நிஜமாவே 53 வயசா..? பிரபல நடிகையின் தற்போதையை நிலையை பார்த்தது ஆச்சரியத்தில் ரசிகர்கள்..!

திரைப்படங்களில் நடிக்கின்ற நடிகைகள் எவ்வளவு வயதானாலும் இன்றும் எவர்கீரின் நடிகையாக காட்சியளிப்பார்கள். அந்த வரிசையில் இதற்கு உதாரணமாக ரம்யா கிருஷ்ணன் முதல் குஷ்பு வரை சொல்லலாம்.

அந்த வகையில் அவர்களை எல்லாம் பின்னுக்குத் தள்ள கூடிய வகையில் 53 வயதை தொட்டிருக்கும் பிரபல நடிகை ஒருவரை பார்த்து ரசிகர்கள் அனைவரும் ஷாக்காக கூடிய வகையில் இன்னும் இளமையாக காட்சி அளித்திருக்கிறார் என்றால் நீங்கள் நம்புவீர்களா?

நிஜமாவே 53 வயசா..? பிரபல நடிகையின் தற்போதையை நிலை..

80, 90 காலகட்டத்தில் திரை உலகில் ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்ட நடிகை நிஷாந்தி எனும் சாந்திப்பிரியா பற்றி உங்கள் நினைவில் இருக்கிறதா?

இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பல படங்களில் நடித்திருக்கிறார். தமிழ் படங்களில் நிஷாந்தியாகவும் தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் சாந்தி பிரியாகாவும் நடித்து தனக்கு என்று ஓர் ரசிகர் வட்டாரத்தை பெற்றிருக்கக் கூடிய இவர் ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்டவர்.

இன்னும் சொல்லப் போனால் இந்த நடிகை பானுப்ரியாவின் சகோதரி ஆவார். இவர் 1987-ஆம் ஆண்டு தெலுங்கில் வெளி வந்த திரைப்படத்தில் நடித்ததை அடுத்து திரையுலக வாழ்க்கையில் அடி எடுத்து வைத்தார். இதே ஆண்டு எங்க ஊரு பாட்டுக்காரன் என்ற படத்தில் நடித்து தமிழில் அறிமுகமானார்.

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் கிட்டத்தட்ட 25 படங்களில் நடித்து அனைவரது பாராட்டுதல்களையும் பெற்றிருக்கக் கூடிய இவர் 1989-ஆம் ஆண்டு வெளி வந்த விசுவாமித்ரா என்ற புராண தொடரில் சகுந்தலாவாக நடித்தவர்.

தமிழைப் பொறுத்த வரை நேரம் நல்லா இருக்கு, ஒன்று எங்கள் ஜாதியே, சர்க்கரை பந்தல், சிகப்பு தாலி, தாயம் ஒன்னு, பூவிழி ராஜா, எல்லாமே என் தங்கச்சி, அஞ்சலி, ஆத்தா நான் பாசாயிட்டேன், உயர்ந்தவன் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்.

மேலும் பல ஹிந்தி தொடர்களில் நடித்ததின் மூலம் மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்றிருக்கக் கூடிய இவர் அதிகளவு புராண இதிகாச தொடர்களில் நடித்திருக்கிறார்.

பார்த்தது ஆச்சரியத்தில் ரசிகர்கள்..

இதனை அடுத்து அண்மை பேட்டியில் கலந்து கொண்ட இவரை 53 வயதா? என்று கேட்கக் கூடிய வகையில் இருப்பதைப் பார்த்து ரசிகர்கள் அனைவரும் ஆச்சரியத்தில் உறைந்து போனார்கள்.

மேலும் இவர் விரைவில் தமிழ் படங்களில் ரீஅண்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது. அதுவும் வெற்றிமாறன் படத்தில் நாயகியாக நடிக்க இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறி உள்ளது.

அத்தோடு ரசிகர்கள் அனைவரும் இவரது படத்தை காண ஆவலாக காத்திருப்பதாக சொல்லி இருப்பதோடு மட்டுமல்லாமல் இந்த விஷயத்தை அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படும் விஷயங்களில் ஒன்றாக மாற்றிவிட்டார்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam