போதும்டா சாமி.. வீட்டில அவ அப்படித்தான் நடப்பா.. அடுத்த விவாகரத்து லிஸ்டில் ரம்யா கிருஷ்ணன் வம்சி..

தற்போது நட்சத்திர தம்பதிகளிடையே விவாகரத்துக்கள் அதிகமாகி வருவது உங்களுக்கு தெரிந்த விஷயம் தான். அந்த வகையில் தற்போது ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தியின் விவகாரம் சூடு பிடித்து ஆறாத சூழ்நிலையில் ரம்யா கிருஷ்ணன் மற்றும் கிருஷ்ண வம்சியின் விவாகரத்து விஷயம் தற்போது வெளிவந்துள்ளது.

இந்நிலையில் ரம்யா கிருஷ்ணன் மற்றும் இயக்குனர் வம்சி காதலித்து திருமணம் செய்து கொண்டது உங்கள் அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். இவருக்கு ஒரு பையன் இருக்கக்கூடிய சூழ்நிலையில் திடீரென வம்சி வெளியிட்டு இருக்கும் அறிக்கையைப் பார்த்து அனைவரும் அதிர்ந்து போய் இருக்கிறார்கள்.

போதும்டா சாமி.. வீட்டில அவ அப்படித்தான் நடப்பா..

தமிழ் திரை உலகில் மட்டுமல்லாமல் தென்னிந்திய திரை உலகிலும் முன்னணி நடிகையாக திகழும் ரம்யா கிருஷ்ணன் என்றுமே எவர்கிரீன் நடிகையாக ரசிகர்களின் மத்தியில் போற்றப்படக்கூடியவர்.

50 வயதை கடந்த நிலையிலும் இவரது அழகைப் பார்த்து அனைவரும் ஆச்சிரியப்படுவதுண்டு. மேலும் அண்மையில் தற்போது இவர்களது திருமண வாழ்க்கை குறித்து பல்வேறு வதந்திகள் வெளி வருகிறது. இருவரும் தற்போது பிரிந்து வாழ்வதாகவும் விவாகரத்து செய்து கொள்ளப் போவதாகவும் பேச்சுக்கள் எழுந்துள்ளது.

இந்த விஷயம் காட்டுத் தீயாய் இணையம் முழுவதும் பரவி வந்த நிலையில் இந்த நிகழ்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கூடிய வகையில் வம்சி அண்மையில் பேசியிருக்கும் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அந்த வகையில் வம்சி படப்பிடிப்புக்காக தற்போது ஹைதராபாத்தில் இருப்பதாகவும் ரம்யா கிருஷ்ணன் சென்னையில் இருப்பதாகவும் கூறி இருக்கிறார். மேலும் இருவரும் தனித்தனியாக இருப்பதால் தான் இந்த மாதிரியான வதந்திகள் உருவாகி இருக்கலாம் என்று அனுமானத்தில் அவர் பேசியிருக்கிறார்.

அடுத்த விவாகரத்து லிஸ்டில் ரம்யா கிருஷ்ணன் வம்சி..

எனினும் இந்த விஷயத்தில் கொஞ்சம் கூட உண்மை இல்லை என்பதை ஆணித்தரமாக கூறிய இவர் கிருஷ்ண வம்சி எப்போதும் ரம்யா கிருஷ்ணனோடு தான் இணைந்து வாழ்வார்.அத்தோடு இருவரும் சமீபத்தில் ஒன்றாக எந்த நிகழ்ச்சிகளும் கலந்து கொள்ளாததால் இது போன்ற வதந்திகள் ஏற்பட்டு இருக்கலாம்.

மேலும் இருவரும் சமீபத்தில் தங்களின் தனிப்பட்ட நிகழ்ச்சிகள் குடும்ப நிகழ்ச்சிகளுக்கு ஒன்றாக சென்றுள்ளோம். ஆனால் அந்த புகைப்படங்களை இதுவரை வெளியிடாமல் இருப்பது கூட இதற்கு காரணமாக அமைந்திருக்கலாம். நாங்கள் யார் என்பதை எங்களுக்கு தெரியும்.

மேலும் எங்கள் வீட்டுக்கு சென்றால் எங்கள் உலகம் தனி. இந்த சூழலில் ரம்யா கிருஷ்ணனை பற்றி சுவாரசியமான சில தகவல்களையும் கிருஷ்ண வம்சி வெளியிட்டு இருக்கிறார்.இதில் ரம்யா கிருஷ்ணன் மிகவும் வேடிக்கையான நபர் என்றும் அனைவரையும் நேசிக்க கூடிய தன்மை கொண்டவர் என்றும் கூறியிருக்கிறார்.

அத்தோடு வீட்டில் மகிழ்ச்சியாக இருக்கக்கூடிய அவர் புத்திசாலித்தனமாகவும் சாதுரியமாகவும் கூர்மையாகவும் எப்போதும் செயல்படக்கூடிய நேர்த்தி மிக்கவர் என் மனைவி ராஜமாதாவாக நடித்தது மட்டுமல்லாமல் உண்மையிலும் அவள் ஒரு ராஜமாக தான் என் வீட்டில் என சொல்லி பரவி வந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இதை எடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறி உள்ளது.

அதுமட்டுமல்லாமல் வீட்டில் நீலாம்பரி ஆக இல்லாமல் ராஜமாதாவாக இருப்பார் என்று சூசகமாக கிருஷ்ணவம்சி சொன்ன தகவலை ரசிகர்கள் நக்கலாக பேசி வருவதோடு அவர்கள் பட்டிமன்றமும் நடத்தி வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் அவ வீட்டில் அப்படித்தான் நடப்பா போதுமடா சாமி இனி வதந்திகளை பரப்பாதீர்கள் என்று சொல்லுவது போல அவரது பேச்சு இருந்தது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version