இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் விஷால், சந்தானம், மனோபாலா, மணிவண்ணன் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகி கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்குப் பிறகு திரைக்கு வந்திருக்கிறது மதகஜராஜா திரைப்படம்.
இந்த படத்திற்கு ரசிகர் குடும்பத்தில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு சிரித்து மகிழக்கூடிய ஆர்ப்பாட்டமான அமர்க்களமான ஒரு திரைப்படம் என்ற விமர்சனத்தை இந்த திரைப்படம் பெற்றிருக்கிறது.
அடுத்த அடுத்த நாட்களில் இந்த படத்திற்கு வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது ஒரு பக்கம் இருக்க இந்த படம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய நடிகர் சுந்தர் சி படத்தில் பணியாற்றிய நடிகர்கள் மணிவண்ணன், மனோபாலா, தற்போது மறைந்து விட்டார்கள் என்பதை வேதனை பொங்க பேசியிருந்தார்.
அவர்களை எல்லாம் மீண்டும் பெரிய திரையில் பார்க்கும்போது மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது என்றும் பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர் நடிகர் சந்தானம் குறித்தும் சில விஷயங்களை பதிவு செய்திருந்தார்.
நடிகர் சந்தானம் குறித்து கேள்வி எழுப்பிய போது நான் இதை சொன்னால் சந்தானம் கோவிச்சிக்குவாரு.. இருந்தாலும் சொல்றேன்.
சந்தானம் மீண்டும் காமெடியான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும். ஒரு காமெடியனாக சந்தானத்தை நாங்கள் ரொம்ப மிஸ் பண்றோம். வி மிஸ் யூ சந்தானம்.
விரைவில் உங்களை காமெடியான கதாபாத்திரத்தில் பார்க்க ஆவலாக இருக்கிறோம் என கூறியிருக்கிறார்.