புதுப்பேட்டை படத்தில் அந்த காட்சியில் நிஜமாவே என்னை.. ரகசியம் உடைத்த நடிகை சினேகா..!

பன்முக திறமை கொண்ட ஒரு நடிகையாக பார்க்கப்படுபவர். நடிகை சினேகா சினிமாவில் அறிமுகமான பகுதியில் குடும்ப குத்து விளக்காக குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் புடவை சகிதமாக நடித்துக் கொண்டிருந்த நடிகை சினேகா ஒரு கட்டத்தில் மெல்ல மெல்ல கிளாமரான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க ஆரம்பித்தார்.

மாடர்ன் உடைகளை அணிந்து கொண்டும் என்னால் நடிக்க முடியும் என்பதை நிரூபித்தார். தமிழ் சினிமா ரசிகர்களால் புன்னகையரசி என்று அழைக்கப்படும் நடிகை சினேகாவுக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

இடையில் பல்வேறு கிசுகிசுகளில் சிக்கி இருந்தாலும் கூட நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட பின் அவரை சுற்றி இருந்த கிசுகிசுக்கள் எல்லாம் அடங்கி போனது.

தற்போது இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருக்கும் சினேகா சினிமாவில் சில காலம் ஒதுங்கி இருந்தார். தற்பொழுது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். சமீபத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இடையில் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் படமாக அமைந்த புதுப்பேட்டை திரைப்படத்தில் விலைமாது கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் நடிகை சினேகா.

அந்த சமயத்தில் நடிகை சினேகா மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. எப்படி.., இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க சினேகா ஒப்புக்கொண்டார் என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், படம் வெளியான பிறகு இப்படியான விமர்சனங்களுக்கு எல்லாம் பதில் கொடுக்கும் விதமாக நடிகை சினேகா தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

படத்தின் கதையில் நடிகை சினேகாவின் பங்கு மிக முக்கியமானதாக இருந்தது. விலைமாது கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் நடிகை சினேகா என்றாலும் கூட முகம் சுளிக்கும் வகையில் அவருடைய கதாபாத்திரம் அமையவில்லை. மாறாக கதைக்கு வலு சேர்க்கும் விதமாக ஒரு துணிச்சலான கதாபாத்திரமாக இருந்தது.

இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய நடிகை சினேகா புதுப்பேட்டை படத்தில் இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று என்னை கேட்ட போது நான் பலமுறை யோசித்தேன்.

இப்படியான காட்சிகள் கொண்ட படத்தில் நடிக்க வேண்டுமா..? என்று பலமுறை சிந்தித்தேன். ஏனென்றால் ஒரு சிறு தவறு ஏற்பட்டு விட்டால் கூட நான் நடித்த கதாபாத்திரத்தின் தன்மையே மாறிவிடும். குறிப்பாக, படுக்கயறை காட்சிகளில் நடிக்கும் போது நிஜமாகவே என்னை ரசிகர்கள் எப்படி புரிந்து கொள்வார்கள்..? என்றெல்லாம் எனக்கு தயக்கம் இருந்தது.

ஆனால் அப்படி எதுவும் ஆகாத அளவுக்கு இயக்குனர் செல்வராகவன் தன்னுடைய நேர்த்தியான கதை மற்றும் திரைக்கதை கொண்டு அந்த கதாபாத்திரத்திற்கு அவ்வளவு வலு சேர்த்திருந்தார்.

எனக்கு இப்படி வலுவான கதாபாத்திரங்களை நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. இந்த வாய்ப்பு கிடைத்த போது இதனை தவற விட வேண்டாம் என்று நினைத்து துணிந்து நடித்தேன். அதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்தது மகிழ்ச்சியை கொடுக்கிறது என பேசி இருக்கிறார் நடிகை சினேகா..

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.