தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகராக சிறந்த விளங்கிக் கொண்டிருக்கும் நடிகர் விஜய் தற்போது டாப் ஹீரோ என்ற அந்தஸ்தில் இருக்கிறார்.
இவரது தந்தை இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகரின் உதவியால் தான் இவர் சினிமாவில் ஹீரோவாக நுழைய முடிந்தது.
விஜய்யின் தந்தை:
ஆரம்பத்தில் விஜய்க்காக பல பெரிய இயக்குனர்களின் வீட்டு வாசலில் சென்று எஸ் ஏ சந்திரசேகர் பட வாய்ப்பு கேட்டு அலைந்து திரிந்து தன் மகனை எப்படியாவது பெரிய ஹீரோவாக வேண்டும் என்ற கனவோடு சுற்றி திரிந்தார் .
தனது தந்தையின் முயற்சியால் படிப்படியாக விஜய் முன்னணி ஹீரோவாக அந்தஸ்தை பிடித்தார். இதில் அவரது திறமையும் இருக்கிறது என்றாலும் கூட ஆரம்பத்தில் அவருக்கு பெரும் உந்துதலாகவும் உதவியாகவும் இருந்தது என்னவோ தந்தை எஸ் ஏ சந்திரசேகர் தான்.
ஆனால், பின்னாளில் இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பின்னர் பேசிக் கொள்ளாமலே இருந்து விட்டார்கள் .
பெற்றோர்களை ஒதுக்கிய விஜய்?
இதனால் விஜய் தனது அப்பா அம்மாவை ஒதுக்கி விட்டதாக கூட செய்திகள் வெளியானது. அது மட்டும் இல்லாமல் தன் மனைவியையும் பிரிந்து தற்போது வாழ்ந்து வருவதாக சமீப நாட்களாக செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பாக பேசப்பட்ட வந்தது.
நடிகர் விஜய் தன் தீவிர ரசிகையான சங்கீதா என்ற பெண்ணை 1999 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
சங்கீதா லண்டனை சேர்ந்த இலங்கை தமிழ்ப்பெண். இவர் விஜய்யின் தீவிர ரசிகையாக விஜய் சந்திக்க அவரது வீட்டிற்கு வந்திருக்கிறார்.
அப்போது விஜய்யின் தந்தை மற்றும் தாய்க்கு சங்கீதாவை மிகவும் பிடித்து போக தனது மகனுக்கு இவரையே மனைவி ஆகிவிடலாம் என கூறி சம்மதம் பேசி பின்னர் மருமகளாக்கி கொண்டார்கள் .
இப்படித்தான் விஜய்யின் திருமணம் நடந்தது. பின்னர் இந்த ஜோடிக்கு ஜேசன் சஞ்சய் மற்றும் திவ்யா சேஷா என இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.
இதில் சஞ்சய் வெளிநாட்டில் இயக்குனராக படித்துக் கொண்டு தற்போதைய இயக்குனராக வேண்டும் என்ற ஒரு முழு மூச்சில் இறங்கி இருக்கிறார்.
மகள் திவ்யா சென்னையில் உள்ள பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் எஸ் ஏ சந்திரசேகர் சமீபத்திய பேட்டி ஒன்றில், விஜய்யுடனான சண்டை குறித்தும் தனது மருமகள் மற்றும் பேரப்பிள்ளைகளைப் பற்றியும் பல விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.
இதனால் தான் விஜய் பேசவில்லை:
நான் விஜய்யுடன் சண்டையிட்டு பேசிக்கொள்ளாமல் இருக்கிறேன் எனக் கூறுகிறார்கள் . ஒரு அப்பாவாக நான் விஜய் எங்கேயுமே விட்டுக்கொடுக்க கொடுத்ததில்லை.
எங்களுக்குள் சிறிய மனக்கசப்பு இருப்பது உண்மைதான். இருந்தாலும் விஜய்க்கு என்னதான் பிடிக்கும். ஆனால் இருவருமே பேசிக்கொண்டதே கிடையாது.
ஸ்கேல் வச்சு அடித்தேன். குழந்தையாகவே இப்பவும் இருக்கணும் அப்படின்னு நினைக்கிறது தவறுதலா இருக்கலாம் .ஆனால் என் குழந்தையிடம் உரிமை எடுத்தது தவறுதலாக போய்விட்டது என்றார்.
மேலும், மருமகள் சங்கீதா பற்றி பேசும்போது, என் மருமகள் பிள்ளைகள் விஷயத்தில் ரெஓம்பா அக்கறை கொண்ட அம்மாவாக நடந்து கொள்வார்.
அவர்களை பள்ளிக்கு அழைத்துச் செல்வது, ஹோம் ஒர்க் செய்ய வைப்பது, அவர்களது வாழ்க்கையில் அதிக கவனத்தை செலுத்துவது, அவர்களது கனவு லட்சியத்தில் கவனத்தை செலுத்தி என்ன ஆகவேண்டும் என்பதை தெரிந்துக்கொண்டு அதற்கான வழியை தேர்ந்தெடுத்து வழிகாட்டுவது இப்படி முழு அக்கறை எடுத்து பிள்ளைகளை பார்த்துக் கொண்டிருக்கிறார்.
சங்கீதா தான் அவர்களுக்கு எல்லாமே:
எங்கள் வீட்டுக்கு வந்தால் கூட பேரப்பிள்ளைகளிடம் ஏதேனும் கொடுத்தால் உடனே இருவரும் அவர்கள் அம்மாவை பார்ப்பார்கள்.
இந்த அளவுக்கு ஒழுக்கமாக சங்கீதா பிள்ளைகளை வளர்த்து வைத்திருக்கிறாள் என்றார். மேலும். விஜய்யின் மகள் திவ்யா சினிமாவில் நடிப்பாரா? என கேட்டதற்கு அது சங்கீதா கையில் தான் இருக்கிறது என்றார்.
அதேபோல் என்னுடைய பேரனும் நடிப்பு வேண்டாம் எனக் கூறி இயக்குனர் ஆகுவது தான் பிடிக்கும் என தற்போது இயக்குனராகி வருகிறார் என்னை போலவே அவரும் இயக்குனர் ஆகிவிட்டார் என பெருமையோடு கூறியிருக்கிறார்.