Site icon Tamizhakam

உன்ன மாதிரி இது LOCAL SAREE இல்ல.. இது COSTLY பட்டு புடவை.. பண திமிரில் பேசிய பெண்..!

neeya naana saree lovers vs non saree lovers

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் புடவையை விரும்பக் கூடிய பெண்கள் vs புடவையை விரும்பாத பெண்கள் இடையே விவாதம் நடத்தப்பட்டது.

இதில் புடவை விரும்பக்கூடிய பெண்கள் ஏன் புடவையை விரும்புகிறோம் என்று பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார்கள்.

அதேசமயம் புடவையை விரும்பாத பெண்கள் ஏன் புடவையை நாங்கள் விரும்புவதில்லை என பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார்கள்.

ஆனால், இதில் குறிப்பிடத்தக்க விஷயமாக ஒரு பெண்மணி பேசியது நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபிநாத்தை மட்டுமில்லாமல் நிகழ்ச்சியை பார்த்த ரசிகர்களையும் கடுப்பாக்கியது என்று சொல்லலாம். அ

ப்படி அந்த பெண் என்ன பேசினார்..? என்றால், நான் ஒரு புடவை வாங்குகிறேன்.. எனக்கு பிடித்து.. நான் விரும்பி.. அது எவ்வளவு பெரிய தொகையாக இருந்தாலும் அந்த புடவையை நான் வாங்குகிறேன்.. ஆனால், அதே போன்ற ஒரு புடவையை வேறு ஒரு பெண் கட்டியிருப்பதை பார்த்தால் நான் வாங்கியா அந்த புடவையை நான் கட்ட மாட்டேன் என கூறினார்.

இதை கேட்ட கோபிநாத் ஆச்சரியமானார். உங்களுக்கு பிடித்து தான் அந்த புடவையை வாங்கினீர்கள்..? ஆனால் அதே மாதிரி புடவையை வேறு ஒரு பெண் அணிந்தார் என்றால் அதனை நீங்கள் அணிய மறுக்கிறீர்கள்..? இதற்கு என்ன காரணம்..? என கேள்வி எழுப்பினார்.

neeya naana saree lovers vs non saree lovers

அதற்கு பதில் அளித்த அந்த பெண்மணி நான் தேர்வு செய்த அதே டிசைன் கொண்ட புடவையை இன்னொரு பெண்ணும் கட்டி இருக்கிறார் என்றால்..? அந்தப் பெண் என்னைவிட வசதியில் குறைந்தவராக இருக்கும்போது.. ஒரு துப்புரவு தொழிலாளியாக இருக்கலாம்.. அல்லது என்னைவிட வசதி குறைந்தவராக இருக்கலாம். .அவரும் அந்த புடவையை கட்டியிருக்கிறார் எனும் பொழுது எனக்கு என் மீது வெறுப்பு வரும்.

ஒரு துப்புரவு தொழிலாளிக்கு இருக்கும் ரசனையை தான் நான் கொண்டிருக்கிறேனா..? என்னுடைய ரசனை இவ்வளவு கீழ்த்தரமாக போய்விட்டதா..? என்ற எண்ணம் எனக்குள் வரும் என பேசினார்.

இது, இந்த நிகழ்ச்சியை பார்த்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதாவது, உங்களை விட தரத்தில் தாழ்ந்த ஒரு பெண் வசதி வாய்ப்பில் தாழ்ந்த ஒரு பெண் நீங்கள் தேர்வு செய்து வைத்திருந்த புடவை போலவே அணிந்திருக்கிறார் என்றால்..? உங்களுக்கு குற்ற உணர்ச்சி ஏற்படுகிறது.. எனும்பொழுது தவறு உங்களுடைய மனதில் இருக்கிறது.

நீங்கள் மோசமான மனநிலையில் இருக்கிறீர்கள் இதை அவ்வளவு சாதாரணமாக நீங்கள் பொதுவெளியில் சொல்கிறீர்கள்..? இது ஒரு மன வியாதி.. என நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபிநாத் கடுமையாக விளாசினார்.

மேலும் உங்களுடைய மனநிலையை நீங்கள் மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் அந்த பெண்மணியை கடுமையாக எச்சரிக்கையும் செய்தார். இந்த நிகழ்ச்சியை பார்த்த ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

அவர்கள் கூறியதாவது,

எனக்கு 56 வயதாகிறது நான் ஒரு அரசு ஊழியர் என்னுடைய கணவர் துணை ஆணையராக இருக்கிறார் என்னிடம் இருப்பது 15 புடவைகள் தான்

பெண் நானும் ஒரு பெண் தான் தோணுது சேலை மீது அதிக மோகம் இல்லை அதுவும் விலை அதிகமான சேவைகள் மீது சுத்தமாக எனக்கு ஆசை கிடையாது வாங்க முடிந்தும் வாங்க மறுக்கும் பெண்கள் அணியில் நான் இருக்கிறேன்

நீங்க வசதி வாய்ப்பில் பணக்காரங்களா இருந்தாலும் மனதளவில் பிச்சைக்காரர்களாக இருக்கிறீர்கள். நாங்கள் வசதி இல்லை என்றாலும் மனதளவில் கோடீஸ்வரராக இருக்கிறோம்.

ஒரு ஏழை பெண் நீங்கள் தேர்வு செய்த புடவை போலவே அணிந்திருந்தால் அதை அணிய மறுக்கிறீர்கள் எனும் பொழுது நீங்கள் ஒரு பரம ஏழை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்

துப்புரவு தொழிலாளி சுத்தம் செய்யவில்லை என்றால் நீங்களும்.. நானும்.. ஏன் ஊரே நாறிவிடும்.. அவர்கள் ஒரு புடவை கட்டி இருந்தால் அந்த புடவையை நான் கட்ட மாட்டேன் என்று சொல்கிறீர்கள். அப்படி என்றால் துப்புரவு தொழிலாளி செய்யக்கூடிய எந்த வேலையையும் வேண்டாம் என்று உங்களால் தவிர்க்க முடியுமா..?

இப்படி பலரும் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். இது குறித்து உங்களுடைய கருத்து என்ன என்பதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Summary in English : Recently, the popular talk show Neeya Naana sparked quite a debate that got everyone talking: Saree Lovers vs. Non-Saree Lovers! It was a lively discussion where passionate saree enthusiasts shared their love for this timeless garment, while those who prefer other styles voiced their opinions too.

Exit mobile version