வயித்தில் இருக்கும்போதே விஜய்க்கு அது தெரியும்.. எஸ்.ஏ சந்திரசேகர் ஓப்பன் டாக்..! நக்கல் சார் உங்களுக்கு..

தற்சமயம் தமிழில் அதிக ரசிக்கப்பட்டாளத்தைக் கொண்ட மிகப்பெரும் நடிகராக இருந்து வருபவர் நடிகர் விஜய். நடிகர் விஜய் ஒரு திரைப்படத்தில் நடித்தால் அந்த திரைப்படம் வெற்றி படமாகதான் இருக்கும் என்கிற அளவிற்கு விஜய் இருந்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் அதிக வசூல் சாதனை படைத்த ஒரு நடிகராகவும் விஜய் இருந்து வருகிறார். இப்படி இருக்கும் சமயத்தில் விஜய் தற்சமயம் சினிமாவில் இருந்து விலகுகிறார் என்பது பலருக்குமே பெரிய இழப்பாக இருந்து வருகிறது.

விஜய்க்கு அது தெரியும்

திரையரங்க முதலாளிகள் பலர் இது குறித்து கூறும் பொழுது விஜய் படம் வெளியாகும் பொழுது எங்களுக்கு நல்ல வசூல் கிடைக்கும். இப்பொழுது விஜய் போகிறார் என்பது எங்களுக்கே ஒரு பெரிய இழப்புதான் என்று கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் விஜய் அரசியலுக்கு சென்று அங்கே நிறைய சாதனைகள் செய்ய இருக்கிறார் என்பது ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது. இல்லை என்றால் இவ்வளவு கோடி சம்பளம் கிடைக்கும் சினிமாவை விட்டுவிட்டு விஜய் எதற்காக அரசியலுக்கு செல்ல போகிறார் என்பதுதான் பொதுமக்களின் கருத்தாக இருக்கிறது.

எஸ்.ஏ சந்திரசேகர் ஓப்பன் டாக்

இந்த நிலையில் விஜய் அடுத்து தன்னுடைய கட்சிக்கான மாநாடு நிகழ்ச்சிகளை நடத்துவதில் மிக தீவிரமாக இருந்து வருகிறார். தொடர்ந்து விஜய்யின் செயல் குறித்து அவரது தந்தை எஸ் ஏ சந்திரசேகரும் நிறைய பேட்டிகளில் பேசி வருகிறார்.

ஆரம்பத்தில் விஜய் கட்சி துவங்கியதில் புஷ்ஷி ஆனந்தை சேர்த்துக் கொண்டது குறித்து எஸ்.ஏ சந்திரசேகருக்கு அதிக வருத்தம் இருந்தது. நிறைய பேட்டிகளில் இது குறித்து எஸ்.ஏ சந்திரசேகர் பேசியும் இருந்தார். புஷ்ஷி ஆனந்தோடு விஜய் கூட்டு சேர்வது என்பது அரசியலுக்கு சரியாக இருக்காது என்பது எஸ்.ஏ சந்திரசேகரின் கருத்தாக இருந்தது.

இந்த நிலையில் அவர் ஆரம்ப காலகட்டங்களில் விஜய் தன்னுடைய வாழ்க்கை எப்படி இருந்தது என்பது குறித்து கூறியிருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது விஜய் அவரது அம்மாவின் வயிற்றில் இருக்கும் பொழுதே அவரது அம்மா பாடகியாக இருந்தார்.

நக்கல் சார் உங்களுக்கு

விஜய் வயிற்றில் இருந்த ஒன்பது மாதங்களும் கச்சேரிகளுக்கு சென்று பாடி கொண்டு தான் இருந்தார் விஜயின் அம்மா. அதனால் விஜய்க்கு பாட வருகிறது என்பது மற்றவர்களுக்கு வேண்டுமானால் அதிசயமாக இருக்கலாம்.

ஆனால் அவர் வயிற்றில் இருக்கும் பொழுதே பாடல்களை கேட்டு பாட கற்றுக் கொண்டார். அதேபோல விஜய் பிறந்த பிறகும் அவரது அம்மா கச்சேரிக்கு செல்வார். அப்போதெல்லாம் கச்சேரிக்கு சென்று நான் விஜய்யை மடியில் வைத்துக் கொண்டு அமர்ந்திருப்பேன்.

விஜய் அந்த பாடல்களை கேட்டுக் கொண்டிருப்பார் இப்படி விஜய்க்கு பாடல் என்பதை யாருமே கற்றுக் கொடுக்கவில்லை. அவராகவே சிறுவயதிலேயே கற்றுக் கொண்டார் என்று கூறி இருக்கிறார் எஸ்.ஏ சந்திரசேகர். அந்த பேச்சு தற்சமயம் விமர்சனத்தை பெற துவங்கியிருக்கிறது

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version