ரசிகர்களின் சொர்க்கமாக மாறியதா? சொர்க்கவாசல்.. அதகளப்படுத்தினாரா ஆர் ஜே பாலாஜி?

ஆர் ஜே பாலாஜியின் நடிப்பில் வெளிவந்திருக்கும் சொர்க்கவாசல் திரைப்படம் இன்று ரிலீஸ் ஆன நிலையில் அந்த படம் குறித்த விமர்சனத்தை விரிவாக இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம். 

சித்தார்த் இயக்கத்தில் ஆர்.ஜே பாலாஜி ஹீரோவாக நடித்திருக்கும் படம் தான் சொர்க்கவாசல். இவர் ஆரம்ப காலத்தில் ஆர்ஜேவாக பணியாற்றியதை அடுத்து படிப்படியாக காமெடி நடிகனாக திரை உலகை நடித்து இன்று ஹீரோ என்ற அந்தஸ்தை பிடித்திருக்கிறார். 

எல் கே ஜி என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமான இவர் அந்த படத்தின் வெற்றியை அடுத்து அடுத்தடுத்து படங்களான மூக்குத்தி அம்மன், வீட்டில் விசேஷம் போன்ற படங்களையும் இயக்கியதோடு அந்த படத்தில் நடிக்கவும் செய்திருக்கிறார். 

ரசிகர்களின் சொர்க்கமாக மாறியதா? சொர்க்கவாசல்..

அந்த வகையில் இவர் அடுத்ததாக சூர்யா 45 படத்தை இயக்க இருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். இந்நிலையில் இவர் ஹீரோவாக நடித்து வெளி வந்த திரைப்படம் சொர்க்கவாசல் என்று திரையரங்குகளில் காட்சிக்கு வந்துள்ளது. 

இயக்குனர் சித்தார்த் இயக்கத்தில் வந்திருக்கும் இந்த படம் இயக்குனர் சித்தாந்தத்தின் முதல் படமாகும். இவர் பா ரஞ்சித்திடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த படத்தை இயக்கியிருப்பதாக சித்தார்த் கூறியிருக்கிறார். 

மேலும் சொர்க்கவாசல் படத்தில் சானியா ஐயப்பன் செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாகவும் இந்த படத்தின் எக்ஸ் தளத்தில் விமர்சனத்தை இந்த தொகுப்பில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம். 

இந்தப் படமானது 1999 ஆம் ஆண்டு நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டதும் செய்யாத தவறுக்காக சிறையில் சிக்கிக் கொள்ளும் ஒரு கைதியை பற்றிய கதைதான் கதையின் கதை கருவாக உள்ளது. 















இந்தப் படத்தில் சிறையில் நடக்கும் கொடூரங்கள் கண்முன்னே தெரிவதோடு ஆர் ஜே பாலாஜி தன்னுடைய நடிப்பின் இன்னொரு பரிமாணத்தை காட்டி இருக்கிறார் அதற்கு இணையாக செல்வராகவனும் சிறப்பாக நடித்திருக்கிறார். 

மேலும் சானியா ஐயப்பனுக்கு இந்த படம் பெஸ்ட் படமாக அமைவதோடு மட்டுமல்லாமல் அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் வந்து சேரும் என்று சொல்லி இருக்கிறார்கள். புதுமுக இயக்குனர் என்று சொல்ல முடியாத அளவு அவர் சிறப்பாக இந்த கதையை எடுத்திருக்கிறார். 

படத்தில் இருக்கும் ஒவ்வொரு நிமிடங்களும் ரசிகர்களை சீட்டின் நுனியில் அமர வைக்க கூடிய வகையில் விறுவிறுப்பான கதைக்களத்தோடு பார்ப்பவர்களை ஆழ்ந்து பார்க்க வைக்க கூடிய அமைப்பு இந்த படம் வெளிவந்துள்ளது. அத்தோடு பின்னணி இசையும் இந்த படத்திற்கு பக்காவாக பலம் சேர்த்துள்ளது. 

Summary in English: If you’re looking for a fun watch, the RJ Balaji-starrer “Sorgavaasal” is definitely worth checking out! This movie brings together a quirky mix of humor, drama, and just the right amount of suspense. RJ Balaji shines as he navigates through a storyline that’s both entertaining and thought-provoking.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam