தமிழ் சினிமாவை பொறுத்தவரை நாம் பார்க்கும் திரைப்படங்கள் என்பது மூன்றில் ஒரு பங்குதான். ஒரு திரைப்படம் உருவாகி வெளியாவது வரை வந்து வெற்றி பெறும் படங்கள் மட்டும் தான் நமது கண்ணுக்கு தெரிகின்றன.
அவற்றைத் தாண்டி கதையாகவே வெளியாகாமல் போன கதைகள் பல இருக்கும். அதேபோல படபிடிப்புக்கு வந்த பிறகு சில பிரச்சனைகளால் தடைப்பட்டு போன படங்கள் நிறைய உண்டு.
அதேபோல சென்சருக்கு சென்று சென்சாரால் தடை செய்யப்பட்ட படங்களும் உண்டு. இப்படி சில விஜயகாந்த் திரைப்படங்கள் கூட சென்சார் அமைப்பினரால் தடை செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
கமல் ரஜினியை வச்சி யோசிச்ச கதை
இப்படி எல்லாம் இருக்கும் பொழுது பெரிய நடிகர்களை வைத்து யோசிக்கும் கதைகள் படமாகாமல் போவதும் நடந்து இருக்கின்றன. இப்படியாக ஒரு கதை ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனை வைத்து யோசித்துப் பிறகு அவர்கள் நடிக்காததால் வேறு ஒரு நடிகரை வைத்து படமாக்கப்பட்ட சம்பவம் நடந்திருக்கிறது.
ஒரு ரவுடி கதையை ரஜினி மற்றும் கமலுக்காக எழுதி இருக்கின்றனர். அந்த கதையில் கமலும் ரஜினியும் நண்பர்களாக இருக்கின்றனர் அவர்களுக்குள் அவர்களுக்கும் எதிரி ஆட்களுக்கும் இடையே நடைபெறும் பிரச்சனையை வைத்து கதை சொல்கிறது.
அந்த இயக்குனரின் படம்
ஆனால் இந்த கதையை எழுதியது வேறு யாருமில்லை இயக்குனர் சசிகுமார் தான் அவர் ரஜினியையும் கமலையும் மனதில் வைத்து தான் சுப்ரமணியப்புரம் கதையை எழுதியதாக கூறுகிறார். ஆனால் கண்டிப்பாக அதில் அவர்கள் நடிக்க மாட்டார்கள் என்பது சசிகுமாருக்கு தெரியும்.
ஏனெனில் இந்த படம் சசிகுமாரின் முதல் திரைப்படம். இருந்தாலும் கூட அந்த கதாபாத்திரம் எப்படி இருக்க வேண்டும் என்பதை இந்த ரஜினி கமல் இருவரையும் நினைத்துக் கொண்டு எழுதியதால் தான் அவை சிறப்பாக வந்தது என்கிறார் சசிகுமார்.
அதன் பிறகு அதில் சசிகுமாரும் ஜெய்யும் அந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்தனர் அப்படியாக தான் சுப்ரமணியபுரம் என்கிற அந்த திரைப்படம் திரைக்கு வந்தது. இதில் மட்டும் கமல் ரஜினி நடித்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்பது ரசிகர்களின் எண்ணமாக இருக்கிறது.