சின்னத்திரை மற்றும் பெரிய திரை என இரண்டு திரைகளிலும் தனது அற்புத நடிப்புத் திறனை வெளிப்படுத்திய நடிகை யுவஸ்ரீ பற்றி உங்கள் நினைவில் இருக்கலாம்.
இவர் தனது சிறப்பான நடிப்பை அற்புதமாக வெளிப்படுத்தியதை அடுத்து இவருக்கு என்று ரசிகர் அதிக அளவு அதிகரித்தார்கள். இந்நிலையில் சில காலங்களாகவே இவர் சின்னத்திரை மற்றும் பெரிய திரையில் தலைக்காட்டாமல் இருக்கிறார்.
பணக்கஷ்டத்தில் வீட்டை வைக்க நினைச்சு..
இந்நிலையில் அண்மை பேட்டி ஒன்றில் நடிகை யுவஸ்ரீ பேசும் போது பல்வேறு வகையான விஷயங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார். அப்படி அவர் பகிரும் போது இன்னும் அவருக்கு திருமணம் ஆகவில்லை என்ற விஷயத்தை கேட்டு தொகுப்பாளினி அதிர்ந்து போய்விட்டார்.
மேலும் அப்படி திருமணம் செய்து கொண்டிருந்தால் நான்கு நாட்கள் அல்லது நான்கு மாதங்கள் வரை அவர்களது திருமண வாழ்க்கை இனிமையாக சென்றிருக்கும். அதைத் தொடர்ந்து நடிகை என்ற முத்திரை குத்தப்பட்ட தனக்கு தன்னை பற்றி வேண்டாத சிந்தனைகள் தான் தன்னை கல்யாணம் செய்யக்கூடிய நபருக்கு ஏற்பட்டிருக்கும்.
அப்படி ஒவ்வொரு நாளும் சலிப்பு சங்கடங்கள் சண்டைகளில் கழிவதை விட திருமணம் செய்து கொள்ளாமல் நிம்மதியாக இருப்பதை நல்லதே என்ற முடிவில் தான் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று சொன்னது அனைவரையும் அதிர்ச்சியில் தள்ளியது.
கடைசி காலத்துல ஹோம்-ல சேருவேன் கதறும் யுவஸ்ரீ..
மேலும் தொகுப்பாளனி தற்போது உங்களுக்கு துணையாக அம்மா இருக்கிறார்கள். அம்மாவுக்கு துணையாக நீங்கள் இருக்கிறீர்கள். உங்கள் அம்மா காலத்திற்குப் பிறகு என்ன செய்வீர்கள் என்று கேள்வியை எழுப்பினார்.
அதற்கு சற்றும் தயங்காமல் எவ்வளவோ ஹோம் இருக்கு அதுல போய் இருந்துக்க வேண்டியது தான் என்று சொல்லி அதிர்வலைகளை ஏற்படுத்தியதை அடுத்து மீண்டும் சில கேள்விகள் கேட்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து தன் தந்தையின் இறப்புக்குப் பிறகும் தனிமையில் இருக்கும் நடிகை தன் தந்தை கூட தன்னை தனியாக விட்டு செல்வதாக நினைத்து மிகவும் வருந்தியதாக நடிகை யுவஸ்ரீ சொல்லியிருக்கிறார்.
மேலும் மற்ற பெண்களைப் போல திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசை இருந்ததாகவும் எனினும் சீரியல்களில் நடிக்க வந்ததை அடுத்து அந்த ஆசை மறந்து விட்டது என கூறினார்.
மேலும் அப்பா இறந்து போன சமயத்தில் குடும்பத்தில் பணக்கஷ்டம் ஏற்பட்டதோடு பணம் இல்லாமல் டிப்பிரசனில் இருந்ததாகவும் அதனால் தான் கல்யாணமே வேண்டாம் என்று முடிவு செய்ததாகவும் கூறி இருக்கிறார்.
இதை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் படு வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் ஆகி உள்ளது.