மூளை பிரச்சினையால் அவதிப்பட்டு வந்த என்னை எப்படி பார்த்துக் கொண்டார் என்னுடைய அம்மா.. என்று ஒரு புத்தகமே எழுதி இருக்கிறார் ராகவா லாரன்ஸ் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
இவருடைய மனைவியின் பெயர் லதா. இவர் ஒரு சோசியல் வொர்க்கர். தன்னுடைய கணவர் ராகவா லாரன்ஸின் அறக்கட்டளை செயல்பாடுகளை திறம்பட நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்று நடத்தி வருகிறார்.
நடிகர் ராகவா லாரன்ஸும் தன்னுடைய படங்கள் பட வெளியீடு ஆகியவற்றை பற்றி தன்னுடைய மனைவியுடன் முதலில் கலந்தாலோசித்த பிறகு தான் முடிவை எடுப்பாராம்.
இந்த அழகான தம்பதிக்கு ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது. அவருடைய பெயர் ராகவி. தற்போது படித்துக் கொண்டிருக்கும் அவர் எதிர்காலத்தில் ராகவா லாரன்ஸின் அறக்கட்டளையின் நிர்வாகிக்கும் பொறுப்பை ஏற்க இருக்கிறார்.
லாரன்ஸின் தம்பியின் பெயர் எல்வின். இவர் காஞ்சனா 2 படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு ராகவா லாரன்ஸ் உடன் வந்து ஆட்டம் போட்டிருப்பார். ஒரு நல்ல கதைக்காக காத்திருக்கும் இவர் விரைவில் திரைப்படங்களிலும் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.