பீலிங்ஸ்சு பாடலில் டான்ஸ் ஆடும் போது எனக்கு இது இருந்துச்சு.. கூச்சமின்றி சொன்ன ராஷ்மிகா..!

புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி உலகம் முழுக்க 1700 கோடி ரூபாய்களை வசூல் செய்திருக்கிறது. இந்த படத்தில் அல்லு அர்ஜுன், பகத்பாசில், ராஷ்மிகா மந்தனா, ஜெகபதிபாபு, சுனில் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இந்த படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்று சர்ச்சைக்கு உள்ளானது. அந்த பாடலின் வீடியோ இன்னும் சர்ச்சைக்குள்ளானது. அதுதான் ஃபீலிங்ஸ் என்ற பாடல். இந்த பாடலில் நடித்தது குறித்து நடிகை ராஷ்மிகா மந்தனா தன்னுடைய பார்வையை மனம் திறந்து பேசி இருக்கிறார்.

அந்த பாடலில் இருந்த நடன அசைவாலும் நடன காட்சிகளாலும் நான் முதலில் அஸௌகரிமாக உணர்ந்தேன். எனக்குள் அந்த உணர்வு இருந்து கொண்டே இருந்தது. இப்படி ஒரு பாடலில் நடிக்க வேண்டுமா..? என்ற ஒரு கேள்வி எனக்குள் இருந்து கொண்டே இருந்தது.

அந்த பாடல் இரண்டு நாட்களுக்கு முன்பு தான் படமாக்கப்பட்டது. ஐந்து நாட்களில் அந்த பாடலின் படப்பிடிப்பை முடித்து விட்டோம். அந்த பாடலுக்காக ஒத்திகை எடுத்த போது பல அசைவுகளை பார்த்து நான் பயந்தேன்.

ஏனென்றால் நான் அல்லு அர்ஜுன் மீது நடனம் ஆடுவது போல அசைவுகள் இருந்தன. இது குறித்து நான் படக்குழுவிடம் கேட்டபோது என்னை சமாதானப்படுத்தி அதனை ஒரு சவாலாக நினைத்துக் கொண்டு நடனமாடுங்கள் என்று கூறினார்கள்.

நிச்சயம் இந்த பாடல் சர்ச்சைக்குரியதாக மாறும் என்று நினைத்து இதை எப்படி செய்யப் போகிறேன் என்று எனக்குள் யோசனை இருந்து கொண்டே இருந்தது.

ஆனால், ஒரு நடிகையாக மற்றவர்களை மகிழ்விப்பதும் இயக்குனரை விருப்பத்தை நிறைவேற்றுவதும் தான் என்னுடைய வேலை என்பதால் இயக்குனரிடம் பாராட்டை பெற வேண்டும் சூப்பர் என்ற வார்த்தையை கேட்க வேண்டும் என்பதற்காக நான் கடுமையாக உழைத்தேன்.

அனிமல், சிக்கந்தர் போன்ற படங்களில் மரத்தைச் சுற்றி ஆடிவிட்டேன். ஆனால் புஷ்பா படத்தில் வரக்கூடிய ஸ்ரீ வள்ளி கதாபாத்திரத்தில் அப்படி ஆட முடியாது. மக்களும் அதை விரும்ப மாட்டார்கள் என்பது என்னுடைய பார்வை என்று பதிவு செய்திருக்கிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam