சூப்பர் ஸ்டார்னு யாருன்னு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும் என்ற பாடல் வரிகள் உங்களுக்கு நினைவில் இருக்கலாம். அந்த வகையில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளி வந்த முத்து திரைப்படம் பற்றி உங்களுக்கு சொல்ல வேண்டியது இல்லை.
மேலும் இந்த படத்தில் சீரும் சிறப்புமாக ரஜினிகாந்த் நடித்திருக்கிறார். அத்துடன் இந்த படமானது வசூல் ரீதியாக வெற்றி படமாக அமைந்து ரசிகர்களின் மத்தியில் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் படமாக இருந்தது.
முத்து திரைப்படம்..
1995-ஆம் ஆண்டு தமிழில் வெளி வந்த முத்து திரைப்படத்தை கே எஸ் ரவிக்குமார் இயக்க இந்த படத்தில் ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார்.
இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக கண்ணழகி மீனா நடிக்க ரகுவரன், சரத்பாபு, ராதாரவி, செந்தில், வடிவேலு போன்ற மிகப் பெரிய நட்சத்திர பட்டாளம் இந்த படத்தில் நடித்ததை அடுத்து ஆஸ்கார் நாயகன் ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார்.
மலையாள படத்தின் மையக்கருவை கொண்டு இருக்க கூடிய இந்த திரைப்படத்தைப் பற்றி பல்வேறு பேட்டிகளில் இதன் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் பேசியது கூட உங்கள் நினைவில் இருக்கலாம்.
மேலும் இந்த படம் 1996 -ஆம் ஆண்டு தமிழக அரசின் திரைப்பட விருதுகளில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு சிறந்த நடிகருக்கான விருதை பெற்று தந்தது.
அத்துடன் இந்த திரைப்படமானது ஜப்பான் மொழியில் வெளி வந்த முதல் இந்திய திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
ஊர்வசி நடிக்க கூடாதுன்னு ரஜினி சொன்னாரு..
கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளி வந்த திரைப்படத்தைப் பற்றி பெரிய அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அது போலவே உதவி இயக்குனர் ரமேஷ் கண்ணா குறித்து உங்களுக்கு மிக நன்றாக தெரிந்து இருக்கும்.
இவர் கே எஸ் ரவிக்குமார் படங்களில் அதிக அளவு நடித்து இருப்பது உங்களுக்கு நினைவில் இருக்கலாம். இதனை அடுத்து பிரபல youtube சேனல் ஒன்றுக்கு ரமேஷ் கண்ணா பேட்டி ஒன்றினை கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
இதற்குக் காரணம் முத்து படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் போது அந்த படத்தில் நடிகை ஊர்வசி நடிக்கவே கூடாது என்பதில் உறுதியாக இருந்ததோடு மட்டுமல்லாமல் அதை ஊர்வசிக்கே போன் செய்து சொல்லியதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
இதற்கு காரணம் முத்து திரைப்படத்தில் சரத் பாபுவுக்கு ஜோடியாக வரும் ராதாவின் மகள் கதாபாத்திரமான பத்மினி கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது நடிகை ஊர்வசி தான்.
ரமேஷ் கண்ணா பேச்சு..
எனவே தான் அவரை இந்த படத்தில் நடிக்க வைத்தால் நன்றாக இருக்கும் என ரமேஷ் கண்ணா உள்ளிட்ட பல உதவி இயக்குனர்கள் முடிவு செய்து அதை இயக்குனர் கே எஸ் ரவிக்குமாரிடம் கூறி ஓகே செய்து வைத்திருந்தார்கள்.
இந்நிலையில் இந்த விஷயத்தை அறிந்து கொண்ட ரஜினிகாந்த் ஊர்வசி அப்போது தான் நன்கு வளர்ந்து வரக்கூடிய நிலையில் இது போன்ற கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க வேண்டாம் என்று முடிவு செய்து பட குழுவினர் திட்டவட்டமாக கூறியதோடு மட்டுமல்லாமல் ஊர்வசிக்கும் போன் செய்து பக்குவமாக கூறியிருக்கிறார்.
எனவே இந்தப் படத்தில் ஊர்வசி நடிக்கவில்லை என யாரும் அறியாத விஷயத்தை ரமேஷ் கண்ணா தற்போது பேட்டியில் தெரிவித்து இருப்பது சினிமா உலகத்தில் பல்வேறு வகையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.