நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் மிகப்பெரும் உயரத்தை தொட்ட ஒரு நடிகர் என்று கூறவேண்டும். அப்படி இருந்துமே கூட ரஜினிகாந்த் சின்ன சின்ன விஷயங்களுக்கு கோபித்துக்கொண்டு கலாட்டா செய்யக் கூடியவராக இருந்தார்.
அதுதான் ரஜினிகாந்தின் நேர்மறையான விஷயம் என்றும் கூற வேண்டும் பெரிய நடிகர் என்று ரஜினிகாந்த் எப்போதுமே தன்னை கருதுவது கிடையாது. இப்போது கூட இளம் இயக்குனர்கள் திரைப்படங்களில் ரஜினிகாந்த் நடிக்க முடிகிறது என்றால் அதற்கு காரணம் அதுதான்.
அந்த நடிகைக்கு மட்டும் சலுகை
கார்த்திக் சுப்புராஜ், லோகேஷ் கனகராஜ் மாதிரியான இயக்குனர்கள் படங்களில் நடிக்கும் பொழுது கூட ரஜினிகாந்த் தனக்கு ஏற்ற மாதிரி காட்சியை மாற்றி அமைப்பது கிடையாது. அவர்கள் வைக்கும் காட்சியில் ரஜினிகாந்த் நடிக்கிறார்.
அதனால்தான் அந்த படங்கள் எப்பொழுதும் சிறப்பாக வந்து கொண்டு இருக்கின்றன. இந்த நிலையில் ரஜினிகாந்த் சின்ன சின்ன காட்சிகளில் அவருக்கு பிடித்த சில விஷயங்களை எப்பொழுதுமே செய்வது உண்டு. அப்படியாக அண்ணாமலை திரைப்படத்தில் ஒரு சம்பவம் நடந்து இருக்கிறது.
நான் என்ன தக்காளி தொக்கா
அண்ணாமலை திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை குஷ்பூ. குஷ்பூவிற்க்கும் ரஜினிக்கும் நல்ல நட்பு உண்டு. அண்ணாத்த திரைப்படத்தில் கூட குஷ்பூ ரஜினியுடன் நடித்திருப்பதை பார்க்க முடியும்.
இந்த நிலையில் அண்ணாமலை திரைப்படத்தில் நடிக்கும் பொழுது குஷ்புவிற்கு என்று பாடல் ஒன்று படத்தில் வைக்கப்பட்டது. கொண்டையில் தாழம்பூ என்கிற அந்த பாடலில் குஷ்புவின் பெயர் இடம் பெரும் வகையில் பாடல் இருந்தது.
ரஜினியை கடுப்பேத்திய இயக்குனர்
இந்த நிலையில் இந்த பாடலை கேட்டு ரஜினிகாந்த் உடனே அப்பொழுது கோபமாகிவிட்டாராம். குஷ்புவுக்கு பெயர் வைத்து மட்டும் பாடலை வைத்திருப்பீர்கள் எனது பெயர் எங்கே என்று கேட்டிருக்கிறார். அந்த பாடலுக்கு பாடல் வரிகளை எழுதியவர் கவிஞர் வாலி.
அவர் இந்த விஷயத்தை கேட்டு அன்று முழுவதும் சிரித்துக்கொண்டே இருந்தாராம் பிறகு ரஜினிகாந்த் கோபித்துக் கொண்டார் என்று அவரிடம் சென்று நான் பாடல் வரிகளை உங்களுக்காக மாற்றுகிறேன். பாடலில் குஷ்பூவுக்கு பிறகு உங்கள் பெயரும் வரும் என்று கூறியிருக்கிறார் வாலி அதற்கு பிறகு தான் ரஜினிகாந்த் சமாதானம் அடைந்தாராம் இந்த விஷயத்தை வாலி ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார்.