ஒவ்வொரு பையனுக்கும் கையில் ஒரு கோடு… ரஜினியே வந்தாலும் அந்த சீனுக்கு நோ.. அதிர்ச்சி கொடுத்த சீரியல் நடிகை.!

முன்பை விட இப்பொழுது மக்கள் மத்தியில் சீரியலுக்கான களம் என்பது அதிகரித்துள்ளது என்றுதான் கூற வேண்டும். முன்பெல்லாம் சீரியல் நடிகையாக ஆகிவிட்டார். பிறகு சினிமாவில் வாய்ப்பு கிடைக்காது என்பதால் மாடலிங் துறையில் இருக்கும் பெண்கள் எடுத்த உடனேயே சினிமாவிற்கு வந்து வரவேற்பை பெற வேண்டும் என்று தான் நினைப்பார்கள்.

ஆனால் இப்பொழுது எல்லாம் சீரியலில் நடித்தும் கூட சினிமாவில் வரவேற்பு பெற முடியும் என்று சில பெண்கள் நிரூபித்திருக்கின்றனர். அதனை தொடர்ந்து நடிகைகள் பலரும் மாடலிங் துறையிலிருந்து சீரியலுக்கு செல்கின்றனர்.

பையனுக்கும் கையில் ஒரு கோடு

சீரியலில் நடிப்பதன் மூலம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற பிறகு கதாநாயகியாக படங்களுக்கு நடிக்க செல்லும் பொழுது வரவேற்பு எளிதாகவே கிடைத்துவிடும் என்பது அவர்களது எண்ணமாக இருக்கிறது.

அப்படியாக சீரியல்கள் மூலமாக மக்கள் மத்தியில் அதிக பிரபலமானவர்தான் நடிகை ரியா விஸ்வநாதன். இவர் முதன்முதலாக ராஜா ராணி சீரியலில் சந்தியா என்கிற கதாபாத்திரத்தில் அறிமுகமானார். ராஜா ராணி சீரியலில் ஆரம்பத்தில் ஆல்யா மானசாதான் இந்த கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

ரஜினியே வந்தாலும் அந்த சீனுக்கு நோ

ஆனால் பாதியிலேயே அவர் சீரியலில் இருந்து வெளியேறிய காரணத்தினால் ரியா விஸ்வநாதன் அந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார். அதன் மூலமாக அவருக்கு அதிக வரவேற்புகள் கிடைத்தது. சீரியலில் நடிப்பதற்கு முன்பு டான்சர் ஆக இருந்து வந்தார் ரியா விஸ்வநாதன்.

அதன் காரணமாக அவருக்கு படங்களில் நடனம் ஆடுவதற்கான வாய்ப்புகளும் வந்து கொண்டிருந்தன. சண்டக்கோழி, நளத்தமயந்தி மாதிரியான ஒரு சில திரைப்படங்களில் இவர் துணை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

அதிர்ச்சி கொடுத்த சீரியல் நடிகை

இந்த நிலையில் சமீபத்தில் அவர் பேட்டி ஒன்றில் பேசிக்கொண்டிருந்தார். அந்த பேட்டியில் அவரிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டது. கையில் நிறைய வெட்டுக்கள் இருந்தது அதற்கான காரணம் என்ன என்று கேட்கும் பொழுது கல்லூரியில் என்னை காதலித்த பையன் என்னை ஏமாற்றிய பொழுது கையை வெட்டிக் கொண்டேன் என்று கூறினார் ரியா விஸ்வநாதன்.

மேலும் தன்னை குறித்து பல விஷயங்களை கூறியிருந்தார் அதில் அவரிடம் படங்களில் நடிகைகளுக்கு ஐட்டம் பாடல்களில் ஆடுவதற்கான வாய்ப்புகள் வருகின்றன சமந்தா மாதிரியான நடிகைகள் கூட அந்த மாதிரி பாடல்களுக்கு ஆடுவதை பார்க்க முடிகிறது.

 

உங்களுக்கு அப்படியான வாய்ப்புகள் வந்தால் ஆடுவீர்களா என்று கேட்கப்பட்டது அதற்கு பதில் அளித்த நடிகை ரியா விஸ்வநாதன் பெரிய பெரிய ஹீரோக்களின் படத்திலே வாய்ப்பு கிடைத்தாலும் கூட அந்த மாதிரி பாடல்களில் நான் ஆட மாட்டேன் என்று வெளிப்படையாக கூறி இருக்கிறார்.

 

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version