அரசியல் களத்தில் இறங்கும் சூர்யா… இதுதான் விஷயமா?.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி..!

நடிகர் ஆர்.ஜே பாலாஜி சினிமாவில் அறிமுகமான காலகட்டம் முதலே இயக்குனராக வேண்டும் என்கிற ஆசையில் சினிமாவிற்கு வந்தார். ஆனால் ஆரம்பத்திலேயே இயக்குனராக முடியாது என்பதால் நடிகராக முதலில் களம் இறங்கினார்.

நானும் ரௌடிதான் மாதிரியான திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஆர்.ஜே பாலாஜி எல்.கே.ஜி என்கிற திரைப்படம் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார் எல்கேஜி திரைப்படம் அவருக்கு அதிக வரவேற்பை பெற்று கொடுத்தது.

அரசியல் களத்தில் இறங்கும் சூர்யா

அதனை தொடர்ந்து அவர் நடித்த நிறைய திரைப்படங்கள் அவருக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தது. இருந்தாலும் கூட இயக்குனராக வேண்டும் என்கிற அவரது ஆசை ஓரமாக இருந்து கொண்டே இருந்தது. இந்த நிலையில் தான் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் கதையில் இறங்கி வேலை செய்தார் ஆர்.ஜே பாலாஜி.

மூக்குத்தி அம்மன் எதிர்பார்த்த மாதிரியே நல்ல வெற்றியை பெற்றுக் கொடுத்தது. அதனை தொடர்ந்து ஆர்.ஜே பாலாஜி சொந்தமாக திரைப்படம் இயக்கலாம் என்று முடிவெடுத்தார். அப்படி அவர் இயக்கிய திரைப்படம் தான் வீட்ல விசேஷம்.

இதுதான் விஷயமா?

வீட்ல விசேஷம் திரைப்படமும் பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது அதனை தொடர்ந்து இயக்குனராக ஆர்.ஜே பாலாஜிக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்தது. தொடர்ந்து விஜய்யை வைத்து ஒரு திரைப்படத்தை எடுக்க முடிவெடுத்தார் ஆர்.ஜே பாலாஜி.

எல்.கே.ஜி திரைப்படம் போலவே ஒரு காமெடி அரசியல் படமாக அது இருக்க வேண்டும் என்று அதற்கான கதைகளையும் எழுதினார். அப்பொழுதே விஜய்க்கு அந்த கதை மிகவும் பிடித்திருந்தது. எனவே சேர்ந்து படம் பண்ணலாம் என்று விஜய் கூறியிருந்தார்.

ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி

ஆனால் அதற்குப் பிறகு தொடர்ந்து விஜய்க்கு வேறு சில படங்களில் நடிக்க வேண்டி இருந்ததால் அந்த படத்தில் அவரால் நடிக்க முடியவில்லை. இப்பொழுது சினிமாவை விட்டு விஜய் செல்ல இருக்கிறார். அதனால் தற்சமயம் இந்த கதையை வைத்து சூர்யாவை வைத்து படத்தை இயக்க இருக்கிறார் ஆர் ஜே பாலாஜி.

இந்த திரைப்படத்தில் சூர்யா முதலமைச்சர் கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இது விஜய்க்காக எழுதப்பட்ட கதை என்பதால் கதாநாயகனை முதலமைச்சர் கதாபாத்திரமாக எழுதி இருக்கிறார் ஆர்.ஜே பாலாஜி என கூறப்படுகிறது. ஆனால் தற்சமயம் விஜய் நடிக்காததால் சூர்யா அந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார் இதனை தொடர்ந்து இந்த திரைப்படம் குறித்து எதிர்பார்ப்புகள் அதிகரிக்க துவங்கியிருக்கின்றன.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam