புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அது நடந்துச்சு.. கண்ட்ரோல் இல்லாம பண்ணிட்டார்.. கேரவேனில் அழுதேன்.. சினேகா..!

நடிகை சினேகாவின் திரை பயணத்தில் மிக முக்கியமான ஒரு திரைப்படம் புதுப்பேட்டை. இந்த படத்தில் விலை மாது கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை சினேகா.

முன்பு நடித்த எந்த படத்திலும் நடிகை சினேகா இந்த அளவுக்கு நடித்தது கிடையாது. அந்த அளவுக்கு தன்னுடைய நடிப்பு திறமையை முழுமையாக வெளிப்படுத்திய அசத்தியிருந்தார்.

இந்த படத்தில் நடித்த பிறகு நடிகை சினேகா மீது பலரும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர் ரசிகர்கள். ஆனால், நாட்கள் செல்ல செல்ல அவருடைய நடிப்பை பாராட்டினார்கள்.

இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய நடிகை சினேகா புதுப்பேட்டை படத்தில் அன்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகர் பாலா சிங்கிடம் அடி வாங்கும் ஒரு காட்சி குறித்து பேசி இருந்தார்.

அவர் கூறியதாவது, அந்த காட்சி தத்ரூபமாக வரவேண்டும் என்பதால் நிறைய டேக்குகள் சென்றது.

ஒரு கட்டத்தில் அந்த காட்சியை தத்ரூபமாக செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் நடிகர் பாலா சிங் நிஜமாகவே என்னுடைய வயிற்றில் உதைத்து விட்டார்.

என்னால் வலி தாங்க முடியவில்லை. ஷாட் ஓகே என்று கூறியதும் இரண்டு நிமிடம் வந்து விடுகிறேன் என்று கேரவனுக்குள் சென்று வலி பொறுக்க முடியாமல் கதறி அழுதேன்.

அதை யாரோ இயக்குனரிடம் கூறி விட்டார்கள். அதன் பிறகு ஒட்டுமொத்த பட குழுவினரும் வந்து விசாரித்தார்கள். காட்சி தத்ரூபமாக வரவேண்டும் என்ற நோக்கத்தில் அவர் தன்னையும் மீறி தெரியாமல் உதைத்திருக்கிறார்.

அவருடைய கண்ட்ரோல் இல்லாமல் பண்ணிட்டார். அதன் பிறகு சில மணி நேரம் கழித்து மீண்டும் படப்பிடிப்பு ஆரம்பமானது. இப்படித்தான் அந்த காட்சி படமாக்கப்பட்டது என பதிவு செய்திருக்கிறார் நடிகை சினேகா.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam