“இதனால தான் சூரியா வணங்கான் படத்துல நடிக்கல போல..” கலாய்க்கும் நெட்டிசன்ஸ்..!

நடிகர் சூர்யா நடித்திருந்த வணங்கான் திரைப்படம் திடீரென டிராப் செய்யப்பட்டது. இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்தியது. இந்த திரைப்படத்தில் நடிகைகள் கீர்த்தி செட்டி மற்றும் மமீதா பைஜூ ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாக இருந்தது.

நடிகை கீர்த்தி செட்டி படத்தின் ஹீரோயின் ஆகவும் நடிகை மமீதா பைஜூ நடிகர் சூர்யாவின் தங்கையாகவும் நடிப்பதாக அமைக்கப்பட்டிருந்தது. ஒரு கட்டத்தில் நடிகர் சூர்யா இந்த படத்தில் இருந்து விலகியதை தொடர்ந்து நடிகை கீர்த்தி செட்டியும் மமிதா பைஜூவும் விலகிக் கொண்டனர்.

அதன்பிறகு நடிகர் அருண் விஜய் ஹீரோவாக வைத்து நடிகை ரோஷினி பிரகாஷ்-ஐ ஹீரோயின் ஆகவும் புதுமுக நடிகையாக ரிதா என்பவரை அருண் விஜய்க்கு தங்கையாகவும் நடிக்க வைத்திருந்தார் இயக்குனர் பாலா.

இந்த படம் என்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. முதல் பாதி மெதுவாக நகர்ந்தாலும் இரண்டாம் பாதியில் ஒட்டுமொத்த படத்தையும் தூக்கி நிறுத்தி விடுகிறது. வழக்கமான பாலா படங்களுக்கு இருக்கும் ரசிகர்களுக்கு இந்த திரைப்படம் மிகப்பெரிய விருந்தாக அமையும்.

பொங்கலுக்கு குடும்பத்தோடு சென்று பார்க்கக் கூடிய ஒரு நல்ல படமாகவும் திரைப்படம் வந்திருக்கிறது. இந்நிலையில், இந்த படத்தில் இதனால் தான் சூர்யா நடிக்க மாட்டேன் என்று மறுத்து இருப்பார் போல் தெரிகிறது என ரசிகர்கள் பலரும் தங்களுடைய கலாய் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

என்ன காரணம் என்றால்.. கதையின்படி கதாநாயகன் காது கேட்காதவர்.. வாய் பேச முடியாதவர்.. நடிகர் சூர்யாவிற்கு நல்ல சத்தமாக கத்தக்கூடிய வசனங்கள் காதை கிழிக்கக் கூடிய அளவுக்கு கத்தி பேசக்கூடிய வசனங்கள் இருந்திருந்தால் நடித்திருப்பார்.

வாய் பேச முடியாதவராக நடிப்பது என்பது அவருக்கு கடினமான விஷயமாக தோன்றியிருக்கலாம் என கலாய்த்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். சமீபத்தில், வெளியான கங்குவா திரைப்படத்தில் ரசிகர்களின் காது கிழிய கத்தி கத்தி வசனம் பேசி இருந்தார் நடிகர் சூர்யா.

இது படத்திற்கு மிகப்பெரிய சிக்கலாக அமையவே படத்தின் வால்யூமை இரண்டு பாயிண்ட் குறைத்து வைக்க சொல்லி திரையரங்குகளுக்கு படக்குழு தரப்பில் இருந்து வேண்டுகோள் விடுக்கப்பட்ட கொடுமை எல்லாம் அரங்கேறியது.

மட்டுமல்லாமல் பொதுவாக நடிகர் சூர்யா படங்கள் என்றாலே அவருடைய வசனம் விண்ணை முட்டும் அளவுக்கு சத்தமாக இருக்கும் என்பது ரசிகர்களுடைய கருத்து. குறிப்பாக சிங்கம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடிகர் சூர்யா தேவையே இல்லாமல் சத்தமாக கத்தி கத்தி வசனங்களை சில இடங்களில் பேசி இருப்பார்.

அதையெல்லாம் குறிப்பிட்டு இப்படி கத்தி கத்தி பேசக்கூடிய ஒரு நபரை பேசவே கூடாது என்று ஒரு படத்தில் நடிக்க வைத்தால் எப்படி அவர் நடிப்பார்..? அதனால் தான் விலகிவிட்டார் போல் தெரிகிறது என்றும்.. நடிகர் சூர்யா இதனால் தான் வணங்கான் திரைப்படத்திலிருந்து விலகிவிட்டார் என்றும் கலாய் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள் ரசிகர்கள்.

Summary in English : Fans have been buzzing about the recent news surrounding actor Suriya and his decision to step away from the movie “Vanangaan.” It seems that some fans are playfully trolling him, suggesting that he wouldn’t pass up a role if it involved those signature loud dialogue delivery scenes he’s known for. But here’s the twist: in “Vanangaan,” Suriya’s character is deaf and mute!

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Tamizhakam