நடிகை சமீரா ரெட்டி, தமிழில் முக்கிய நடிகர்களுடன் நடித்தவர். சூர்யாவுடன் வாரணம் ஆயிரம், அஜீ்த்துடன் அசல், நடுநிசி நாய்கள், விஷாலுடன் வெடி, மாதவன், ஆர்யா நடித்த வேட்டை போன்ற படங்களில் சமீரா ரெட்டி நடித்திருந்தார். வெடி படத்தில், சமீரா ரெட்டி மாதவனுக்கும், ஆர்யாவுக்கு அமலாபால் ஆகியோர் ஜோடியாக நடித்திருந்தனர்.
சமீரா ரெட்டி, திருமணம் செய்து கொண்டு, குழந்தைகளுக்கு தாயான பின்பு, சினிமாவில் நடிப்பதை குறைத்துக்கொண்டார். குறிப்பாக, அவர் மற்ற நடிககைகளை போல இல்லாமல், சமீரா ரெட்டி, தலையில் வெள்ளை முடியுடன் அதிக மேக்கப் இல்லாமல், இயல்பான தோற்றத்தில் பொது இடங்களுக்கு வருவது பலரையும் ஆச்சரியப்படுத்துகிறது.
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய சமீரா ரெட்டி, உடல் ஆரோக்கியம் குறித்து பல விஷயங்களை அவரது சொந்த அனுபவத்தில் இருந்து பகிர்ந்திருக்கிறார்.
நடிகையாக பல படங்களில் நடித்த நான், இன்று தாயாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். தலைமுடி வெள்ளையாவதோ, உடல் நிறம் குறித்தோ யாரும் கவலைப்பட தேவையில்லை. அப்படி, மற்றவர்களை பார்க்கவும் கூடாது. அது அநாகரிகம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
குழந்தை பிறந்தால், வயிற்றின் மீது கோடுகள் தோன்றும். அதையெல்லாம், நா்ன் பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை.
அழகை பற்றி கவலைப்படாமல், உடல் ஆரோக்கியத்தை பற்றி அக்கறை கொள்வது முக்கியம். ஆரோக்கியத்துவம் பெண்கள் முக்கியத்துவம் தர வேண்டும். இப்போதெல்லாம் பலவிதமான உணவு முறைகள் குறித்து, சமூக வலைதளங்களில் பட்டியல் வருகிறது. அவற்றை கவனமின்றி பயன்படுத்தக் கூடாது. அதில், நம் உடல் தகுதிக்கு ஏற்ப, உணவு அட்டவணையை பின்பற்றுவது மிக முக்கியம்.
நம் உடலுக்கு மொழி உள்ளது; எது வேண்டும், வேண்டாம் என, அதுவே தீர்மானிக்கும். அதை நாம் கேட்க வேண்டும். நம் உடலோடு நாம் பேச வேண்டும். உடல் சொல்வதை நாம் கேட்க வேண்டும்.
முதலில் கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட பழக வேண்டும். நம்மில் பலரும் மிக வேகமாக, அவசரமாக, நிறைய அள்ளி சாப்பிடும் பழக்கத்தில் இருக்கிறோம். என் அப்பா உலர் பழங்கள் சாப்பிட எனக்கு கற்றுக்கொடுத்தார். என் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவு பழக்கத்தை நான் கற்றுக்கொடுக்கிறேன்.
நொறுக்குத்தீனி என்னும் குப்பையால் வயிற்றை நிரப்பக்கூடாது என்பதில் பெரியவர்கள் கவனமாக இருந்தால், குழந்தைகளும் அதை பின்பற்றி நடப்பார்கள்.
பெண்கள் ஆரோக்கியம் என்பது, குடும்பத்தின் ஆரோக்கியம். எனவே, ஆரோக்கியத்துக்கு பெண்கள் முதலிடம் தர வேண்டும், என்று சமீரா ரெட்டி நீண்ட விளக்கமே கொடுத்திருக்கிறார்.
டயட்டீசன் படித்த டாக்டர்கள்தான் இதுபோன்ற தகவல்களை கூறுகிற நிலையில், சமீரா ரெட்டி டாக்டர்களையே மிஞ்சும் வகையில் கூறிய அறிவுரையை கேட்டு, ரசிகர்கள் பலரும் அசந்து போய் கமெண்டுகளில் பாராட்டி வருகின்றனர்.