“மூத்த குடிமக்களுக்கு ஜேக் பார்ட்..!” – SCSS திட்டம் மாதம் ரூபாய் 70 ஆயிரத்து 500..!

 SCSS திட்டம்: 65 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்காக அரசு பல வகைகளில் வசதிகளை செய்து கொடுத்துள்ளது. அந்த வகையில் தற்போது  மோடி அரசனது மூத்த குடிமக்களுக்கு ரூபாய்  70,500 வரை மாதம் தோறும் வழங்கக்கூடிய வகையில் சிறப்பான திட்டத்தை கொண்டு வந்துள்ளது. எனவே இந்த சேமிப்பு திட்டத்தில் நீங்கள் சேர்த்து பயன் பெற இதில் எப்படி சேர்வது என்பது பற்றிய பதிவை பார்க்கலாம்.

அண்மையில் வெளிவந்த பட்ஜெட்டில் பல சிறப்பு அறிவிப்புக்களை வெளியிட்டு இருந்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மூத்த குடிமக்களுக்கு ஜேக்பாட் திட்டமான சில சேமிப்பு திட்டங்களை அறிவித்திருந்தார்.

SCSS

அந்த வகையில் மூத்த குடிமக்களுக்கு ஒவ்வொரு மாதமும் 70 ஆயிரத்து 500 ரூபாய் முழு பலன் கிடைக்கக் கூடிய வகையில் அரசு நல திட்டத்தை தற்போது பொதுமக்களுக்காக நடத்தி வருகிறது. இதில் நீங்கள் சேருவதின் மூலம் எண்ணற்ற பயன்களை அடைய முடியும்.

அது மட்டுமல்லாமல் மாதம் தோறும் நீங்கள் வருமானத்தை ஈட்ட இது உதவிகரமாக இருக்கும். அந்த வகையில் கொண்டுவரப்பட்ட மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் எஸ்சிஎஸ்எஸ் மேலும் தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் பிஓஎம்ஐஎஸ் போன்ற திட்டங்களில் நீங்கள் அருமையான லாபத்தை பார்க்க முடியும்.

இந்தத் திட்டங்களில் நீங்கள் ரூபாய் 1.1 கோடி முதலீடு செய்தால் மூத்த குடிமக்களாக இருக்கக்கூடிய பட்சத்தில் ஒரு தம்பதிக்கு மாதம் தோறும் வருமானமாக ரூபாய் 70 ஆயிரத்து 500 கிடைக்கும்.

SCSS

மேலும் இந்த எஸ்சிஎஸ் எஸ் திட்டத்தில் நீங்கள் 30 லட்சம் வரை முதலீடு செய்யும் போது அதாவது கூட்டு கணக்கில் 60 லட்சம் வரை டெபாசிட் செய்வதின் மூலம் உங்களுக்கு 8% வட்டி கிடைக்கும். அதுபோலவே பிஓஎம்ஐ எஸ் திட்டத்தின் கீழ் நீங்கள் 9 லட்சம் வரை முதலீடு செய்யலாம் இதற்கு 7.1% வட்டி கிடைக்கும்.

SCSS

எனவே இனிமேல் அதிக வட்டி கிடைக்கும் இந்த திட்டங்களில் நீங்கள் சேர்ந்து பயனடைய இது சரியான சந்தர்ப்பமாக இருக்கும். இந்த வாய்ப்பை நழுவ விடாமல் உங்கள் பணத்திற்கு அதிக அளவு வட்டி தரும் இது போன்ற திட்டங்களில் நீங்கள் முதலீடு செய்து நல்ல லாபத்தை பார்ப்பதன் மூலம் வயதான காலத்தில் உங்கள் பொருளாதாரத்தை சீரும் சிறப்புமாக மேம்படுத்திக் கொள்ள முடியும்.

எனவே மேற்கூறிய இரண்டு திட்டங்களையும் கருத்தில் கொண்டு நீங்கள் பணத்தை என்றே முதலீடு செய்ய முயற்சி செய்யுங்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam