நான் செய்தது தப்பு தான்.. பகிரங்கமாக ஒப்புக்கொண்ட சீதா..! ஜெர்க் ஆன ரசிகர்கள்..!

தமிழ் திரையுலகில் புதிய பாதை என்ற படத்தின் மூலம் இயக்குனராகவும், நடிகராகவும் அறிமுகமான பார்த்திபன் பன்முக திறமையை கொண்ட ஒரு அற்புதக் கலைஞர். இவர் 80 – காலகட்டங்களில் பார்த்திபனை போலவே நடிகை சீதாவும் தென்னிந்திய மொழிகளில் நடித்து ஏராளமான ரசிகர்களை பெற்றவர்.

இவர் புதிய பாதை படத்தில் பார்த்திபனோடு இணைந்து நடிக்கும் போது அவர்கள் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு பெற்றோர்கள் சம்மதம் கொடுக்காததை அடுத்து வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்திபனை திருமணம் செய்து கொண்ட விஷயங்கள் உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.

நான் செய்தது தப்பு தான்..

இந்நிலையில் நடிகை சீதா தமிழில் முன்னணி நடிகர்களாக இருந்த அத்தனை நடிகர்களோடும் நடித்தவர். இவர் ஒரு நாளைக்கு மூன்று படங்கள் என்று படு பிஸியாக நடித்து வந்த இவர் பார்த்திபனை திருமணம் செய்து கொண்ட பிறகு குடும்பஸ்திரியாக சினிமாவிற்கு பை பை சொல்லி செட்டில் ஆகிவிட்டார்.

இவர் தனது காதல் கணவன் பார்த்திபன் சொன்ன வார்த்தைக்கு மரியாதை கொடுத்து நடிக்க வேண்டாம் என்று தனது கேரியரை பற்றி கவலைப்படாமல் குழந்தை குட்டி என்று செட்டிலாக ஆசைப்பட்டு திரை உலகை விட்டு விலகினார்.

இதனை அடுத்து இவர்கள் ஆசைப்படி சிறப்பான வாழ்க்கையை வாழ்ந்த இந்த நட்சத்திர தம்பதிகள் இடையே 10 வருடம் கழித்து கருத்து வேற்றுமை ஏற்பட்டது. இதனை அடுத்து இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள்.

இதனை அடுத்து இவர் சின்னத்திரையில் சீரியலில் நடித்து வந்த சதீஷ் என்பவரை மறு திருமணம் செய்து கொண்டார். எனினும் இவர்கள் இருவரது மண வாழ்க்கை சரியாக அமையாததை அடுத்து இந்த கல்யாணமும் தோல்வியில் அமைந்தது என்று தான் சொல்ல வேண்டும்.

இந்நிலையில் அண்மையில் இன்டர்வியூவில் பேசிய நடிகை சீதா தான் செய்தது மிகப்பெரிய தவறு என்ற குண்டை போட்டு இருக்கிறார். அதற்கு என்ன காரணம் அவர் ஏன் அப்படி சொன்னார் என்பது பற்றி இந்த பதிவில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.

பகிரங்கமாக ஒப்புக்கொண்ட சீதா..

அதாவது அவர் செய்த மிகப்பெரிய தவறு என்னவென்றால் தன்னுடைய அடையாளத்தை நாம் இழந்து போகிற அந்த இடத்தில் நம்முடைய வாழ்க்கை முடிவுக்கு வந்துவிடும் என்ற உண்மையை கூறியிருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் அந்த அடையாளத்தை திரும்பி அடைய நிறைய போராட வேண்டிய சூழ்நிலைகள் நமக்கு ஏற்படும். அதை அத்தனையும் தாண்டித்தான் அந்த இடத்தை நம்மால் பிடிக்க முடியுமா? இல்லையா? என்பது உறுதியாக சொல்ல முடியாது என பேசி இருக்கிறார்.
இதற்குக் காரணம் கல்யாணத்துக்காக தனது நடிப்பை கைவிட்டது மிகப்பெரிய தவறு என்று சொல்லி இருக்கும் நடிகை சீதா தான் செய்தது தவறு என்பதை ஒப்புக் கொண்டிருக்கிறார்

ஜெர்க் ஆன ரசிகர்கள்..

இதைக் கேட்ட பார்த்திபன் ரசிகர்கள் மட்டுமல்லாமல் சீதாவின் ரசிகர்கள் அனைவரும் ஜெர்க்காகி விட்டார்கள் என்று சொல்லலாம். இப்படிப்பட்ட பதிலை யாரும் இவரிடம் இருந்து எதிர்பார்க்காத சமயத்தில் இவர் இவ்வாறு கூறியிருப்பது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த விஷயமானது தற்போது இணையத்தில் பேசும் பொருளாக மாறி இருப்பதோடு மட்டுமல்லாமல் இந்த விஷயத்தில் தான் செய்தது தப்பு என்று பகிரங்கமாக ஒப்புக்கொண்ட சீதாவின் நிலை பற்றியும் அதைக் கேட்டு ஜெர்க்கான ரசிகர்கள் பற்றியும் அனைவரும் பேசி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version