இந்திய தொழிலதிபர்களின் மக்கள் மத்தியில் தற்சமயம் அதிக பிரபலமாக இருப்பவர் ரத்தன் டாடா. இவர் உயிரோடு இருந்த காலத்தில் பெரிதாக மக்களால் பேசப்படவில்லை என்றாலும் கூட இப்பொழுது ரத்தன் டாடாவின் புகழ் உலக அளவில் பேசப்பட்டு வருகிறது.
அவர் கூறிய தன்னம்பிக்கை விஷயங்கள் தற்சமயம் சமூக வலைதளங்களில் அதிகமாக பரவி வருகிறது. ஏனெனில் வழக்கமான பணக்காரர்களைப் போல் அல்லாமல் தொடர்ந்து ஏழைகளுக்கு உதவி செய்தவராக ரத்தன் டாடா இருந்திருக்கிறார்.
உங்களுக்கு எவ்ளோ நேரமாகும்
கிட்டத்தட்ட 25க்கும் அதிகமான நிறுவனங்களை நடத்தி வந்த போதிலும் ரத்தன் டாட்டா என்றுமே உலக பணக்காரர்கள் லிஸ்டில் வந்ததே கிடையாது அதற்கு முக்கிய காரணம் அவருடைய வருவாயில் ஒரு பங்கை தொடர்ந்து அவர் ஏழை எளிய மக்களுக்கு உதவிக்காக கொடுத்து வந்தார்.
கொரோனா சமயத்தில் கூட அரசு அனைவரிடமும் நிதி திரட்டி வந்த பொழுது 1500 கோடி ரூபாயை நிதியாக கொடுத்தார். இதனாலேயே ரத்தன் டாடா மிக முக்கியமானவராக பார்க்கப்படுகிறார். தொடர்ந்து மூன்று தலைமுறைகளாக மக்களுக்கு அவர்கள் நன்மைகளை செய்து வருகின்றனர்.
கேள்விக்கு அரட்டிவிட்ட ரத்தன் டாடா
இந்த நிலையில் வெளிநாட்டில் ரத்தன் டாடா ஒரு நேர்காணலில் பேசிய விஷயம் இப்பொழுது அதிக பிரபலம் ஆகி வருகிறது. அந்த பேட்டியில் ரத்தன் டாடாவிடம் பி.எம்.டபிள்யூ வாங்க வேண்டும் என்றால் உங்களுக்கு எவ்வளவு நேரம் ஆகும் என்று கேட்டிருந்தனர்.
ஏனெனில் அமெரிக்காவில் இருக்கும் கார்களிலேயே அதிக விலை உயர்ந்த காராக அப்பொழுது bmw இருந்தது. அதற்கு பதில் அளித்த ரத்தன் டாடா எனக்கு எப்படியும் ஒரு ஐந்து வருடமாவது ஆகும் என்று கூறியிருந்தார் இவ்வளவு பெரிய கோடீஸ்வரராக இருந்து கொண்டு ஒரு கார் வாங்க 5 வருடம் ஆகும் என்கிறீர்கள் என்று அவர்கள் கேட்டிருக்கின்றனர்.
அதற்கு பதில் அளித்த ரத்தன் டாடா நான் கார் வாங்குவதற்கு கூறவில்லை அந்த bmw நிறுவனத்தையே வாங்க வேண்டும் என்றால் 5 வருடங்கள் ஆகும் என்று தான் கூறினேன் என்று கூறியிருக்கிறார். இப்படி எந்த ஒரு விஷயத்தையும் பெரிதாக யோசிக்க வேண்டும் என்கிற மனப்பான்மையை கொண்டவர்தான் ரத்தன் டாடா.