அந்த நேரத்தில் என் புருஷன் என்னை வீடியோ எடுத்து.. என்னிடமே காட்டி.. நடிகை ராசி மந்த்ரா..!

குண்டான காரணத்தை சொல்ல ஒரு முறை கணவர் ராசி மந்த்ரா சாப்பிடும் போது வீடியோ எடுத்த விஷயத்தை அண்மை பேட்டியில் பகிர்ந்து கொண்டது.

நடிகை ராசி எனும் மந்த்ரா தென்னிந்திய திரையுலகில் ஒரு சிறப்பான நடிகையாக வலம் வந்தவர். 90 காலகட்டத்தில் இவரை ரசிக்காத ரசிகர்களை இல்லை என்று சொல்லக்கூடிய அளவு கனவு கன்னியாக திகழ்ந்தவர். 

அந்த வகையில் இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல தென்னிந்திய மொழி படங்களில் நடித்து ரசிகர் படையை தனக்கு என்று அமைத்துக் கொண்டதை அடுத்து இவரை விரும்பாத உள்ளங்களை இல்லை என்று சொல்லலாம். 

அந்த நேரத்தில் என் புருஷன் என்னை வீடியோ எடுத்து..

தமிழைப் பொறுத்த வரை பிரியம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் தென் இந்திய மொழி படங்கள் மட்டுமல்லாமல் ஹிந்தியிலும் க்ராப்தர் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆகி இருக்கிறார். 

தமிழ் மட்டும் தெலுங்கு படங்களில் சக்கை போடு போட்ட இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வகையில் இவரது சிறப்பான நடிப்பை லவ் டுடே படத்தில் நீங்கள் பார்த்திருக்கலாம். 

மேலும் இவர் நடிப்பில் வெளி வந்த பெரிய இடத்து மாப்பிள்ளை, தேடினேன் வந்தது, இரட்டை ஜடை வயசு, புது குடித்தனம், சிலம்பாட்டம், டபுள், ஒன்பதுல குரு, வாலு போன்ற படங்கள் இன்றும் ரசிகர்களின் மத்தியில் இவரை மெச்சக்கூடிய வகையில் உள்ளது என்று சொல்லலாம்.

இந்நிலையில் அண்மையில் இவர் வெளியிட்டிருந்த போட்டோக்களில் உடல் எடை கூடி சற்று பருத்து காணப்பட்டார். அதை அடுத்து உடல் எடையை குறைத்து தற்போது ஓரளவு ஸ்லிம்மாக காட்சியளிக்கிறார். 

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய இவர் சமூக வலைத்தளங்களில் அதிக அளவு ஆக்டிவாக தான் இல்லை என்று சொன்னதோடு மட்டுமல்லாமல் உடல் எடை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பக்குவமாக பதிலளித்திருக்கிறார். 

அப்படி அவர் அந்த பேட்டியில் பேசும் போது தொகுப்பாளினி உங்கள் உடல் எடை கூறியதை பற்றி உங்கள் கணவர் உங்களிடம் எந்தவித கருத்துக்களையும் தெரிவிக்கலையா? என்ற கேள்வியை எழுப்பி இருந்தார். 

என்னிடமே காட்டி.. நடிகை ராசி மந்த்ரா..

அதற்கு மந்த்ரா மலுப்பாமல் அது பற்றியெல்லாம் என்னிடம் இது வரை பேசியது இல்லை. ஆனால் ஒரு முறை நான் சாப்பிடும் போது அவர் வீடியோ ஒன்றை எடுத்தார். 

எனக்கு எப்போதும் சிக்கன் மற்றும் வடை என்றால் மிகவும் பிடிக்கும், சாப்பிடும் சமயத்தில் வீடியோ எடுப்பதை பார்த்து ஏன் இப்படி எடுக்கிறீர்கள் என்று அவரிடம் நான் கேட்டேன். 

அதற்கு அவர் என்னிடம் உனக்கு ஏன் உடல் எடை அதிகரிக்கிறது என்பது உனக்கு தெரிய வேண்டாமா? அதற்காகத் தான் இந்த வீடியோவை நான் எடுக்கிறேன் என்று சொன்னதை அடுத்த தான் நான் உண்மையை புரிந்து கொண்டேன். 

இதை அடுத்து 19 கிலோவிற்கு மேல் உடல் எடை அதிகரித்து காணப்பட்ட என்னிடம் உடல் எடை குறித்து நேரடியாக சொல்லாமல் மறைமுகமாக இப்படி உணர்த்தியதைப் புரிந்து கொண்டு நான் உடல் எடையை குறைக்க முற்பட்டேன் என்று சிரித்த வண்ணம் சொன்னார். 

இந்த விஷயம் தான் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறி உள்ளது. 

Summary in English : When it comes to celebrity life, things can get a little wild, and Rashi Mantra’s story is no exception! Recently, she found herself in the spotlight for a rather unexpected reason—gaining some weight. The twist? Her husband decided to document the moment by taking a video of her enjoying a meal!

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam