இயக்குனர் பேரரசிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து அதன் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனரானவர் இயக்குனர் வெங்கட் பிரபு. இசையமைப்பாளரும் இயக்குனருமான கங்கை அமரனின் மகன் என்றாலும் கூட அதை பயன்படுத்தி சினிமாவிற்குள் வராமல் மற்ற இயக்குனர்களைப் போலவே உதவி இயக்குனர்களாக பணிபுரிந்து அதன் மூலமாக வாய்ப்பை பெற்று சினிமாவிற்கு வந்தவர் வெங்கட் பிரபு.
வெங்கட் பிரபு இயக்கிய முதல் படம் சென்னை 28. காமெடி கதை களத்தை கொண்ட அந்த திரைப்படம், மேலும் எந்த ஒரு பெரிய கதாநாயகனையும் வைத்து எடுக்கப்படாத படம் என்றாலும் கூட அது ஒரு பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது.
ஒழுங்கு மரியாதையா இருந்துக்க
அதன் மூலமாக வெங்கட் பிரபு தமிழ் சினிமாவில் மிக முக்கியமான ஒரு இயக்குனராக மாறத் துவங்கினார். அதற்கு அடுத்த கட்டமாக அவரை பெரிய இயக்குனராக மாற்றிய திரைப்படம் மங்காத்தா. இந்த திரைப்படத்தில் முழுக்க முழுக்க வில்லன் கதாபாத்திரத்தில் அஜித்தை நடிக்க வைத்து சிறப்பான ஒரு திரைப்படத்தை உருவாக்கி இருந்தார் வெங்கட் பிரபு.
இந்த நிலையில் தற்சமயம் அவர் நடிகர் விஜய்யை வைத்து கோட் திரைப்படத்தை எடுத்து பெரும் வெற்றியும் கொடுத்திருக்கிறார். இந்த திரைப்படம் 400 கோடியை தாண்டி வெற்றி கொடுத்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமே அறிவித்து இருக்கிறது.
வெங்கட் பிரபுவை மிரட்டிய படக்குழு
இந்த நிலையில் ஆரம்ப காலகட்டங்களில் ஒரு நடிகருடன் சேர்ந்து புகைப்படம் எடுப்பதற்கு தான் பட்ட கஷ்டங்களை ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார் வெங்கட் பிரபு ஒரு முறை கமலும் ரஜினியும் ஒன்றாக நின்று கொண்டிருந்த மேடையில் நான் போய் ஏறி நின்றேன்.
அவர்களோடு சேர்ந்து நின்று ஒரு போட்டோ எடுத்தால் போதும். போட்டோ எடுத்தால் போதும் என்பதை எனது எண்ணமாக இருந்தது. அப்போது என்னை பார்த்த ரஜினி சார் உடனே என்னை பக்கத்தில் அழைத்து அவரது தோளில் எனது கையை போட சொன்னார்.
நான் மாட்டேன் என்று கூறினேன் ஆனால் கேட்காமல் அவர் எனது கையை பிடித்து அவரது தோளில் போட்டார். உடனே அங்கு நின்றவர்கள் மரியாதையா நடந்துக்க என்னை சத்தம் போட துவங்கினார்கள். இருந்தாலும் ரஜினி உடனே அவர்களிடம் கையை காட்டி அமைதியாக இருக்கும் படி கூறிவிட்டு என்னை தோளில் கையை போட சொல்லி அந்த புகைப்படத்தை எடுத்தார். அது என் வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்வு என்று கூறியிருக்கிறார் வெங்கட் பிரபு.