நடிகை சீதாவின் திருமண வாழ்க்கை பல ஏற்ற இறங்கங்கள் இருக்கின்றனர். நடிகர் பார்த்திபனை காதலித்து முதலில் திருமணம் செய்து கொண்டார்.
இந்த திருமணம் நீண்ட காலம் நீடித்தது என்றாலும் ஒரு கட்டத்தில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுக் கொண்டனர்.
இரண்டாவதாக சீரியல் நடிகர் சதீஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதுவும் விவாகரத்தில் முடிந்தது.
இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய நடிகர் சதீஷ் எனக்கும் சீதாவுக்கும் திருமணம் ஆகிவிட்டது விவாகரத்து செய்து விட்டோம் என்று வரும் தகவல்களில் உண்மை கிடையாது.
சீதா என்னுடைய நெருங்கிய தோழி. தற்போதும், நண்பர்களாகவே தொடர்ந்து கொண்டிருக்கிறோம். எங்களுக்குள் திருமணம் நடந்தது விவாகரத்து நடந்தது என்பதற்கு என்பது உண்மை கிடையாது என்று பதிவு செய்திருந்தார்.
இது ஒரு பக்கம் இருக்க நடிகை சீதா தன்னுடைய வாழ்க்கை பயணத்தை தனியாக தொடர்ந்து கொண்டிருக்கிறார். குறிப்பாக தன்னுடைய பொழுதுகளை தன் வீட்டு மாடி தோட்டத்தில் கழிப்பதை வாடிக்கையாகக் கொண்டு இருக்கிறார்.
அந்த வகையில், சமீபத்தில் தன்னுடைய வீட்டு மாடி தோட்டத்தில் சக்கரவள்ளி கிழங்கு ஒன்றை நடவு செய்திருக்கிறார். இதனை தண்ணீர் விட்டு தினந்தோறும் பராமரித்து வந்திருக்கிறார்.
இதிலிருந்து எப்படியும் இரண்டு மூன்று கிழங்குகள் வரும் என்று எதிர்பார்த்து காத்து வந்திருக்கிறார் நடிகை சீதா.
ஆனால் அதிலிருந்து ஒரே ஒரு கிழங்கு மட்டுமே வந்திருக்கிறது. அந்த மரவள்ளி கிழங்கு செடியை பறித்து எவ்வளவு கிழங்கு இருக்கிறது என்று பார்க்கலாம் என்று முயற்சித்த சீதாவிற்கு ஏமாற்றமே மிஞ்சி இருக்கிறது.
இதில் விஷயம், என்னவென்றால் இன்றைக்கு சீதா அந்த சக்கரவள்ளி கிழங்கை பார்த்து நீயுமாடா என் வாழ்க்கையில் வந்து ஏமாத்திட்ட.. என்று நொந்து கொள்கிறார்.
அதாவது நடிகர் சதீஷ் மற்றும் நடிகர் பார்த்திபன் தன்னை ஏமாற்றியது போதாது என்று நீயும் என்னை ஏமாற்றி இருக்கிறாயா..? என்ற தொணியில் பேசி இருக்கிறார். இந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.