நமக்கெல்லாம் அது நடக்காதா சார்.. இதயமே நொறுங்கி போச்சு.. நடிகர் விஜய் குறித்து ஓப்பன் ஸ்டேட்மெண்ட் கொடுத்த சனம் ஷெட்டி

தற்சமயம் தமிழ் சினிமாவில் உள்ள டாப் நடிகர்களில் மிக முக்கியமானவராக நடிகர் விஜய் இருந்து வருகிறார். பெரும்பாலும் விஜய் நடிக்கும் திரைப்படங்கள் என்றாலே வெற்றி படங்கள் தான் என்கிற நிலை சினிமாவில் இருந்து வருகிறது.

அப்படி இருந்துமே கூட இவ்வளவு பெரிய மார்க்கெட்டை விட்டு விட்டு அரசியலுக்கு செல்வதற்கு தயாராகிவிட்டார் நடிகர் விஜய். ஒரு வகையில் இது விஜயின் ரசிகர்களுக்கு அதிக வருத்தத்தை அளித்து வருகிறது. இருந்தாலும் கூட அரசியல்களில் விஜய் எப்படி இருக்க போகிறார் என்பது குறித்து தமிழ்நாடு எதிர்பார்ப்புடன் இருந்து வருகிறது.

நமக்கெல்லாம் அது நடக்காதா சார்

மேலும் தமிழ் சினிமாவிலேயே அதிகமான ரசிகர்களைக் கொண்ட ஒரு நடிகராக விஜய்தான் இருந்து வருகிறார். அதனால் அவர் அரசியலுக்கு வரும் பட்சத்தில் அவருக்கு கண்டிப்பாக அதிக வாக்குகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

இதற்கு நடுவே விஜய் நடிக்க போகும் அவரது கடைசி படம் ஆன தளபதி 69 திரைப்படம் குறித்து நிறைய எதிர்பார்ப்புகள் மக்கள் மத்தியில் இருந்து வருகின்றன. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே துவங்கியிருக்கிறது.

இதயமே நொறுங்கி போச்சு..

இந்த படத்தை ஹெச் வினோத் இயக்குகிறார். படத்தில் பூஜா ஹெக்டே மற்றும் மமீதா பைஜூ இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர் இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் தனக்கு வாய்ப்பு கிடைக்காதது குறித்து சனம் செட்டி பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார்.

அதில் அவர் கூறும் பொழுது நமக்கு எல்லாம் வாய்ப்பே வராதா விஜய் சார் என்று போட்டு கண்ணீர் விட்டு அழுவது போன்ற ஸ்மைலி ஒன்றை போட்டு இருக்கிறார். மேலும் இதயம் நொறுங்கியது போன்ற ஸ்மைலியையும் போட்டு இருக்கிறார்.

ஸ்டேட்மெண்ட் கொடுத்த சனம் ஷெட்டி

மேலும் அவர் கூறும் பொழுது சரி அது பரவாயில்லை பூஜா ஹெக்டே மற்றும் தளபதியின் ஜோடி நல்லாதான் இருக்கு. வாழ்த்துக்கள் இயக்குனர் ஹெச் வினோத் சார் என்று பதிவிட்டு இருக்கிறார் சனம் ஷெட்டி. ஒருவேளை சனம் செட்டிக்கு இதற்கு முன்பே படத்தில் வாய்ப்பு தருவதாக கூறி பிறகு கொடுக்கவில்லை போல அதனால் தான் அவர் இப்படி பதிவிட்டு இருக்கிறார் என்று கூறி வருகின்றனர் நெட்டிசன்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version