டேய் பாலா.. “எப்போ அவுத்து போட்டா.. நல்லாருக்கும்..” மூணு வருஷம் நடிகை அனுபவித்த கொடுமை..!

கருத்தம்மா என்ற படத்தில் கருத்தம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை மெய்ஷா அஃதாஃப்.. திரைப்படங்களில் நடிப்பதற்காக தன்னுடைய பெயரை ராஜஸ்ரீ என்று மாற்றிக் கொண்டார்.

பல்வேறு திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இவர் இயக்குனர் பாலா இயக்கத்தில் சேது திரைப்படத்திலும், நந்தா திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதில் குறிப்பாக சேது திரைப்படத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவராக நடித்திருந்தார். இந்த படத்தில் இவர் படப்பிடிப்பில் நுழையும் போது என்ன ஆடை கொடுக்கப்பட்டதோ.. அதே ஆடையை தான் மூன்று வருடங்கள் அணிந்திருக்கிறார் நடிகை ராஜஸ்ரீ.

இதனை துவைப்பதற்கு கூட இயக்குனர் பாலா அனுமதிக்கவில்லை என்று கூறி இருக்கிறார் நடிகை ராஜஸ்ரீ. அவர் கூறியதாவது, அந்த படப்பிடிப்பின்போது டேய் பாலா.. எப்படா இந்த படப்பிடிப்பை முடிப்ப.. எப்போடா எனக்கு இந்த சட்டையிலிருந்து விடுதலை கிடைக்கும்.. எப்போ அவுத்து போட்டா.. நல்லா இருக்கும் என்று ஒவ்வொரு நாளும் நினைத்துக் கொண்டே இருந்தேன் என கூறியிருக்கிறார்.

மூன்று ஆண்டுகளாக துவைக்காத சட்டையை நான் அணிந்திருந்த கொடுமை எனக்கு நடந்தது. படப்பிடிப்பு தளத்தில் மூன்று ஆண்டுகளாக துவைக்காத சட்டையை போட்டு இருக்கும் நடிகை என்று இதனை கின்னஸ் ரெக்கார்ட் ஏதாவது சாதனை பட்டியலில் சேர்க்கலாமா என்றெல்லாம் கூட நாங்கள் அந்த நேரத்தில் யோசித்து கொண்டு இருந்தோம்.

ஆனால், அப்போது அதைப்பற்றி பெரிதாக எங்களால் வெளியே செல்ல முடியவில்லை. ஆனால் இன்று சமூகவலைதளங்கள் இருக்கின்றன. சேது படம் வெளியான போது இதனை கூறியிருந்தால் எல்லோரும் சிரித்து இருப்பார்கள்.

இருந்தாலும், அந்த அளவுக்கு நான் கஷ்டப்பட்டு அந்த படத்தில் நடித்து முடித்தேன். படப்பிடிப்பின் கடைசி நாள் என்று படக்குழுவில் யார் மகிழ்ச்சியாக இருந்தாங்களோ.. இல்லையோ.. நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன்.. அந்த சட்டையிலிருந்து எனக்கு விடுதலை கிடைத்துவிட்டது என்று எண்ணி.. என பேசி இருக்கிறார் நடிகை ராஜஸ்ரீ.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam