sanger

இந்த வாழ்க்கை எனக்கு அவர் போட்ட பிச்சை..! இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் உருக்கம்..!

திரை உலகின் இரட்டையர்கள் என்று அழைக்கப்படும் இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட திரைப்படங்களில் இசையமைப்பாளர்களாக ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து இருக்கிறார்கள்.

sanger 2

இவர்கள் 1967-இல் மகராசி என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு இசையமைப்பாளர்களாக அறிமுகமானதை அடுத்து ஆட்டுக்கார அலமேலு என்ற திரைப்படம் 1977 ஆம் ஆண்டு வெளிவந்து இவர் இசை உலக வாழ்க்கை திருப்பு முனையாக அமைந்தது என்று சொல்லலாம்.

இந்த வாழ்க்கை எனக்கு அவர் போட்ட பிச்சை..

இவர்கள் இசை அமைப்பில் வெளிவந்த உள்ளத்தில் குழந்தையடி, கருணை உள்ளம், தினந்தோறும், தீபாவளி, சட்டம் ஒரு இருட்டறை, நெஞ்சங்கள், பட்டணத்து ராஜாக்கள், அனல் காற்று, ஓசை, பௌர்ணமி அலைகள், நாகம், பன்னீர் நதிகள், சம்சாரம் அது மின்சாரம், சிகப்பு தாலி, வரவு நல்ல உறவு, இதயத்தாமரை, புருஷன் எனக்கு அரசன் போன்ற படங்கள் இவர்களது இசைத்திறனை வெளிப்படுத்தக் கூடிய வகையில் இருக்கும்.

இந்நிலையில் அண்மை பேட்டி ஒன்றில் சங்கர் கணேஷ் பேசும் போது இன்று தான் நல்ல நிலையில் இருப்பதற்கும் நடப்பதற்கும் ஓடுவதற்கும் காரணம் யார் என்பதை பக்குவமாக பகிர்ந்து பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

sanger 3

 

இதற்குக் காரணம் முதல்வர் எம்ஜிஆர் போட்ட பிச்சை என்று சொல்லி உருக்கத்தோடு அந்த பேட்டியில் பேசி சொன்ன விஷயங்கள் அனைத்தும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியதோடு எம்ஜிஆர்-இன் உறுதியை எண்ணி பிரமிக்க வைத்தது.

இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் உருக்கம்..

உங்கள் எல்லோருக்கும் தெரிந்திருக்கும் 1986-இல் குண்டு வெடிப்பு நடந்தது பற்றி நீங்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள். அந்த குண்டு வெடிப்பில் எனது கால் மூன்று துண்டுகளாக உடைந்து போய்விட்டது.

அந்த சமயத்தில் அப்பல்லோ மருத்துவமனையில் சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் நான் இருந்தேன். அந்த சமயத்தில் அந்த நாட்கள் முழுவதும் ஆன செலவு முழுமையாக எம்ஜிஆர் தான் ஏற்றுக்கொண்டு இருந்தார்.

என்னை முழுமையாக குணப்படுத்த வேண்டும் என்பதில் உறுதியோடு இருந்ததோடு மட்டுமல்லாமல் டாக்டர் என்ன சொன்னார் என்று தெரியுமா? என்ற கேள்வியை வைத்து அவர் தன்னுடைய காலை எடுத்து விட வேண்டும் அது தான் சிறப்பாக இருக்கும் என்று கூறியிருக்கிறார்கள்.

அவர்கள் சொன்னதைக் கேட்டு நான் பயம் கொண்டதோடு மட்டுமல்லாமல் காலை எடுத்து விடுவார்கள். இனி அவ்வளவுதான் கட்டை வைத்து தான் நடக்க வேண்டும் என்று என் மனதளவில் உடைந்து விட்டேன்.

sanger 1

எனினும் டாக்டர்கள் கூறியதைக் கேட்டு எம்ஜி ஆர் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. கடைசி வரை மருத்துவர்களால் எந்த அளவு கவனம் செலுத்தி எனது காலை குணப்படுத்த முடியுமோ அதில் மட்டுமே கவனத்தை செலுத்துமாறு அவர்களிடம் கேட்டுக் கொண்டார்.

அதுமட்டுமில்லாமல் அவனால் எப்படி ஓட முடியும். எப்படி நடக்க முடியும் பழையபடி எப்படி உங்களால் கொண்டுவர முடியும் என்பதை பற்றி யோசிக்கும் படி கேட்டுக் கொண்டார். மருத்துவர்கள் அனைவரும் இதை ஒரு சேலஞ்சாக எடுத்துக்கொண்டு பணியாற்றி அவரை பக்குவமாக குணப்படுத்த வேண்டும் என்பதை வேண்டுகோளாக விடுத்தார்.

இதை அடுத்து என் காலில் ஒரு ராடு கூட வைக்காமல் எந்த அளவு என்னை குணமாக்கி பழைய படி நடக்கவும் ஓடவும் வைத்த பெருமை என்றிருக்கும் அப்பல்லோ மருத்துவர்களையும் சாரும். இத்தனைக்கும் காரணம் புரட்சி தலைவர் எம் ஜி ஆர் தான் அவர் எனக்கு போட்ட வாழ்க்கை பிச்சை இது என்று பேசியது பலரையும் எம்ஜிஆர் மீது இருந்த மரியாதையை பன்மடங்காக அதிகரிக்க வைத்துள்ளது.

--- Advertisement ---

Check Also

rajinikanth 10

எனக்காக எழுதுன கதை அந்த படம்.. ரஜினி வன்மம் தீர்க்க இதுதான் காரணம்.. வீடியோ வெளியிட்ட ரஜினிகாந்த்..!

மாபெரும் பட்ஜெட்டில் உருவாகும் திரைப்படங்களுக்கு எப்பொழுதுமே தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அதிக பட்ஜெட் என்பதே ஒரு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *