என்ன பத்தி அப்படி சொன்னா ஊரே சிரிக்கும்..! வதந்தியை கிளப்பாதீங்க.. மூஞ்சில் அடிச்ச மாதிரி கூறிய ரஜினி.!

தொடர்ந்து தமிழில் வெற்றி படங்களாக கொடுத்து வரும் நடிகராக அனைவராலும் அறியப்படுபவர் ரஜினிகாந்த். பெரும்பாலும் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸ் வெற்றியை கொடுத்து வருகின்றன.

கிட்டத்தட்ட 50 வருடங்களாக தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கி அதில் சூப்பர் ஸ்டார் என்கிற பெயருக்கு தகுந்தார் போல இருந்து வருகிறார் ரஜினிகாந்த். அதேபோல தமிழ் சினிமாவில் கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் துவங்கி இதுவரை சினிமாவில் வந்திருக்கும் அனைத்து தொழில்நுட்பங்களிலும் நடித்த ஒரே நடிகர் ரஜினிகாந்த் மட்டும்தான்.

அப்படி சொன்னா ஊரே சிரிக்கும்

அந்த அளவிற்கு அவருடைய மார்க்கெட் என்பது சினிமாவில் குறையாமல் இருந்து வருகிறது. சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் வேட்டையன் திரைப்படம். இது எதிர்பார்த்ததை விடவும் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

வெளியான 11 நாட்களிலேயே 350 கோடி வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது வேட்டையன் திரைப்படம். இந்த திரைப்படம் கோட் திரைப்படத்தின் வசூலை தாண்டி ஒரு வசூலை கொடுக்கும் என்பது ரஜினி ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.

வதந்தியை கிளப்பாதீங்க

ரஜினிகாந்த்தை பொருந்தவரை அவர் சினிமாவில் அறிமுகம் ஆகி வளர்ந்த பெரிய நடிகரான பிறகு தொடர்ந்து அவரைக் குறித்து ஒரு விஷயம் கூறப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் மிகவும் எளிமையானவர் என்பதுதான் அது. பெரும்பாலும் நடிகர்கள் வயதான பிறகு இசை வெளியீட்டு விழாவில் துவங்கி விருது வழங்கும் விழா வரைக்கும் எதற்கு வந்தாலும் முழுவதுமாக மேக்கப் செய்து கொண்டுதான் வருவார்கள்.

நிஜத்தில் அவர்களுடைய வயது என்னவென்று கணிக்க முடியாது. ஆனால் ரஜினிகாந்த் மட்டும்தான் எந்தவித முக அலங்காரமும் இல்லாமல் பேட்டிகள் விழாக்களுக்கு வருகை தருவார். அதனாலேயே தொடர்ந்து ரஜினிகாந்த் எளிமையானவர் என்று பேச்சுக்கள் இருந்தன.

மூஞ்சில் அடிச்ச மாதிரி கூறிய ரஜினி

இதனை முறியடிக்கும் வகையில் ஒரு பேட்டியில் ரஜினிகாந்த் கூறும் பொழுது நான் என்றுமே எளிமையாக இருந்தது கிடையாது. எந்த ஒரு விழாவுக்கும் நான் விலை உயர்ந்த காரில்தான் வருகிறேன் அதேபோல நட்சத்திர ஹோட்டல்களில் மட்டும் தான் நான் தங்குகிறேன்.

மிகப்பெரிய வீடு ஒன்று கட்டி வைத்திருக்கிறேன் இதில் எந்த இடத்தில் என்னை எளிமையாக பார்த்தார்கள் என்று தெரியவில்லை எங்க பார்த்தாலும் எப்போதும் நான் எளிமையாக இருக்கிறேன் என்று கூறுகிறார்கள் என்று அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்து பேசி இருந்தார் ரஜினிகாந்த்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version