தமிழ் திரை உலகில் மட்டுமல்லாமல் ரசிகர்களின் மனதிலும் தனக்கு என்று ஒரு இடம் பிடித்து எதிர்கால தமிழகத்தின் முதல்வராக வரக்கூடிய தகுதி தளபதி விஜய்க்கு மட்டுமே உள்ளது என்று ரசிகர்கள் மட்டுமல்லாமல் வெகு ஜனங்களின் மத்தியிலும் பேச்சுக்கள் எழுந்துள்ளது.
இந்நிலையில் அண்மையில் இவர் கோட் திரைப்படத்தில் நடித்து முடித்த கையோடு தளபதி 69 படத்துடன் திரை உலகிற்கு முழுக்குப் போட்டுவிட்டு முழு நேர அரசியலில் களம் இறங்கி தமிழக மக்களுக்காக பணிபுரிய வர வேண்டும் என்ற எண்ணத்தில் தமிழக வெற்றிக்கழகம் எனும் கட்சியை ஆரம்பித்து இருக்கிறார்.
இது மாதிரி யாருமே பண்ணல..
இந்நிலையில் திரைப்படத் துறையில் மக்கள் மத்தியில் பிரபலமான எம்ஜிஆர், ஜெயலலிதா, கேப்டன் போன்றவர்கள் தமிழகத்தின் முதல்வராகவும் எதிர்க்கட்சித் தலைவராகவும் பணியாற்றி இருக்கக்கூடிய வேளையில் அந்த தகுதி தற்போது விஜய்க்கு உள்ளது என்று பலராலும் விமர்சிக்கப்படுகிறார்.
மேலும் தனது அரசியல் பயணத்தில் நேற்று விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு அதை புறக்கடனப்படுத்தக் கூடிய வகையில் மிகச் சீரும் சிறப்புமாக நடந்தது என்று சொல்லலாம்.
இந்நிலையில் தமிழ் திரை உலகில் இயக்குனராக அறிமுகமாகி நடிகராக தற்போது வலம் வரும் நடிகர் சமுத்திரக்கனி இடம் தளபதி விஜயின் கட்சி பற்றியும் அவரது அரசியல் பிரவேசம் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் அளித்த பதிலை கேட்டு பலரும் வியப்பில் ஆழ்ந்திருக்கிறார்கள்.
அப்படி விஜயைப் பற்றி சமுத்திரக்கனி என்ன சொன்னார். விஜயின் கட்சி எந்த அளவு அரசியலில் களை கட்டும் எதிர்க்கட்சியினருக்கு டப் கொடுக்குமா? அல்லது டப்பா டான்ஸ் ஆடுமா? என்பது போன்ற படு சூடான விஷயங்களை புட்டு புட்டு வைத்து அனைவரது விழியும் அகல விரிக்க வைத்து விட்டார்.
அந்த வகையில் நடிகர் சமுத்திரக்கனி முதலில் விஜயின் தைரியத்திற்கு என்னுடைய சல்யூட் என்று சொல்லி அவரது கருத்துக்களை வெளிப்படுத்தியது அனைவரையும் கவரக்கூடிய வகையில் இருந்தது.
விஜய் அரசியல் குறித்து சமுத்திரகனி ஒரே போடு..
அந்த வகையில் அவர் பேசும் போது ஒரு நடிகர் ஒரு படத்திற்கு 200 கோடி அளவு சம்பளம் பெறக்கூடிய விஷயத்தை விடுத்து மக்களுக்காக அரசியலில் களம் இறங்குகிறேன் என்று சொன்னது எவ்வளவு பெரிய விஷயம் தெரியுமா? என்ற கேள்வியை முன் வைத்தார்.
இவரைப் போலவே கல்யாண் சாரும் தன் கையில் மூன்று படங்களை வைத்திருந்தாலும் நடிக்க மாட்டேன் என்று சொல்லவில்லையே. ஆனால் எவ்வளவு தைரியம் இருந்தால் நடிக்க மாட்டேன். மக்களுக்காக இனி நான் பணிபுரிய போகிறேன் என்று சொல்லி இருப்பார் என யோசித்துப் பாருங்கள் என அனைவரையும் சிந்திக்க வைத்தார்.
அவ்வளவு ஏன் தமிழகத்தில் இருக்கின்ற நடிகர் பலரும் கட்சிகளை ஆரம்பித்து அரசியலில் களம் காண்பேன் என்று சொல்லி இருந்தாலும் நடிப்பை நிறுத்துகிறேன் என்று எவரும் சொல்லவில்லையே அந்த தைரியம் யாருக்கும் இது வரை வரவில்லையே ஆனால் அது விஜய்க்கு மட்டும் தான் வந்துள்ளது என்று பெருமிதமாக கூறியிருக்கிறார்.
எனவே அவரின் இந்த உன்னதமான தைரியத்துக்கு முதலில் என்னுடைய சல்யூட்டை தெரிவித்துக் கொள்கிறேன் என அந்த பேட்டியில் கூறி பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து இந்த விஷயமானது இணையம் முழுவதும் படு வேகமாக காற்று தீ போல் பரவி வருகிறது.