நடிகை சமந்தாவின் விவாகரத்துக்கு கேடிஆர் தான் காரணம் என்று தெலுங்கானா பெண் அமைச்சர் ஒருவர் தெரிவித்தது மிகப்பெரிய அதிர்வல்களை ஏற்படுத்தி இருக்கிறது.
இதற்கு சமந்தாவின் முன்னாள் கணவர் நாகசைதன்யா கண்டனம் தெரிவித்திருக்கிறார். குறிப்பாக நடிகர் சமந்தாவின் மாமனாரும் நடிகருமான நாகார்ஜுனாவும் தன்னுடைய twitter பக்கத்தில் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து இருக்கிறார்.
தலைப்புச் செய்திகளுக்காக பிரபலங்களின் வாழ்க்கையை பயன்படுத்திக் கொள்வதும் சுரண்டுவதும் வெட்கக்கேடானது என்று அவர் கடுமையாக விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார்.
பிரபல நடிகர் நாகைதன்யாவும் நடிகை சமந்தாவும் 7 ஆண்டுகளாக காதலித்து கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டிருந்ததில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2021 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
தற்போது நாகசைய்தன்யா நடிகை சோபிதா துலிபாலாவை திருமணம் செய்து கொண்டிருக்கிறார். நடிகை சமந்தா வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
மேலும் மையோசைட்டிஸ் சென்ற ஒரு வித நோயினாலும் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், அரசியல் நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற தெலுங்கானா அமைச்சர் கொண்ட சுரேகா பல பெண்கள் கே டி ஆரின் அராஜகத்தால் விரைவிலேயே திருமணம் செய்து கொள்கிறார்கள் திருமண வாழ்க்கையில் இருந்து பிரிந்தும் விடுகிறார்கள்.
சினிமா நடிகைகளும் இதற்கு விதிவிலக்கு அல்ல. போதை பொருட்களை உபயோகிக்கும் கே டி ஆர் பல பார்ட்டிகளை நடத்துகிறார். அதில் நடிகைகளை அழைத்து தவறாக நடந்து கொள்கிறார். சமந்தாவின் விவாகரத்துக்கும் இதுதான் காரணம்.
இது அந்த குடும்பத்தில் அனைவருக்கும் தெரியும் எனது பேசியிருந்தது மிகப்பெரிய அதிர்வலைகளை கிளப்பி இருக்கிறது.
இந்நிலையில், ட்விட்டர் பதிவில் உங்களுடைய தனிப்பட்ட அரசியல் லாபத்திற்காக அரசியலில் இருந்து விலகி இருக்க கூடிய திரை கலைஞர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை பயன்படுத்தாதீர்கள் இது வெட்கக்கேடானது இது முறை கிடையாது ஒரு பெண்ணாக முக்கிய பொறுப்பில் இருக்கும் கொண்டா சுரேகா தான் பேசிய இந்த பேச்சை திரும்ப பெற வேண்டும் எங்களுடைய தனி உரிமை மதிக்கப்பட வேண்டும் என்று கடுமையான விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார் நடிகர் நாகர்ஜுனா.
தொடர்ந்து, நாக சைதன்யா கூறியிருப்பதாவது, எங்களுடைய விவாகரத்து முடிவு என்பது எளிமையானது அல்ல மிகுந்த வலிகள் நிறைந்தது துரதிஷ்டவசமானது. வாழ்க்கை எங்களை அப்படி ஒரு முடிவுக்குள் தள்ளி விட்டதை நினைத்து நான் இப்போதும் மனம் வருந்துகிறேன்.
ஆனால், இந்த முடிவு எங்கள் இருவருக்கும் தெரிந்தே தான் நடந்தது. இருவரும் பரஸ்பரம் விவாகரத்து பெற்று இருக்கிறோம். எங்களுடைய விவாகரத்து பற்றி தவறான தகவல்களை பொதுவெளியில் பரப்ப வேண்டாம்.
எங்களை அமைதியாக வாழ விடுங்கள். எங்களுடைய வாழ்க்கை நகர்வுகளை நாங்கள் கவனிக்க வேண்டியிருக்கிறது. எங்களுடைய தனி உரிமை சுதந்திரத்தையும் மதித்து நீங்கள் சொன்ன இந்த தகவலை திரும்ப பெற வேண்டும்.
எங்களை குறித்து இப்படி போலியான தகவல்களை ஒரு அமைச்சரே பேசி இருப்பது மிகுந்த வேதனையை கொடுக்கிறது, ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கிறது. ஒவ்வொரு பெண்ணுக்கும் சரியான பாதுகாப்பும் மரியாதையும் தேவை.
ஒரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையில் அவர் பிரபலமாக இருக்கிறார் என்ற ஒரே காரணத்திற்காக வாய்க்கு வந்ததெல்லாம் விமர்சிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என நடிகர் சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யா தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார்.