நடிகை ரோஜா ரமணியை நியாபகம் இருக்கா..? இப்போ என்ன பண்றார் பாருங்க..!

தென்னிந்திய திரைப்பட நடிகையான ரோஜா ரமணி தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர். இவர் தெலுங்கு படம் மட்டுமல்லாமல் மலையாளம், தமிழ், கன்னடம், ஒடியா, ஹிந்தி போன்ற மொழி படங்களிலும் நடித்திருக்கிறார்.

மலையாளத் திரைப்படத்தில் நடிக்கும் போது இவர் ரோஜா ரமணி என்ற பெயருக்கு பதிலாக ஷோபனா என்ற பெயரில் நடித்திருப்பது உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.

நடிகை ரோஜா ரமணியை நியாபகம் இருக்கா..

நடிகை ரோஜா ரமணி 1967-ஆம் ஆண்டு வெளி வந்த பக்த பிரகலாதன் என்ற தெலுங்கு திரைப்படத்தில் அவர் பிரகலாதன் வேடத்தை ஏற்று நடித்து அனைவரையும் கவர்ந்தவர்.

இந்த கேரக்டரை செய்யும் போது அவருடைய வயது 5 என்றால் அது உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும். எனவே குழந்தை நட்சத்திரமாக தெலுங்கு படத்தில் நடித்ததை அடுத்து இந்த படம் பெரிய வெற்றியை அவருக்குப் பெற்றுத் தந்தது.

தெலுங்கில் வெளி வந்த இந்த திரைப்படம் தமிழிலும் வெளி வந்ததை அடுத்து சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதை இவர் வென்றிருக்கிறார். இனி இவருக்கு எப்படி திரைப்பட வாய்ப்பு கிடைத்தது என்று தெரிந்தால் அது உங்களுக்கு மேலும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தும்.

இதற்குக் காரணம் படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க சென்ற இடத்தில் ஏவிஎம் செட்டியாரின் கண்ணில் பட்டு நடிகையாக அறிமுகமான இவர் ஐந்து வயது முதல் 12 வயது வரை சுமார் 80 படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார் என்றால் சும்மாவா.

இதைத் தொடர்ந்து இவர் பல படங்களில் ஹீரோயினியாக நடிக்க ஆரம்பித்தார். அந்த வகையில் சுமார் 130 க்கும் மேற்பட்ட படங்களில் இவர் ஹீரோயினியாக நடித்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் 400-க்கும் மேற்பட்ட படங்களில் டப்பிங் ஆர்டிஸ்ட் ஆக பணி செய்து இருக்கிறார்.

இப்போ என்ன பண்றார் பாருங்க..

இந்நிலையில் 1981 ஆம் ஆண்டு சக்கரபாணி என்பவரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு நடிகர் தருண் குமார் மற்றும் அமுல்யா என இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.


இவர் நடிப்பில் வெளி வந்த துலாபாரம், குழந்தை உள்ளம், நீதிக்கு தலைவணங்கு, சிவப்புக்கல் மூக்குத்தி, ஆயிரம் வாசல், இதயம், முறை பொண்ணு, சங்கிலி போன்ற படங்கள் ரசிகர்களின் மத்தியில் இன்றும் பேசப்படும் படங்களில் ஒன்றாக திகழ்கிறது.

இந்தப் படங்களில் நடித்த நடிகை ரோஜா ரமணி தற்போது எப்படி இருக்கிறார் என்பதை இந்த புகைப்படங்களை பார்த்து நீங்கள் நினைவு கூறலாம். அப்படி பார்க்கும் போது கண்டிப்பாக அவர் ஞாபகம் உங்களுக்கு ஏற்படுவதற்கு அதிகளவு வாய்ப்புக்கள் உள்ளது.

இதை எடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு நடிகை ரோஜா மணி பற்றிய விஷயங்களை நண்பர்களோடு ஷேர் செய்து பேசி வருகிறார்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam