Sai Pallavi recently shared her heartfelt experience while working on the film “AMARAN.”
தீபாவளி அன்று வெளியாகி ஹிட் அடித்திருக்கும் அமரன் திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்த் வரதராஜன் ஆகவும் அவருடைய காதல் மனைவியாக நடிகை சாய் பல்லவி நடித்திருந்தனர்.
வீர மரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர் மேஜர் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த அமரன் திரைப்படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது.
கடந்த அக்டோபர் 31ஆம் தேதி ரிலீசான இந்த திரைப்படம் ஐந்து நாட்களில் 170 கோடி ரூபாய் வசூல் செய்த சாதனை படைத்திருக்கிறது. இந்நிலையில், இந்த படத்தின் வெற்றி விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.
இதில் நடிகை சாய் பல்லவி பேசிய பேச்சு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கின்றது. படம் பார்த்த பலரும் படத்தின் ஒட்டுமொத்த குழுவையும் பாராட்டினாலும் பெரும்பாலானோர் நடிகை சாய் பல்லவியின் நடிப்பை பாராட்டினார்கள்.
இந்நிலையில், சாய்பல்லவி பேசி இருப்பது ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்திருக்கின்றது. அவர் பேசியதாவது, ஒரு சில படங்கள் மட்டுமே மிகவும் சிறப்பானதாக அமையும்.
எனக்கு அப்படி அமைந்த படம் தான் அமரன். இந்த படத்தில் பணியாற்றிய ஒவ்வொரு குழுவும் தங்களுடைய பணியை மிகச் சிறப்பாக செய்துள்ளார்கள். சில படங்கள் செய்யும் போது தான் வசூலை கடந்து நமக்கு ஒரு ஆத்ம திருப்தி கிடைக்கும்.
நாம் மக்களுக்கு சொல்ல வேண்டியதை சரியாக சொல்லி விட்டோமா..? என்ற எதிர்பார்ப்பு நிறைவேறும். மக்கள் அதனை சரியாக உள்வாங்கி கொள்வார்களா..? என்பதில் மிகுந்த கவனமாக இருப்போம்.
அப்படியான படம் தான் அமரன். இந்த படத்தினை பார்த்து விட்டு என்னுடைய தோழி ஒருவர் எனக்கு மெசேஜ் செய்திருந்தார்.
அவர் எத்தனை நாட்களாக மறைந்து போன தன்னுடைய அப்பாவை திட்டிக் கொண்டே இருந்ததாகவும். ஆனால், இந்த படத்தினை பார்த்த பிறகு என்னுடைய அம்மாவின் கண்ணோட்டத்தில் இருந்து என்னுடைய தந்தையை பார்த்த போது தான் அப்பாவின் மீது இருந்த கோபம் முற்றிலுமாக மறைந்துவிட்டது எனவும் பேசியிருக்கிறார்.
படத்தைப் பார்த்த பலரும் என்னிடம் பேசவில்லை. அதற்கு மாறாக அனைவரும் என்னை கட்டிப்பிடித்து அழுதனர் என கூறினார். இவருடைய இந்த பேச்சு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கின்றது.
Summary in English : Sai Pallavi recently shared her heartfelt experience while working on the film “AMARAN.” In her reflections, she expressed a deep connection to the narrative and characters, highlighting the emotional depth that the film encapsulates. The actress emphasized that her role allowed her to explore a range of complex emotions, making it a truly enriching experience.