வாய்க்கு வந்ததை பேசலாமா ? ரஜினி பேச்சால் கடுப்பான ஷங்கர்..! வாயை விட்டு சிக்கலில் சிக்கிட்டீங்களே.!

ஆக்ஷன் திரைப்படங்களில் நடிக்கும் நடிகர்களை பொருத்தவரை அவர்கள் திரைப்படங்களின் வெற்றி என்பதே நிர்ணயிக்க முடியாததாகதான் இருக்கும்.

பெரும்பாலும் ஆக்ஷன் ஹீரோக்கள் நடிக்கும் திரைப்படங்கள் நல்ல வெற்றியை கொடுத்து வந்தாலும் சில படம் அவர்களுக்கு தோல்வியை தான் கொடுத்து வரும். ஏனெனில் மக்கள் எல்லா படத்தையும் கொண்டாடி விடமாட்டார்கள்.

வாய்க்கு வந்ததை பேசலாமா?

அதேபோல சில திரைப்படங்கள் எப்படி வெற்றி பெற்றது என்பதே பலருக்கும் தெரியாத விஷயமாக இருக்கும். இப்படித்தான் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கி வெளியான ஜெயிலர் திரைப்படமும் உள்ளது. ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றியை ரஜினிகாந்தாலேயே நம்ப முடியவில்லை என்று கூறலாம்.

சாதாரண வெற்றியை அந்த படம் கொடுக்கும் என்று நினைத்து வந்த நிலையில் எதிர்பாராத ஒரு வெற்றியை அந்த படம் கொடுத்தது. பல விழாக்களில் ரஜினிகாந்த் பேசும் பொழுது அதை வியப்போடு பேசியிருப்பதை பார்க்க முடியும். எப்பொழுதும் ஜெயிலர் படத்தின் வெற்றியை நம்ப முடியவில்லை என்று கூறுகிறார்.

 

ரஜினி பேச்சால் கடுப்பான ஷங்கர்

எனவே ரசிகர்களின் மனநிலை எப்படி இருக்கிறது என்பதே இவ்வளவு வருடம் சினிமாவில் இருக்கும் நடிகர்களால் புரிந்து கொள்ள முடியாத பொழுது இயக்குனர்களுக்கு அது கடினமான விஷயமாகும். இந்த நிலையில் இயக்குனர்களை குறை சொல்லும் வகையில் சமீபத்தில் வேட்டையன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி பேசி இருப்பது அதிக சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது.

அதில் பேசிய ரஜினிகாந்த் கூறும் பொழுது கமர்சியல் நடிகர்களுக்கு தொடர்ந்து வெற்றிப்படங்கள் கொடுக்கும் அளவிற்கு இங்கு இயக்குனர்கள் இல்லை. வரிசையாக வெற்றி படம் கொடுப்பது என்பதை தாண்டி ஒரு தோல்வி படத்திற்கு பிறகுதான் ஒரு வெற்றி படம் என்கிற நிலைமை நடிகர்களுக்கு உண்டாகி இருக்கிறது என்று பேசி இருக்கிறார்.

சிக்கலில் சிக்கிட்டீங்களே

இந்த நிலையில் இயக்குனர் ஷங்கருக்கு இது மன வருத்தத்தை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் மணிரத்தினம் போன்ற பெரிய இயக்குனர்களை ஒரு விதத்தில் சாடி இந்த மாதிரி பேசி இருப்பதாக பேச்சுக்கள் இருக்கின்றன.

ஏனெனில் சமீபத்தில் மணிரத்தினம் இயக்கிய ஒரு சில திரைப்படங்கள் தோல்வியை கண்டன. எனவே பெரிய இயக்குனர்களுக்கு இந்த மாதிரி தோல்வி படங்களாக அமைகின்றன என்பதை குறிப்பிடும் வகையில்தான் ரஜினிகாந்தின் இவ்வாறு பேசியிருக்கிறார் என்று கூறப்படுகிறது. தற்சமயம் ரஜினிகாந்த் இப்படி பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளன.

மேலும் புது இயக்குனர்கள் தொடர்ந்து வெற்றியை கொடுத்ததை அடுத்து பழைய இயக்குனர்களே இப்படி பேசியிருக்கிறார் ரஜினி என்கின்றனர் ரசிகர்கள். ஆனால் ரஜினி ரசிகர்கள் கூறும் பொழுது அவர் பொதுவாக தான் கூறினார். கமர்ஷியல் இயக்குனர்கள் இங்கு குறைவாக உள்ளனர் என்பதே ரஜினிகாந்தின் வாதம். அதை மற்றவர்கள் திரித்து பேசுகின்றனர் என்கின்றனர்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam