இனிமேதான் நீங்க உஷாரா இருக்கணும்..! எஸ்.கேவை அழைத்து அஜித் சொன்ன விஷயம்… விவரமான ஆளா இருக்காரே?.

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெவ்வேறு வகையான திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்து வைத்திருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன்.

பெரும்பாலும் சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படங்களுக்கு வசூல் ரீதியாக வெற்றி என்பது கிடைத்து கொண்டுதான் இருக்கிறது. இந்த நிலையில் விஜய், அஜித், சூர்யா வரிசையில் அடுத்து சிவகார்த்திகேயன் தான் இருந்து வருகிறார்.

நீங்க உஷாரா இருக்கணும்

விஜய்யின் இடத்தை கூட அடுத்து சிவகார்த்திகேயன்தான் பிடிப்பார் என்று பேச்சுக்கள் உள்ளன. ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து சிவகார்த்திகேயன் இவ்வளவு பெரிய வளர்ச்சி அடைந்திருப்பது பலருக்கும் ஒரு முன்னுதாரணமாக அமைந்திருக்கிறது. ஏனெனில் சினிமாத்துறை துவங்கிய காலகட்டத்தில் இருந்தே இலட்சக்கணக்கான இளைஞர்கள் தொடர்ந்து கோடம்பாக்கத்திற்கு வாய்ப்பு தேடி வந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

ஆனால் அவர்கள் எல்லோருக்குமே வாய்ப்பு கிடைத்து பெரிய நடிகர்களாக மாறிவிடுவது கிடையாது. சிலர் மட்டுமே அப்படி ஆன இடத்தை பிடிக்கின்றனர். அப்படியான சிலரில் சிவகார்த்திகேயனும் ஒருவர். எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமலேயே சினிமாவில் வாய்ப்பை பெற்று பெரிய நடிகராக மாறி இருக்கிறார்.

அஜித் சொன்ன விஷயம்

இந்த நிலையில் இவர் விஜய் டிவியில் பணிபுரிந்து வந்த காலகட்டங்களில் பல நடிகர்களை பேட்டி எடுத்திருக்கிறார். அப்போதிலிருந்து அவருக்கும் விஜய்க்கும் நல்ல பழக்கம் உண்டு. அதனால் தான் விஜய் நடித்த கோட் திரைப்படத்தில் கூட சிவகார்த்திகேயன் ஒரு கேமியோ கதாபாத்திரத்தில் வந்திருந்தார்.

மேலும் விஜய் நடித்த இடத்தை சிவகார்த்திகேயன்தான் நிரப்ப போகிறார் என்பது போல ஒரு குறியீடாக அங்கு காட்சிகள் வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அஜித்துடன் தனது அனுபவத்தை சிவகார்த்திகேயன் ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார்.

விவரமான ஆளா இருக்காரே

பெரும்பாலும் அஜித்தை ஒரு பேட்டி கூட சிவகார்த்திகேயன் எடுத்தது கிடையாது ஏனெனில் அஜித் பெரிதாக யாருக்குமே பேட்டி கொடுத்தது கிடையாது. இந்த நிலையில் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நல்ல படங்களாக நடித்து வெற்றி பெற தொடங்கினார்.

அப்பொழுது சிவகார்த்திகேயன் குறித்து நிறைய விமர்சனங்களும் இருந்தன. இந்த நிலையில் அஜித் சிவகார்த்திகேயனை நேரில் அழைத்திருக்கிறார் அப்பொழுது சிவகார்த்திகேயனை சந்தித்தபோது இனிமேதான் நீங்க ரொம்ப கவனமா இருக்கணும்.

ஏனெனில் நீங்கள் நல்ல வளர்ச்சி அடைய துவங்கி விட்டீர்கள் இனி உங்களை குறித்து எதிர்மறையான விஷயங்கள் நிறைய நடக்கும் என்று கூறியிருக்கிறார் இந்த விஷயத்தை சிவகார்த்திகேயன் பகிர்ந்து இருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version