முட்டாள்தனமா எடுத்த முடிவு.. இப்ப படுத்த படுக்கையான தமிழ் நடிகை.. இந்த நடிகைக்கா இந்த நிலைமை?.

சினிமாவைப் பொறுத்தவரை இங்கு தொடர்ந்து தனக்கான இடத்தை ஒரு நடிகை பிடித்து வைத்துக் கொள்வது என்பது மிகவும் கடினமான ஒரு விஷயமாக இருக்கிறது.

ஏனெனில் சினிமாவில் நடிகர்களை விடவும் நடிகைகளுக்கான போட்டி என்பது எப்பொழுதுமே அதிகமாக இருந்து வருகிறது. ஒவ்வொரு வருடமும் மிக அரிதாகதான் புதுமுக கதாநாயகர்கள் அறிமுகம் ஆவார்கள். ஏனெனில் புதிதாக அறிமுகமாகும் நடிகர்களை நம்பி பணம் செலவு செய்யும் தயாரிப்பாளர்கள் மிக குறைவுதான்.

ஆனால் நடிகைகளுக்கு அந்த பிரச்சனை கிடையாது ஒரு வருடத்தில் நிறைய நடிகைகள் புதுமுக நடிகைகளாக அறிமுகமாவதை பார்க்க முடியும் ஏனெனில் நடிகையை பார்ப்பதற்காக யாரும் சினிமாவிற்கு வருவது கிடையாது.

முட்டாள்தனமா எடுத்த முடிவு

இதனால் குறைந்த சம்பளத்தில் புது நடிகைகள் நடிக்கிறார்கள் என்று புது நடிகைகளை தொடர்ந்து படங்களில் நடிக்க வைக்க முக்கிய காரணமாக இருக்கிறது. இப்படியான நிலைமையில் தமிழ், தெலுங்கு என்று இரண்டு மொழிகளிலும் தனக்கென தனி இடத்தை பிடித்து வைத்திருந்தார் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.

தெலுங்கில் முதன்முதலாக அறிமுகமாகி அதிக வரவேற்பு பெற்றார் பிறகு தமிழிலும் அவருக்கு வரவேற்பு கிடைத்தது. தமிழில் அவர் நடித்த திரைப்படங்களில் தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படம் மிக முக்கியமான படமாகும்.

படுத்த படுக்கையான தமிழ் நடிகை

அந்த திரைப்படம் முழுக்கவே பார்ப்பதற்கு மிக அழகாக இருப்பார். ஸ்பைடர் திரைப்படத்திலும் மிகவும் அழகாக இருப்பார் இந்த இரண்டு திரைப்படங்களுக்கு பிறகு அவர் கார்ப்பரேட் லுக்கில் நடித்த திரைப்படங்கள் எல்லாம் அவருக்கு தமிழில் தோல்வியை பெற்று கொடுத்தன.

அதற்கு பிறகு தமிழில் அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை தேவ் மற்றும் என்.ஜி.கே ஆகிய இரண்டு திரைப்படங்கள்தான் அவரது தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்தது. இந்த நிலையில் சமீபத்தில் உடல் நல பிரச்சனையின் காரணமாக ஆறு நாட்களாக படுத்த படுக்கையாக இருக்கிறார்.

அதற்கு காரணம் என்னவென்றால் திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து அதிக உடற்பயிற்சி செய்து வந்தார் ரகுல் ப்ரீத் சிங். இந்த நிலையில் சமீபத்தில் 80 கிலோ எடையை யாருடைய உதவியும் இல்லாமல் தூக்கி இருக்கிறார் அதனால் அவருடைய முதுகு எலும்பில் பாதிப்பு ஏற்பட்டு தற்சமயம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version