ஷங்கரால் திவாலான தில் ராஜு…! வீட்டை விற்று ரோட்டுக்கு வந்துட்டாரு..! விஜய்க்கு இது தெரியும்..!

தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பில் சமீபத்தில் வெளியான கேம் சேஞ்சர் திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது. ஆனால், இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.

முதல் பாதையில் மிக மெதுவாக நகரும் கதை. எளிதாக யூகிக்கக்கூடிய இரண்டாம் பாதி என எந்த ஒரு சுவாரசியமான திருப்பமும் இல்லாமல் கதை நகர்ந்து கிளைமாக்ஸ் வரை செல்கிறது. கிளைமாக்ஸ் காட்சியில் என்னதான் திறந்து படமாக இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா..? என்று ரசிகர்கள் முகம் சுளிக்கும் அளவுக்கான ஒரு கிளைமாக்ஸ் காட்சியை எடுத்து வைத்திருந்தார் சங்கர்.

பொதுவாக ஒரு வார்டு உறுப்பினர் தேர்தல் என்றாலே.. அங்கு வாக்கு எண்ணக்கூடிய மையத்தில் எவ்வளவு பாதுகாப்பு இருக்கும்..? ராணுவ கட்டுப்பாட்டில் அந்த வாக்கு எண்ணிக்கை மையங்கள் இருக்கும்.. ஆனால், கேம் சேஞ்சர் கிளைமாக்ஸ் காட்சியில் கொடுமை செய்து வைத்திருந்தார் ஷங்கர்.

அந்த அளவுக்கு அபத்தமான ஒரு கிளைமாக்ஸ் காட்சியுடன் வெளியாகி இருக்கிறது கேம் சேஞ்சர் திரைப்படம். இதனால் ரசிகர் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பு இந்த படத்திற்கு கிடைக்கவில்லை.

இதனால் தில்ராஜு மிகப்பெரிய பொருளாதார சிக்கலில் சிக்கிருக்கிறார் என்றும் தன்னுடைய சொத்தை அடகு வைத்து அதிலிருந்து படத்திற்கு செலவழித்து இருக்கிறார் என்றும் ஆனால் ஓட்ட பணத்தை எடுக்க முடியாமல் தான் அடகு வைத்த சொத்துக்களை அப்படியே விட்டுவிடும் சூழ்நிலைக்கு வந்திருக்கிறார் தில்ராஜ் என்று கூறியுள்ளார் ஆஸ்கார் மூவிஸ் தயாரிப்பாளர் பாலாஜி பிரபு.

ஒரு தயாரிப்பாளர் 400 கோடி பணத்தை போட்டு ஒரு படத்தை தயாரிக்கிறார் என்றால் அவருக்கு குறைந்தபட்சம் 200 கோடி லாபம் வர வேண்டும். அதாவது, அந்த படம் 600 கோடி வசூல் செய்ய வேண்டும்.

இசை வெளியீட்டு உரிமை.. திரையரங்கு வெளியிட்ட உரிமை.. தொலைக்காட்சி வெளியீட்டு உரிமை.. சேட்டிலைட் உரிமை.. பாடல்களுக்கான உரிமை.. OTT உரிமை.. இதையெல்லாம் சேர்த்து பார்த்தால் கூட கேம் சேஞ்சர் திரைப்படம்  300 கோடியை நெருங்காது.

ஆனால் படத்தின் பட்ஜெட்டை அவ்வளவு பெரிதுபடுத்தி பாடல் காட்சிகளுக்காக மட்டுமே கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் செலவு செய்து இருக்கிறார் சங்கர். தில்ராஜு இந்த படத்தில் போட்ட பணத்தை இரண்டு ஆண்டுகளுக்கு வங்கியில் போட்டு வைத்திருந்தால் அந்த 400 கோடி ரூபாய் பணமானது 480 கோடியாக மாறி இருக்கும்.

ஆனால், இதனை ஒரு படத்தில் முதலீடு செய்கிறார் எனும் பொழுது அந்த 400 கோடி ரூபாய் இரண்டு ஆண்டுகளில் குறைந்தபட்சம் ஒரு 550 கோடி அல்லது 600 கோடி என்ற அளவுக்கு அவருக்கு வரும் வசூல் வந்திருக்க வேண்டும். இன்று அவர் அடமானம் வைத்த சொத்துக்களை அப்படியே விட்டு விடும் அளவுக்கு மோசமான நிலைக்கு வந்திருக்கிறார்.

ஏற்கனவே வாரிசு படம் தோல்வி படம் என்பதை கேம் சேஞ்சர் வெளியீட்டு ப்ரோமோஷன் களின் போது பேசியிருந்தார் தில்ராஜூ. நடிகர் விஜய்க்கு ஆரம்ப காலத்தில் தன்னை வைத்து படம் தயாரித்து தயாரிப்பாளர்கள் தற்போது என்ன நிலையில் இருக்கிறார்கள் என்று தெரியும்.

அவர்களை முன்னிறுத்தி அவர்களுக்காக ஒரு படம் நடித்துக் கொடுத்தால் அவர்களுடைய வாழ்க்கை சிறப்பாகும் அல்லவா..? இன்று ஒரு தனி மனிதனாக கிட்டத்தட்ட 300 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார் நடிகர் விஜய்.

ஆரம்ப காலத்தில் தன்னை வைத்து படம் தயாரித்த தயாரிப்பாளர்கள் இன்று அடையாளம் தெரியாமல் சொந்த வீடு கூட இல்லாமல் வாடகை வீட்டில் இருக்கக்கூடிய தயாரிப்பாளர்கள் எல்லாம் இருக்கிறார்கள்.

ஒவ்வொரு தயாரிப்பாளருக்கும் ஒரு படம் இல்லை என்றாலும் கூட அனைத்து தயாரிப்பாளர்களையும் அழைத்து ஒன்று திரட்டி அவர்களுக்காக ஒரு படத்தை விஜயால் கொடுக்க முடியுமா..? முடியாதா..?

அதன் மூலம் விஜய்க்கும் லாபம் கிடைக்கும்.. தயாரிப்பாளர்களும் தங்களுடைய வாழ்க்கையில் ஒரு அளவுக்கு செட்டில் ஆகி விடுவார்கள்.

இதெல்லாம் விஜய்க்கு தெரியும். ஆனால், செய்ய மாட்டார். இப்படி தமிழ் சினிமாவிற்கு வந்த தயாரிப்பாளர்கள் எல்லாம் தலையில் துண்டு போட்டு கொண்டு தான் போயிருக்கிறார்கள்.

வருடத்திற்கு 4 படங்கள் முதல் 10 படங்கள் வெற்றி படங்களாக இருப்பதே மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. மற்ற படங்கள் எல்லாம் தோல்வி படங்களாக இருக்கின்றன.

இதனால் படம் தயாரிக்க யாரும் முன் வர மறுக்கிறார்கள். தமிழ் சினிமா அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என பேசி இருக்கிறார் தயாரிப்பாளர் பாலாஜி பிரபு ஆஸ்கார் மூவிஸ்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam