சூரியா ஜோதிகா திருமணத்தை நான் ஏன் தடுத்தேன்.. சிவகுமார் கூறிய பதில்.. ரசிகர்கள் ஆச்சரியம்..!

தமிழ் திரையுலகில் ஆரம்ப கால முதல் கொண்டே இன்று வரை பல்வேறு நட்சத்திர தம்பதிகள் இருக்கிறார்கள். அந்த வரிசையில் நடிகர் சூரியா மற்றும் ஜோதிகா பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

வாரிசு நடிகரான நடிகர் சூர்யா அவரது அப்பா சிவகுமாரின் சம்மதத்தை பெற்றுத் தான் ஜோவை கை பிடித்து இருக்கிறார். எனினும் இந்த திருமணத்தில் நடிகர் சிவகுமாருக்கு விருப்பம் இல்லை என்ற விஷயமானது இணையம் முழுவதும் கிசு கிசுக்கப்பட்டது உங்களுக்கு தெரிந்திருக்கும்.

சூரியா ஜோதிகா திருமணத்தை நான் ஏன் தடுத்தேன்..

அதுமட்டுமல்லாமல் நடிகர் சிவகுமார் தன் இனத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை தான் சூர்யாவுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று நினைத்ததாகவும் அந்த விருப்பம் நிறைவேறாமல் போனதால் தான் தனது இரண்டாவது மகன் கார்த்திக்கு தன் இனத்தில் பெண் பார்த்து திருமணம் செய்து வைத்ததாகவும் பேச்சுக்கள் வெளி வந்துள்ளது.

இந்நிலையில் அண்மையில் நடந்த பேட்டி ஒன்றில் சாய் வித் சித்ராவுடன் நடிகர் சிவகுமார் அவர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்ததை பார்த்து ரசிகர்கள் அனைவரும் ஆச்சரியம் அடைந்திருக்கிறார்கள்.

இந்த பேட்டியின் போது சித்ரா சூர்யா ஜோதிகா திருமணத்தை பெருந்தன்மையாக ஏற்றுக் கொண்டவர் சிவக்குமார் என்ற பேச்சு வெளியில் இருப்பதாக சொல்லப்படும் அதே வேளையில் அந்த பெருந்தன்மையை கொடுத்தவர்கள் சூர்யா மற்றும் ஜோ என்று தான் சொல்லுவதாக சித்ரா கூறினார்.

சிவகுமார் கூறிய பதில்.. ரசிகர்கள் ஆச்சரியம்..

இதற்கு பதில் அளித்து பேசிய நடிகர் சிவகுமார் இதுவரை 120-க்கும் மேற்பட்ட படங்களில் தான் நடித்திருப்பதாகவும் அதில் ஒவ்வொரு நடிகைகளிடமும் ஒவ்வொரு வகையில் காதல் வசனம் பேசி கல்யாணம் செய்து கொண்ட விஷயங்களை பகிர்ந்தார்.

அப்படி லவ் சீன்களில் நடிக்கும் போது வில்லன்களாக அவர்கள் அப்பாக்கள் இருப்பதை எத்தனை படங்களில் பார்த்து நாம் நடித்திருப்போம். அது மாதிரியான கட்டங்களை எல்லாம் எப்படி தாண்டி காதலில் வெற்றி அடைந்தது போல் படத்தில் நடித்திருக்கிறோம் என்ற விஷயங்களையும் கூறினார்.

இப்படி நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் என் கையை நம்பித்தான் அவளை கரம் பிடிக்கிறேன் என்று வீர வசனம் பேசிவிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்த நடிகைகளை லவ் செய்வது போல் நடித்து விட்டு நான் பெற்ற மகன் உண்மையாக ஒரு பெண்ணை காதலித்ததாக கூறினால் என்ன சொல்லுவேன்.

அதற்கு நான் மௌனம் தான் காத்தேன். இதில் சூர்யா நான்கு வருடங்களாக காத்திருந்தார். அத்தோடு திருமணம் செய்து கொள்வேன் என்றால் அது ஜோவை மட்டுமே திருமணம் செய்து கொள்வேன் இல்லை என்றால் இப்படியே இருந்து விடுவேன் என்று பிடிவாதமாக இருந்தார்.

இந்நிலையில் நான் பல்வேறு திரைப்படங்களில் பல்வேறு நடிகைகளை காதலிப்பது போலவும் அவர்களை திருமணம் செய்து கொள்ளாதது போலவும் நடித்திருக்கிறேன். அப்படி இருக்கும் போது என்னுடைய மகனின் காதலை நான் ஏன் எதிர்க்க போகிறேன்.

நான் சூர்யா ஜோதிகா திருமணத்தை தடுத்தேன் என்று கூறிய கூறுபவர்கள் ஏன் தடுத்தேன் என்ற காரணத்தையும் கூறினால் சரியாக இருக்கும் என சிவகுமார் பேசியிருப்பது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version