தற்சமயம் வளர்ந்து வரும் தமிழ் நடிகைகளின் மிக முக்கியமானவர் நடிகை சாய் பல்லவி. சாய் பல்லவி ஆரம்பத்தில் இருந்தே கதைகளை தேர்ந்தெடுத்துதான் நடித்து வருகிறார்.
அதனால்தான் அவரால் குறைந்த படங்களில் நடித்தால் கூட இவ்வளவு பெரிய உச்சத்தை தொட முடிந்து இருக்கிறது. ஆரம்பத்தில் அவர் நடித்த பிரேமம் திரைப்படத்திலிருந்து அவர் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படத்திலும் கதாநாயகிக்கு முக்கிய கதாபாத்திரம் இருப்பதை பார்க்க முடியும்.
ஒரு வகையில் தீ*ரவாதிகள்தான்
பிரேமம் திரைப்படத்தில் கூட மூன்று கதாநாயகிகள் படத்தில் இருந்தாலும் அதில் முக்கிய கதாநாயகியாக மலர் டீச்சர் என்கிற சாய்பல்லவி கதாபாத்திரம் தான் இருக்கும். அதே மாதிரி மாரி 2 திரைப்படத்திலும் அவரின் ஆட்டோ ஆனந்தி என்கிற கதாபாத்திரம் தனிப்பட்ட வரவேற்பு பெற்றிருக்கும்.
பெரும்பாலும் கதைகளில் தனக்கு நல்ல கதாபாத்திரம் இருக்கிறதா என்பதை தேர்ந்தெடுத்து நடித்தார் சாய் பல்லவி. அதனால் அவருக்கு வரவேற்பும் அதிகமாக இருந்து வருகிறது. தற்சமயம் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அமரன்.
சர்ச்சையை கிளப்பிய சாய்ப்பல்லவி
இந்த திரைப்படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வருகிறார். நடிகர் கமல்ஹாசன் இந்த திரைப்படத்தை தயாரித்திருக்கிறார். ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். இந்த நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக சாய்பல்லவி நடித்திருக்கிறார்.
முகந்த் வரதராஜன் என்கிற ராணுவ வீரரின் உண்மை வாழ்க்கையை தழுவி இந்த கதை படமாக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தில் ராணுவம் மற்றும் தேசப்பற்று குறித்த நிறைய விஷயங்கள் பேசப்பட்டிருக்கின்றன. இது குறித்து விவரமாக ஒரு பேட்டியில் பேசியிருந்தார் சாய் பல்லவி.
கடுப்பான நெட்டிசன்கள்
அதில் அவர் கூறும் பொழுது தீவிரவாதிகள் என்று நாம் பார்க்கப் போனால் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு வருபவர்களை நாம் எப்படி தீவிரவாதிகளாக பார்க்கிறோமோ அதே போல இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு செல்லும் இராணுவ வீரர்களையும் அந்த நாட்டினை சேர்ந்தவர்கள் தீவிரவாதிகளாக தான் பார்ப்பார்கள் என்று ஒரு விஷயத்தை கூறுகின்றார்.
இது அதிக சர்ச்சையாக துவங்கியிருக்கிறது இதனை தொடர்ந்து சாய் பல்லவி மீது எதிர்மறையான விமர்சனங்கள் வர துவங்கியிருக்கின்றன.