பிரபல கவர்ச்சி நடிகை சோனா நடிகர் அஜீத் நடிப்பில் வெளியான பூவெல்லாம் உன் வாசம் என்ற திரைப் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அதன்பிறகு தெலுங்கு தமிழ் மலையாளம் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்த இவர் கடந்த 2008ஆம் ஆண்டு வெளியான பத்து பத்து என்ற திரைப்படத்தில் கவர்ச்சி நடிகையாக அவதாரம் எடுத்தார்.
அதன்பிறகு பல்வேறு படங்களில் கவர்ச்சியான கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார். தற்போது சீரியலில் நடித்து வரும் இவர் ஒரு பேட்டியில் சில சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
கவர்ச்சியா நடிக்கணுமா..?
அதில் அவர் கூறியதாவது, தற்போதும் எனக்கு பட வாய்ப்புகள் வந்து கொண்டு தான் இருக்கின்றது. ஆனால் தொடர்ந்து கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டுமா என்று எனக்குள் எழுந்த கேள்வியால் கிட்டத்தட்ட 12 படங்களை நிராகரித்துள்ளேன்.
ஒரு நிம்மதியான சலசலப்பு இல்லாத ஒரு நிலையை அடைய வேண்டும் என்ற நோக்கில் நான் பயணித்துக் கொண்டிருக்கின்றேன். எனக்கும் சாதாரணப் பெண்களைப் போல வாழ வேண்டும் என்ற ஆசை வந்துள்ளது.
வெறுக்க தொடங்கி விட்டேன்
சினிமா.. பணம்.. புகழ்.. இவற்றையெல்லாம் ஒரு கட்டத்தில் நான் வெறுக்க தொடங்கி விட்டேன். சாதாரண பெண்கள் போல மக்களோடு மக்களாக வாழவேண்டும் என்ற ஆசை எனக்குள் எழுந்துள்ளது. பணத்திற்காக எதற்காக நான் போட வேண்டும் என்ற கேள்வி என் முன் வந்து கொண்டே இருந்தது.
பணத்தால் எல்லாவற்றையும் வாங்கி விட முடியுமா..? என்ற கேள்வியும் எனக்குள் எழுந்தது. இப்பொழுது நான் உணர்ந்துள்ளேன். முன்பு போல் இல்லாமல் தற்பொழுது ஒரு முதிர்ந்த மனநிலையில் இருக்கின்றேன். இது எனக்கு மிகவும் பிடித்துள்ளது.
குடிப்பழக்கம் இருந்தது..
ஒரு சினிமா நடிகையாக பரபரப்பான வாழ்க்கை சூழலில் வாழ்ந்து எனக்கு போர் அடித்து விட்டது. தற்போது நிம்மதியான வாழ்வைத் தேடி நான் நகர்ந்து கொண்டு இருக்கின்றேன்.
இப்பொழுது நான் குடிப்பழக்கத்தை முற்றிலுமாக நிறுத்திவிட்டு சினிமாவில் கவர்ச்சியாக நடிப்பதாக வேண்டி குடிப்பழக்கத்திற்கு சிலகாலம் அடிமையாக இருந்தேன்.
தற்போது அதிலிருந்து முழுமையாக மீண்டு சாதாரணமான அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றேன். இதுதான் எனக்கு அமைதியானதாகவும் ஆத்மார்த்தமானதாகம் இருக்கின்றது. இது எனக்குப் பிடித்திருக்கின்றது.
வயிற்றை கழுவ பணம் இருந்தால் போதும்ங்க..
எனக்கு என்னுடைய வாழ்க்கையை நடத்துவதற்கும் வயிற்று பசியை போக்கவும் தேவையான பணம் இருந்தால் போதும்ங்க.. ஆடம்பரமாக வாழ எனக்கு ஆசை கிடையாது.
எனவே என்னுடைய வாழ்க்கையை ஆதாரத்திற்காக கண்ணியமானகதாபாத்திரங்களில் நடிக்க தயாராக இருக்கின்றேன். அப்படி ஏதாவது வாய்ப்பு இருந்தால் நிச்சயம் படங்களில் நடிப்பேன்.
தற்போதைக்கு சீரியலில் நடித்து வருகிறேன். சிறிய கதாப்பாத்திரமாக இருந்தாலும் ரசிகர்களால் கவனிக்கப்படக்கூடிய கதாபாத்திரமாக இல்லை என்றாலும், முகம் சுளிக்கும் அளவுக்கு இருக்கக்கூடாது என்ற மனநிலையில் நான் இப்போது இருக்கின்றேன் என்று கூறியுள்ளார் நடிகை சோனா.