பாண்டியராஜன் தான் இதுக்கு முழுக்க முழுக்க காரணம்..! பொங்கி எழுந்த நடிகை சீதா..!

நடிகை சீதா சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய போது விவாகரத்துக்கு பிறகு தன்னுடைய வாழ்க்கையில் நடந்த அனுபவங்கள் பற்றி பேசி இருந்தார்.

அதில் பேசிய அவர் நான் முதன் முதலில் இயக்குனர் பாண்டியராஜன் அவர்களின் படத்தில் தான் அறிமுகமானேன்.

அந்த படத்திற்கு பிறகு அடுத்தடுத்து நான்கு ஐந்து வருடங்கள் தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தேன்.

திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகி விட்டேன். ஒரு கட்டத்தில் விவாகரத்து செய்த பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க வந்த போது தான் வாழ்க்கை என்றால் என்ன..? ஒரு நாளைக்கு ஒரு வேலைக்கு நாம் சாப்பிடக்கூடிய சாப்பாடு என்றால் என்ன..? அதனுடைய மதிப்பு என்ன..? போன்ற விஷயங்கள் எல்லாம் எனக்கு தெரிய ஆரம்பித்தது.

அந்த நேரத்திலும் இயக்குனர் பாண்டியராஜன் எனக்கு துணையாக இருந்தார். அவருடைய உதவி தான் என்னை மீண்டும் சினிமாவில் இயங்க வைத்தது.

சினிமா சீரியல் என தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறேன். இன்று நான் ஒருவேளை சாப்பாடு சாப்பிடுகிறேன் என்றால் அதற்கு முழுக்க முழுக்க காரணம் என்னுடைய இயக்குனர் பாண்டியராஜன் தான்.

அவருக்கு எப்போதும் நான் நன்றியுள்ளவளாக இருப்பேன் என தன்னுடைய அனுபவத்தை பதிவு செய்திருக்கிறார். இவருடைய இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Summary in English : Actress Seetha recently opened up about her journey in the industry and gave a heartfelt shout-out to Director Pandiarajan, saying he’s the reason behind not just her career but also the food she enjoys today! How cool is that? She expressed immense gratitude for his guidance and support throughout her life. 

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam