பிரபல நடிகர் ரியாஸ் கானின் மகனும் நடிகருமான ஷாரிக் ஹாசன் சமீபத்தில் மரியா ஜெனிஃபர் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
ஷாரிக் திருமணம் செய்து கொண்ட மரியா ஜெனிஃபருக்கு 10 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது என்றும் இது தெரிந்தே தான் ஷாரிக் என்னை திருமணம் செய்து கொண்டார் எனவும் மரியா பேசி இருப்பது பரபரப்பை கிளம்பி இருக்கிறது.
இந்த பேட்டியில் ஷாரிக்கும் கலந்து கொண்டார். இதில் பேசிய ஷாரிக் ஹாசன் நான் சினிமா வாய்ப்புக்கு நான்காண்டுகள் சாலிகிராமத்தில் தங்கி இருந்தேன். அதன்பிறகு, ECRக்கு சென்று அப்பா அம்மாவுடன் இருக்கலாம் என நினைத்து அங்கு சென்றேன்.
அப்போது அங்கு இருந்த ஒரு உடற்பயிற்சி கூடத்திற்கு சென்றேன். அந்த ஜிம்மில் தான் நான் முதன்முதலில் மரியாவை சந்தித்தேன். முதன்முதலில் அவர்களை பார்த்து நான் சிரித்தேன். ஆனால், என்னை பார்த்து அவர் கண்டுக்கவே இல்லை.
அப்பதான் யாருடா இது..? நம்மளை மதிக்கவே இல்லையே.. என்று நினைத்தேன். அப்போதுதான் கல்யாணம் பண்ணா இந்த பொண்ணை தான் கல்யாணம் பண்ணனும் என்று முடிவு எடுத்து தினமும் ஜிம்முக்கு போய் பார்த்துகிட்டே இருந்தேன்.
ஒருநாள் ரெஸ்டாரண்டில் எதேர்ச்சியாக உங்களை பார்த்தேன். அதன் பிறகு பேச ஆரம்பித்தோம். இதனை தொடர்ந்து பேசிய மரியா முதல் திருமண வாழ்க்கை எனக்கு சரியாக அமையவில்லை.
நான் இரண்டாவது திருமணம் பற்றி யோசித்து கூட பார்த்ததில்லை. என்னுடைய மகள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றும் அவளைப் பற்றி மட்டும் தான் யோசித்துக் கொண்டிருந்தேன்.
ஜிம்மில் ஷாரிக் என் மீது மட்டுமில்லாமல் எல்லோரிடமும் ஜாலியாகத்தான் பேசுவார் என்பதால் பத்தோடு 11 எல்லோரையும் எல்லோரிடமும் பேசுவது போல தான் என்னிடமும் பேசுகிறார் என்று முதலில் நினைத்தேன்.
அதன் பிறகு ஷாரிக் பற்றி பலரும் என்னிடம் பேசும்போது அவன் சின்ன பையன் தம்பி என்று தான் சொல்லி இருக்கேன். ஆனால், ஷாரிக் எப்படியோ என்னை மயக்கி ஸ்கெட்ச் போட்டு தூக்கிட்டான்.
நானும் என் மகள் ஜாராவும் தனியாகத்தான் இருந்தோம். எனக்கு பெருசா ஏதோ மிஸ் பண்ற மாதிரி தெரியல.. ஆனா ஷாரிக் ஹாசன் வாழ்க்கையில் வந்த பிறகு நான் வாழ்க்கையில் எதையோ தவறவிட்டேன் என்று என்பது போன்ற உணர்வு ஏற்பட்டது.
என்னுடைய மகளுக்கு ஒரு அப்பா வேண்டும் என்று நினைத்தேன். அதற்கு தகுதியானவராக ஷாரிக் ஹாசன் இருந்தார். எங்களுடைய காதல் வாழ்க்கை ஆரம்பிக்க காரணமே என்னுடைய மகள் ஜாரா தான் என அந்த பேட்டியில் ஷாரிக்கின் மனைவி பேசியிருக்கிறார்.