என்னப்பா சொல்றீங்க.. கேம் சேஞ்சர் கதை இந்த விஜய் படத்தின் கதையாமே..!

2025 பொங்கலுக்கு நடிகர் ராம் சரண், கியாரா அத்வானி, எஸ் ஜே சூர்யா, சமுத்திரகனி அஞ்சலி உள்ளிட்ட பலர் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இயக்குனர் கார்த்தி சுப்பராஜ் கதையில் உருவாகியுள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது.

ஜனவரி 10ஆம் தேதி இந்த படம் வெளியாகி இருக்கிறது. மற்ற அனைத்து படங்களையும் முந்திக்கொண்டு இந்த படம் வெளியாக இருக்கிறது. வசூல் வேட்டை நடத்த இயக்குனர் ஷங்கர் பக்காவாக பிளான் போட்டு களமிறங்கி இருக்கிறார்.

இயக்குனர் ஷங்கரின் கடந்த சில திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மோசமான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்தில் கம்பேக் கொடுப்பாரா..? என்று இவருடைய ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து வரும் நிலையில் இந்த படம் திரைக்கு வர இருக்கிறது.

கேம் சேஞ்சர் படத்தின் டிரைலரை பார்த்து ரசிகர்கள் இது என்னடா அப்படியே விஜய் நடித்த மதுர படம் மாதிரியே இருக்கு..? என்று கலக்க ஆரம்பித்தனர். ஷங்கர் தலையில் கார்த்திக் சுப்புராஜ் மிளகாய் அரைத்து விட்டாரோ..? என்று ஏகப்பட்ட விமர்சனங்கள் கிளம்பி இருக்கின்றன.

இந்நிலையில், இயக்குனர் ஆர் மாதேஷ் இயக்கத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான மதுர படத்தின் கதைதான் கேம் சேஞ்சர் கதை என்று டிரைலரை பார்த்த ரசிகர்கள் கலாய்க்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

20 வருடத்திற்கு பிறகு பழைய கதையை கார்த்திக் சுப்புராஜ் எழுதி கொடுக்க அதை அப்படியே பட்டி டிங்கரிங் செய்துவிட்டாரா ஷங்கர் என்ற கேள்வியும் எழுந்துள்ளன.

அதிலும் ட்ரைலரில் அந்த ரைஸ் மில்லில் அரிசி மூட்டையை சோதனை செய்யும் காட்சிகள் எல்லாம் அப்படியே மதுர படத்தில் வருவது போலவே இருக்கிறது என்று வெழுத்து வாங்கி வருகின்றனர் ரசிகர்கள்.

நடிகர் விஜய், சோனியா அகர்வால், ரக்ஷிதா, பசுபதி, வடிவேலு, நடிகை சீதா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இந்த திரைப்படத்தில் கலெக்டராக இருக்கும் விஜய்க்கும் அரசியல்வாதியான பசுபதிக்கும் இடையே நடக்கும் பிரச்சினைதான் ஒட்டுமொத்த படமே.

பாட்ஷா படத்தில் வருவது போல சோனியா அகர்வால் இறந்த உடன் வேறு இடத்தில் இருந்து வேறு ஆளாக விஜய் வாழ்ந்து வருவார். தெரி படத்தின் கதையும் கிட்டத்தட்ட அதேதான் என்பது தனி கதை.

கலெக்ட்டரான ராம்சரனுக்கும் அரசியல்வாதியான எஸ்.ஜே சூர்யாவுக்கும் இடையே நடக்கும் பிரச்சனை தான் கேம்சேஞ்சர்,

படம் வெளியான பிறகு தான் அதே கதையா..? அல்லது அந்த ஒன்லைனை மட்டும் உருவி திரைக்கதையை மாற்றி எடுத்திருக்கிறார்களா..? என்பதை பற்றி உறுதியாக சொல்ல முடியும் என்று வேடிக்கை பார்க்கும் ரசிகர்களும் இருக்கிறார்கள்.

கேம் சேஞ்சர் கதையில் நடிகர் விஜய் தான் நடிப்பதாக இருந்தது. கடைசியாக நடிகர் விஜய் அதில் நடிக்க முடியாது என மறுக்கவே ராம் சரணுக்கு இந்த படம் சென்றது என்று ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.

இது ஒரு வேளை மதுர கதையாக இருக்கும் காரணத்தினால் தான் படத்தை இயக்குவது இயக்குனர் ஷங்கர் என்ற போதிலும் இந்த படத்தில் நடிக்க மாட்டேன் என்று மறுத்துவிட்டாரா நடிகர் விஜய்.. என்ற பேச்சும் தற்போது எழுந்திருக்கிறது.

Summary in English : So, there’s been quite a buzz lately about Ram Charan’s upcoming movie, Game Changer. Fans are all abuzz with rumors that it might be an unofficial remake of Vijay’s hit film, Madhura. Now, we all know how these things go in the film industry—sometimes a little inspiration can lead to some major excitement!

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam