இத மட்டும் போட்டுக்கிட்டு.. ஸ்டார் ஹோட்டலில் ரஜினி மற்றும் விஜயகாந்த்  செய்த சம்பவம்..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிகர் சங்க கலை நிகழ்ச்சிக்காக சிங்கப்பூர் சென்றபோது அந்த ஹோட்டலில் வெறும் துண்டோடு அங்கும் இங்கும் அலைந்த விஷயம் பற்றி காஜா பேட்டியில் பகிர்ந்து கொண்ட விஷயம். 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கண்டக்டராக இருந்து இன்று இந்திய அளவில் தனக்கு என்று ஓர் தனி இடத்தை பிடித்திருக்கும் மிகச் சிறந்த நடிகராக விளங்குகிறார். இந்த 70 வயதிலும் அடுத்தடுத்து படங்களில் நடித்து அனைவருக்கும் இன்ஸ்பிரேஷன் ஆக இருக்கிறார். 

அந்த வகையில் எளிமைக்கும் பெயர் போன நடிகர் ரஜினிகாந்த், விஜயகாந்த் நடிகர் சங்க தலைவராக இருக்கும் போது நடிகர் சங்க கடனை அடைக்க நடந்த நட்சத்திர கலை விழா ஒன்றை சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் ஏற்பாடு செய்திருந்தார்கள். 

இத மட்டும் போட்டுக்கிட்டு..

அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரஜினிகாந்த் மலேசியாவில் கலை நிகழ்ச்சி முடித்துவிட்டு சிங்கப்பூர் செல்ல வேண்டும் என்ற விமானத்தில் சென்றால் செலவு அதிகரிக்கும். எனவே பேருந்து செல்லலாம் என்று திட்டமிட பலரும் அதை வேண்டாம் என்று சொன்னார்கள். 

அந்த சமயத்தில் ரஜினிகாந்த் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேருந்தில் ஏறி அமர்ந்துவிட ரஜினியே பேருந்து பயணம் செய்ய ஏறிவிட்டார். இனி நாம் என்ன சொல்வது என்று தயங்கிய அத்தனை பேரும் பேருந்தில் பயணம் செய்து சிங்கப்பூர் நோக்கி சென்றார்கள். 

அந்த சமயத்தில் ஒவ்வொரு பேருந்திலும் ரஜினி இறங்கி மற்றவர்களை உற்சாகப்படுத்தி வந்த சூழ்நிலையில் இறுதியாக பேருந்து சிங்கப்பூரை அடைந்து அவர்கள் தங்க வேண்டிய ஹோட்டலுக்கு போய் சேர்ந்தது. 

இதைத்தொடர்ந்து ரஜினிகாந்த் வெறும் தூண்டோடு அந்த கோட்டலில் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருப்பதை தயாரிப்பாளர் காஜா பார்த்து ஏன் இப்படி அங்கும் இங்கும் சூப்பர் ஸ்டார் அலைக்கிறார் என்று யோசித்து இருக்கிறார்.

ஸ்டார் ஹோட்டலில் ரஜினி மற்றும் விஜயகாந்த்  செய்த சம்பவம்..

மேலும் அவர் பொறுக்க முடியாமல் நேரடியாகவே ரஜினியிடம் சென்று ஏன் வெறும் தொண்டை கட்டிக்கொண்டு அங்கும் இங்கும் செல்லுகிறீர்கள் என்று கேட்க நான் மாறி மாறி மற்றவர்களை உற்சாகப்படுத்த பேருந்தில் ஏறி வந்ததை அடுத்து என்னுடைய சூட்கேஸ் எங்கு சென்றது என்று தெரியவில்லை. 

எனவே தான் துணி மாற்ற துணி இல்லாமல் துண்டைக் கட்டிக் கொண்டு இங்கும் அங்கும் அலைகிறேன் என்று சொன்னவுடன் நான் வேண்டுமென்றால் அந்தப் பெட்டியை எடுத்து வருகிறேன் என்று சொல்லி இருக்கிறார். 

இதற்கு ரஜினிகாந்த்தோ நீங்கள் சிரமப்பட வேண்டாம். நான் விஜயகாந்திடம் சொல்லிவிட்டேன் அவரின் வேட்டி சட்டையை எனக்கு தந்து விடுவார், நான் அதை போட்டுக் கொண்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறேன் என்று கூறினார். 

மிகப்பெரிய சூப்பர் ஸ்டார் ஆக இருந்தாலும் அந்த இடத்தில் எளிமையை கடைப்பிடித்து அனைவரையும் ஒன்று சேர்த்ததோடு தானும் எப்போதும் அப்படி தான் எதார்த்தமாக இருப்பார் என்பதை தனக்கு புரிய வைத்ததாக பேட்டி ஒன்றில் காஜா கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

Summary in English: When it comes to the Tamil film industry, two names that always steal the spotlight are Rajinikanth and Vijayakanth. They made waves at the Singapore Actors Show, bringing their unique charm and charisma to the stage. Fans were thrilled to see these legendary actors sharing the limelight, showcasing their iconic styles and larger-than-life personas.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam