எனக்காக எழுதுன கதை அந்த படம்.. ரஜினி வன்மம் தீர்க்க இதுதான் காரணம்.. வீடியோ வெளியிட்ட ரஜினிகாந்த்..!

மாபெரும் பட்ஜெட்டில் உருவாகும் திரைப்படங்களுக்கு எப்பொழுதுமே தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அதிக பட்ஜெட் என்பதே ஒரு திரைப்படத்திற்கு தனியாக ஒரு மார்க்கெட்டை உருவாக்கி விடும். அந்த வகையில் தற்சமயம் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்த திரைப்படம் கங்குவா திரைப்படம்.

இந்த மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்படுத்தி இருக்கும் ஒரு திரைப்படம் என்று கூறலாம். இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரித்து இருக்கிறார். ஏற்கனவே வெளியான தங்கலான் திரைப்படத்தையும் ஞானவேல் ராஜாதான் தயாரித்து இருந்தார்.

எனக்காக எழுதுன கதை அந்த படம்

ஞானவேல் ராஜாவை பொறுத்தவரை தற்சமயம் தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து அவற்றை தயாரித்து வருகிறார் தங்கலான் திரைப்படம் அவருக்கு ஆவேரேஜான வெற்றியைதான் பெற்றுக் கொடுத்தது.

இந்த நிலையில் கங்குவா திரைப்படத்தைதான் ஞானவேல் ராஜா மலைபோல் நம்பி இருக்கிறார். கங்குவா திரைப்படத்தின் கதைகளமுமே சிறப்பாக இருப்பதாக படத்தை பார்த்த சினிமா பிரபலங்கள் சிலர் கூறி வருவதை பார்க்க முடிகிறது.

ரஜினி வன்மம் தீர்க்க இதுதான் காரணம்

அந்த அளவிற்கு இதுவரை தமிழில் வராத ஒரு மாறுபட்ட கதையை படமாக்கி இருக்கின்றனர். இந்த நிலையில் கடந்த அக்டோபர் 10ஆம் தேதி தான் கங்குவா திரைப்படம் திரைக்கு வர இருந்தது. ஆனால் அந்த தேதியில் ரஜினிகாந்த் நடிக்கும் வேட்டையன் திரைப்படம் வெளியாக இருந்தது.

வேட்டையின் திரைப்படத்திற்கு முன்பே கங்குவா பட குழு அக்டோபர் 10ஆம் தேதி தங்களுடைய திரைப்படம் வரும் என்று அறிவித்திருந்தனர். இருந்தாலும் கேட்காமல் ரஜினிகாந்த் அதே அக்டோபர் பத்தாம் தேதி வேட்டையன் திரைப்படத்தை வெளியிட்டார்.

வீடியோ வெளியிட்ட ரஜினிகாந்த்

இதனால் கங்குவா குழு படத்தின் வெளியீட்டு தேதியை மாற்றி வைத்தனர். வருகிற நவம்பர் 14ஆம் தேதி கங்குவா திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில்  கங்குவா இசை வெளியீட்டு விழாவில் ஒரு காணொளி ஒன்றை அனுப்பி இருந்தார் ரஜினிகாந்த்.

அதில் அவர் பேசும் பொழுது அண்ணாத்த திரைப்படம் உருவாகும் பொழுதே எனக்கும் சேர்த்து சிவாவுக்கும் இடையே நல்ல பழக்கம் உண்டு. அப்பொழுதே சிறுத்தை சிவாவிடம் வரலாறு ரீதியான ஒரு திரைப்படத்தை நீங்கள் இயக்க வேண்டும் அதில் நான் நடிக்க வேண்டும் என்று கூறியிருந்தேன்.

அப்படி அவர் எழுதிய கதைதான் கங்குவா. எனவே கங்குவா எனக்காக எழுதிய கதை என்று கூறியிருக்கிறார் ரஜினிகாந்த். இந்த நிலையில் ரஜினிக்காக எழுதிய கதையில் சூர்யாவை நடிக்க வைத்த காரணத்தினால்தான் அவர் தற்சமயம் அக்டோபர் பத்தாம் தேதி வேண்டும் என்றே தனது படத்தை வெளியிட்டாரா? என்று இது குறித்து மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam