இந்த டிவி சீரியல்களை டைரக்ட் செய்தவரா சமுத்திரக்கனி? ஆச்சரியப்படும் ரசிகர்கள் 

இயக்குநர் சமுத்திரக்கனி, தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராகவும் அசத்திக் கொண்டிருக்கிறார். நடிகர் சசிக்குமார் இயக்கத்தில், சுப்ரமணியபுரம் படத்தில், வில்லனாக அறிமுகமான சமுத்திரக்கனி, சசிக்குமாரை ஹீரோவாக வைத்து, நாடோடிகள் படத்தை தந்தார். நடிப்பிலும், இயக்கத்திலும் இரண்டுமே சமுத்திரக்கனிக்கு முத்திரை பதித்த படங்களாக அமைந்தன. 

அப்பா, தொண்டன், நாடோடிகள் 2, நிமிர்ந்து நில், போராளி உள்ளிட்ட படங்களை இயக்கினார்.  சாட்டை, ரஜினி முருகன், ஆர்ஆர்ஆர், ஏலே, வேலையில்லா பட்டதாரி, வேலை இல்லா பட்டதாரி 2, விசாரணை, சங்கத்தலைவன், காலா உள்ளிட்ட படங்களில், தனது சிறப்பான முத்திரையை பதித்திருந்தார்.ஹீரோ, வில்லன் நடிப்பு மட்டுமின்றி, அப்பா கேரக்டரிலும் குணச்சித்திர நடிப்பை வழங்கி வருகிறார். 

சமுதாய கருத்துகளை சொல்லும் படங்களில் நடிப்பதிலும், அந்த சிந்தனைகளை மையமாக கொண்ட படங்களை இயக்குவதிலும் ஆர்வம் கொண்டவராக சமுத்திரக்கனி இருப்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் ஒரு டப்பிங் ஆர்ட்டிஸ்ட் என்பது, பலருக்கும் தெரியாத உண்மை.

தமிழ் சினிமாவுக்குள் அறிமுகமாவதற்கு முன், சமுத்திரக்கனி டிவி சீரியல் ஒன்றில் சில காட்சிகளில் நடித்திருக்கிறார். வாலிபராக இருந்த காலகட்டத்தில், இயக்குநர் சிகரம் கே. பாலசந்தரிடம் உதவி இயக்குநராக பணிசெய்த சமுத்திரக்கனி, பல டிவி சீரியல்களில் பணிபுரிந்திருக்கிறார்.  

இப்போது, தமிழ் சினிமாவில் அக்கா, அண்ணி, மருமகள் கேரக்டர்களில் பிஸியாக இருக்கும் தேவதர்ஷினி தான் அந்த நாடகத்தில் நாயகி, நாயகன், டான்ஸ் மாஸ்டர் ராம்ஜி தம்பதியாக நடித்திருப்பர். கணவன், மனைவிக்குள் ஏற்படும் குட்டி கலாட்டாக்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த காமெடி சீரியல், ரசிகர்களிடையே மிக பிரபலமானது. 

கடந்த 1998ல் துவங்கப்பட்ட இதன் முதல் சீசன் ஹிட் ஆனதால், அடுத்து 2001ல், 2ம் சீசன் ஒளிபரப்பானது. இந்த சீசனில் வந்த எபிசோடுகளில் சில காட்சிகளில் சமுத்திரக்கனி நடித்திருப்பார். 

அதுபோல், அதே ஆண்டில் கவிதாலயா தயாரித்த ஒரு கதவு திறக்கிறது, சீரியலிலும் சமுத்திரக்கனி குணச்சித்திர கேரக்டரில் நடித்திருப்பார். கடந்த 2003ல், உன்னை சரணடைந்தேன் என்ற படத்தில், உதவி இயக்குநராக அறிமுகமான சமுத்திரக்கனி, அடுத்து ‘நெறஞ்ச மனசு’ என்ற படத்தை இயக்கினார்.  அது படுதோல்வி அடைந்தது.

மீண்டும் சீரியலில் தன் கவனத்தை செலுத்திய சமுத்திரக்கனி, 2007ல் அரசி என்ற ராதிகா நடித்த தொடரை இயக்கினார். ரம்யாகிருஷ்ணன் பங்கேற்று நடத்திய தங்கவேட்டை விளையாட்டு ஷோ வின் இயக்குநர் சமுத்திரக்கனிதான் என்பது பலருக்கும் தெரியாது. அண்ணி மெகா தொடரை இயக்கியதும் சமுத்திரக்கனியே தான். 

இன்று ராஜமவுலி போன்ற இயக்குநர்களே தேடி வந்து நடிக்க அழைப்பு விடும் சமுத்திரக்கனி சீரியல் டிவி நடிகராக, சீரியல் இயக்குநராக தனது சினிமா பயணத்தை துவக்கியவர் என்பது, அவரது ரசிகர்களை ஆச்சரியப்பட வைக்கிறது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam